டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!
இராமேஸ்வரத்தில் உதித்த இந்தியாவின் விடிவெள்ளி!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவன்!
மாணவர்களுக்கோர் வழிகாட்டி!
மாநிலம் மட்டுமல்ல! “மா” நிலம் விரும்பும் மனிதநேயர்!
கனவை விதைத்து நினைவாய் ஆக்க சொன்னவர்!
கவிதை உள்ளம் கொண்டவர்!
மாபெரும் அறிவியல் அறிஞராய் வேர்விட்டு
மக்களின் தலைவராய் குடிபுகுந்தார்!
எளிமை நேர்மை உறுதியுடனே
எல்லோர் மனதிலும்
இடம்பிடித்தார்
தள்ளா வயதிலும்
அவர் உழைத்தார்!
வல்லரசு கனவினை
நனவாக்க
வாலிபப் படையொன்று
உருவாக்க
கல்விக் கூடங்களை
அவர் தேர்ந்தெடுத்தார்!
பள்ளிப் பிள்ளைகளோடு
கலந்துரையாடி
நாளைய பாரதம் உருவாக்கினார்!
கற்றார் அவர் தம்
கருத்துக்கள்
காலனைக் கூட கவர்ந்ததுவே!
ஐயோ! அவனுமே
கலாமின் உயிர்தனை
கவர்ந்துவிட்டான்!
கவர்ந்தது உயிரை
மட்டும்தான்!
கலாமின் சிந்தனை
விதைகள் விருட்சங்கள் ஆகிடுமே!
கனவு மெய்ப்பட
செய்வது நமது கடமையாகுமே!
மறைந்த மக்களின்
ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்! அவர் கனவை நினைவாக்க
உறுதி ஏற்போம்!
மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்!
ReplyDeleteசிறந்ததோர் அஞ்சலி!
நட்புடன்,
புதுவை வேலு
மறைந்த மாமனிதருக்கு அஞ்சலி
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html
நன்றி
சாமானியன்
உங்களது அஞ்சலியில் நானும் கலந்துகொள்கிறேன். முன்னுதாரண மனிதர் இன்று நம்மிடையே இல்லை.
ReplyDeleteஆழ்ந்த அஞ்சலிகள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteகலாமின் சிந்தனை விதைகள் விருட்சங்கள் ஆகட்டும்
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்! அவர் கனவை நினைவாக்க உறுதி ஏற்போம்!
ReplyDeleteஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html
வணக்கம் தளீர்,
ReplyDeleteஅவரின் கனவை நனவாக்க உறுதி ஏற்போம்,,,,,,,
அது தான் நாம் செய்யும் அஞ்சலி,
பகிர்வுக்கு நன்றி
இறுதிவரிகளை மறுமொழிகின்றோம்....விருட்சங்கள் பெருகட்டும்....
ReplyDelete