கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 40

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 40

1.   மாமூல் வாழ்க்கை பாதிச்சிருச்சுன்னு சோகமா சொல்லிட்டுப் போறாரே இன்ஸ்பெக்டர்  ஊருல ஏதாவது கலவரமா?
நீங்க வேற…  வழக்கமா கலெக்‌ஷன் ஆகிற மாமூல் ரொம்பவும் குறைஞ்சு போயிருச்சுன்றதைத்தான் அப்படிச் சொல்றார்!

2.    அந்த கிளினிக்ல மருந்துக்குக் கூட ஒரு நர்ஸும் கிடையாது!
  ஓ! அதனாலதான் ஈ ஓட்டிக்கிட்டு இருக்காரா டாக்டர்!

3.    இந்த போன்ல எல்லா விதமான “ஆஃப்ஸும் இருக்கு! குறைஞ்ச விலையிலே கிடைக்குது!
   அப்ப! வேற ஆப்பே வேணாம்! இதுவே போதும்!


4.    மன்னா! உங்கள் வாளுக்கு வேலை வந்திருக்கிறது!
  என்ன மந்திரியாரே நாட்டில் போர் வந்துவிட்டதா?
இல்லை இல்லை! மகாராணியார் வெங்காயம் நறுக்க கேட்கிறார் என்று சொன்னேன்.

5.    இந்த பையனோட அப்பா கண்டிப்பா கொத்தனாராத்தான் இருக்கணும்னு எப்படி சொல்றீங்க!
  பேப்பர்ல சுவர் வைச்சு எழுதறானே!

6.   தலைவரே நம்ம கட்சியிலே உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு!
கண்டுபிடிக்கச் சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் வா!


7.   தலைவர் ஏடாகூடமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டாரா எப்படி?
காசிக்கு தீர்த்த யாத்திரை போறவங்க வசதிக்கு அரசு இலவசமா ‘சரக்கு” சப்ளை பண்ணணும் சொல்லி அறிக்கை விட்டிருக்காரு!

8.   எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் நார்மலா இருக்கே நீங்க ஏன் அழறீங்க டாக்டர்?
  ஒரு நல்ல பேஷண்ட்டுக்கு  டிரிட்மெண்ட் எடுக்க முடியலையேங்கிற ஆதங்கத்துலதான்!


9.   நீ சரக்கடிக்கிறதுக்கு காரணம் டாக்டர்தானா? எப்படிச் சொல்றே?
   அவர் தானே தண்ணியை காய்ச்சி குடிக்கணும்னு சொன்னாரு!

10.  அவருக்கு தலைக்கனம் அதிகம்னு இனிமே யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது…!
   எப்படிச் சொல்றே?
எல்லோரும் ஹெல்மெட்டோட போறாங்களே!

11.  தலைவர் ஏன் கட்சிக் கொள்கைகளை கல்வெட்டில் பொறிக்கணும்னு சொல்றாரு!
  மக்கள் கட்சியோட கொள்கைகளை குறைவா எடை போட்டுறக் கூடாது இல்லே! அதுக்குத்தான்!
12.  போயும் போயும் ஒரு முட்டாளை ஏம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டே?
  ஏண்டா இப்படி கேக்கறே?
 வாத்தியார் என்னை முட்டாப்பய மவனேன்னு திட்டிக்கிட்டே இருக்காரேம்மா!

13. அந்த சாமியாரை எதுக்கு கைது பண்ணிட்டு போறாங்க!
திவ்ய தர்சணம் காட்டறேன்னு சொல்லி காம்பயர் டி.டியை காட்டிக்கிட்டு இருந்தாராம்!

14.   உங்க வீட்டுல மிக்சி ஓவரா சத்தம் போடுதே கவனிக்க கூடாதா?
  அந்த சத்தத்தை நிறுத்திட்டா அப்புறம் வேற சத்தம் அதிகமா கேட்க ஆரம்பிச்சிருமே!

15. மன்னர் சேடிப்பெண்களுடன் பந்துவிளையாடுவதை ராணியார் பார்த்துவிட்டார்!
  அப்புறம்?!
அப்புறமென்ன மன்னருக்கு நிறைய் உள்காயம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி!

16.  மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாக இருக்கிறார்?
பேஸ்புக்கில் யாரோ எழுதியதை எல்லாம் காப்பி அடித்து மன்னரிடம் பரிசு வாங்குவது தெரிந்துவிட்டது!

17.  சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம்  பையன் காத்துல கரைக்கிறான்னு சொல்றியே எப்படி?
  பொண்ணுங்களுக்கு ஓசியிலே டாப் அப் பண்ணிக்கொடுக்கிறானே!

18. செயினை அறுத்துட்டு ஓடினவன் திரும்ப வந்து அடிச்சிட்டு போனானா ஏன்?
   நான் போட்டிருந்தது கவரிங்க் செயின்! இதுக்கா என்னை இவ்ளோ கஷ்டப்பட வெச்சேன்னு  அடிச்சிட்டு போறான்!

19.  என் மனைவி நினைச்சா வீடே அலறும்…!
  அவ்வளோ பயங்கரமானவங்களா!
 சேச்சே! அவ கையில தான் டீவி ரிமோட் இருக்குன்னு சொல்ல வந்தேன்!

20.  மன்னர் மீசையை முறுக்கிட்டு போருக்குக் கிளம்பினாரே என்ன ஆச்சு?
  எதிரி மன்னன் மீசையை நறுக்கிவிட்டு அனுப்பிவிட்டானாம்!


21. ஓடற டிரெய்ன் நிக்கணுங்கிறதுக்காகத்தான் இந்தம்மா செயினை பிடிச்சி இழுத்தியா? என்னப்பா சொல்றே!
ஆமாங்க சார்! அவசரம்னா செயினை பிடிச்சி இழுத்தா ட்ரெயின் நிக்கும்னு சொல்லி இருக்காங்களே!

22. தலைவர் எதுக்கு பத்திரிக்கைகளுக்கு அறிக்கை விடறபோது கூடவே கொஞ்சம் மிக்சர் பாக்கெட் சேர்த்து கொடுக்கச் சொல்றாரு?
   தலைவரோட அறிக்கையிலே காரமே இல்லைன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!

23. என்னோட புகழ்வெளிச்சம் எதிர்கட்சி காரர்களின் கண்ணை மறைக்கிறதுன்னு தலைவர் சொல்றாரே!
   பின்னே சொல்லமாட்டாரா? நாற்பது ரூபா டியுப் லைட்டை இலவசமா கொடுத்து அது முழுக்க இவர் பேரை பொறிச்சிக்கிட்டா மறைக்காம என்ன செய்யும்?

24. கேஸ் கட்டு இல்லேன்னு அந்த வக்கீலை வீட்டுக்குள்ளே சேர்க்க மாட்டேன்னுட்டாங்க!
    அப்புறம்?
   அப்புறம் என்ன புதுசா ஒரு குக்கர் கேஸ்கட்டு வாங்கிட்டு வந்தப்புறம் உள்ளே விட்டுட்டாங்க!

25. இந்த பையன் அரசியல்வாதி வீட்டு பையன்னு எப்படி சொல்றீங்க சார்!
   பெஞ்ச் விட்டு பெஞ்சு தாவிக்கிட்டே இருக்கானே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அனைத்தும் அருமை... ரசித்து சிரித்தேன்...

    ReplyDelete
  2. சிரிப்பு வெடிகள்......நன்றி

    ReplyDelete
  3. நகைச்சுவை அனைத்தும் அருமை.

    தங்களுடைய தேடலுக்கான விடை சரியா எனப் பார்க்க அண்ணே! கொஞ்சம் சீ்க்கிரம் போங்க! இப்பதிவின் பின்னூட்டம் காண அழைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜி சார்! நீங்கள் தேடிக்கொடுத்த பாடல்தான் நான் தேடியதும்! மிக்க நன்றி! என்னுடைய விடுகவிக்கும் விடை சொல்லலாமே! நான் சொல்லுவதை விட நீங்கள் சொல்லும் விளக்கம் சிறப்பாக இருக்கிறது. கொஞ்சம் தித்திக்கும் தமிழ் பகுதிக்கு நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்!

      Delete
  4. வணக்கம்,
    அனைத்தும் அருமை,
    தாங்கள் கேட்ட பாடல் பற்றி நான் இடும் முன் என் ஆசான் திரு ஊமைக்கனவுகள் முந்திவிட்டார், பாருங்கள்,
    விளக்கம் தாங்கள் அறிந்தது எனின் நான் தரலாம் எனின் செய்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! விளக்கம் அறிந்தது என்றாலும் பேராசிரியையின் உரையைக் கேட்க விழைவாகவே உள்ளேன்! தங்கள் தளத்தில் தனிப்பதிவாகவே தந்துவிடலாமே! நன்றி!

      Delete
  5. பாஸ் எல்லாம் செம காமெடி பாஸ் ...

    ReplyDelete
  6. \\பேப்பர்ல சுவர் வைச்சு எழுதறானே!\\ பேப்பர்ல சுவர் வைக்கிறதா? புரியலையே?
    ஜோக்குகள் சுவையோ சுவை...........நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹாஹா! ஆசிரியர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்! உதாரணமாக ஆசிரியர் என்று பத்து தடவை எழுதச்சொன்னால் மாணவன் ஆ என்ற எழுத்தை ஒன்றன் பின் ஒன்றாக பத்து தடவை அடுக்குவான். பின்னர் சி, அப்புறம் ரி, இப்படி எழுதுவதைத்தான் சுவர் வைச்சு எழுதறது என்போம்! கொஞ்ச நாள் வாத்தியாரா இருந்ததால் இந்த ஜோக் தோணிச்சு! நன்றி!

      Delete
  7. வணக்கம்
    ஐயா
    அனைத்தும் அருமையாக உள்ளது டித்து இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அனைத்துமே அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2