கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 41

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 41


1.   கல்யாண நாளுக்கு நகை வாங்கி கொடுத்ததுக்கு உன் மனைவி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாளா? ஏன்?
நான் வேலைக்காரியின் கல்யாண நாளுக்கு இல்ல வாங்கி கொடுத்தேன்!

2.   டாக்டர் இன்னிக்கு எல்லாமே அப்நார்மலா இருக்குது!
  என்ன சொல்றே?
நீங்க ஆபரேசன் பண்ணிண பேஷண்டுக்கு நினைவு திரும்பிருச்சு!

3.   நெத்தியிலே எதுக்கு பிளாஸ்திரி ஒட்டியிருக்கே?
மனைவியோட புடவையை இஸ்திரி பண்றப்ப நடந்த தப்புக்குத்தான் இந்த பிளாஸ்திரி ஒட்ட வேண்டியதா போச்சு!

4.   பையனை ப்ரி.கே.ஜி யிலே சேத்தியே எப்படி இருக்கான்?
நிறைய கே.ஜி புத்தகங்களை சுமந்துக்கிட்டுத் திரியறான்!


5.   புலவரே நீர் பெரிதாக என்னை பற்றி அப்படி ஏதும் பாடிக்கிழிக்கவில்லையே?
மன்னரே நீங்கள் பெரிய செயல்கள் எதுவும் செய்து கிழிக்கவில்லையே!

6.   ஓட்டல்ல மாவட்டறவர் இதுக்கு முன்னாடி பட்டிமன்ற பேச்சாளரா இருந்தவராம்!
  ஒஹோ! அதான் அரைச்ச மாவையே அரைச்சிக்கிட்டு இருக்காரா?

7.   தலைவர் ஏடாகூடமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டாரா எப்படி?
தமிழக அரசு  படங்களுக்கு வரி விலக்கு அளிக்காவிட்டால் கூட பரவாயில்லை பத்திவிலக்கு  அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளாரே!

8.    மாப்பிள்ளை ரொம்ப கறார் பேர்வழியா இருக்கலாம் அதுக்காக பொண்ணை எடை போட்டு புரொபைல்ல கொடுத்திருக்கிற எடையோட இருந்தாத்தான் தாலிக்கட்டுவேன்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

9.   நம்ம தலைவர் அப்பாவியா இருக்காரு!
  எப்படிச் சொல்றே?
எல்லாக் கழகத்துக்கும் போய் வந்தாச்சு! போக்குவரத்துக் கழகத்துல சேர்த்துப்பாங்களான்னு கேக்கிறாரு!


10.  நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது மன்னா!
  உடனே பத்தாயிரம் சீப்புக்களை தயாரித்து தலைவாரிவிடுங்கள் அமைச்சரே!

11. சாதாரண சளிக்காய்ச்சல்னு சொல்றீங்க ஆனா எதுக்கு இவ்ளோ மருந்து எழுதிக்கொடுக்கறீங்க டாக்டர்?
மெடிக்கல் ஸ்டோர் காரன் ரெண்டுநாளா மருந்து விற்கலைன்னு என் மண்டையை காய்ச்சறானே!

12. அந்த பையனோட அப்பா கிண்டல் பேர்வழியா இருக்கார்!
  எப்படி?
உங்க பையன் அவனோட இடத்துல உட்காராம பக்கத்து பையனோட சீட்லதான் உட்காருவேன்னு அடம்பிடிக்கிறான்னு சொன்னா ஜாதகப்படி அவனுக்கு சொந்த இடம் அமையாது மேடம்னு சொல்றாரு!

13. அவர் நிறைய லட்சியங்களோட அரசியலுக்கு வந்தார்!
  அப்புறம் ?
நிறைய கோடிகளை சம்பாதித்துக் கொண்டார்!

14. உன் லவ்வருக்கு நீ அதிகமா பர்மிஷன் கொடுத்தது தப்பா போச்சா ஏன்?
இப்ப டாக்டர் கிட்ட  அட்மிஷன் கேட்க வேண்டிய நிலையா போயிருச்சு!

15.  காஸ்ட்யூம் செலவை குறைச்சதனால படத்தோட பட்ஜெட் எகிறிப் போயிருச்சா எப்படி?
ஹீரோயினோட சம்பளம் உயர்ந்து போச்சே!

16. ஏண்டா நான் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கேன் ஒருத்தனும் வாயைத் திறக்க மாட்டேங்கிறீங்களே!
நீங்கதானே சார் சொன்னீங்க பைத்தியக்காரத்தனமான கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாதுன்னு!

17.  திருடனுங்க பயம் ஜாஸ்தியா இருக்குன்னு ஒரு நாய்க்குட்டியை வாங்கி கட்டினியே என்ன ஆச்சு?
அந்த நாய்க்குட்டியையே யாரோ திருடிட்டு போயிட்டாங்க!

18. நெட் செண்டர்ல வேலை பாக்கிற பொண்ணை உன் பையன் லவ் பண்றான்னு சொன்னியே என்ன ஆச்சு!
நிறைய ஜி.பி செலவழிச்சதுதான் மிச்சம் டேட்டா சேவ் ஆகலை!

19. ஹெல்மெட் போட்டுட்டு போனவங்களை போலிஸ் புடிச்சுடுத்தா ஏன்?
அவங்க ரெண்டு பேரும் திருட போயிருக்காங்க!

20. மன்னர் உடைவாளை கையில் எடுக்கவே மாட்டேன் என்கிறாறே என்ன விஷயம்?
அது உடைந்து போன வாளாகி ரொம்ப நாள் ஆகிவிட்டதாம்!

21.  உன் கணவர் உன்னை மன நல டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போகனும்னு சொல்றாரா ஏன்?
நான் அவங்க அம்மா கூட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்ததை பார்த்துட்டார்!


22. மன்னர் எதற்கு திடீரென்று ஆங்கிலம் கற்றுக்கொள்கின்றார்?
பேஸ்புக்கில் வெளிநாட்டு ராணியோடு கடலை போடத்தான்!

23. உன் சமையல்ல உப்பு காரம் சரியா இல்லேன்னு நாலு பேரு முன்னாடி மனைவியை ஓங்கிக் கேட்டது தப்பா போயிருச்சு!
என்ன ஆச்சு?
நாலு பேர் முன்னாடி என் கன்னம் வீங்கிப் போயிருச்சு!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. பத்தாயிரம் சீப்புக்களை... உடைந்து போன வாளாகி... படீர் படீர் ஹா... ஹா...

  ReplyDelete
 2. வணக்கம் தளீர்,
  நல்ல மன்னர், நல்ல புலவர்
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
 3. ரசித்தேன்
  சிரித்தேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 4. அனைத்தையும் ரசித்தேன்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 5. //புலவரே நீர் பெரிதாக என்னை பற்றி அப்படி ஏதும் பாடிக்கிழிக்கவில்லையே?
  மன்னரே நீங்கள் பெரிய செயல்கள் எதுவும் செய்து கிழிக்கவில்லையே!//
  இருவரும் பொற்கிழி பற்றி மறைமுகமாகப் பேசுகிறார்களோ!
  ரசித்தேன்

  ReplyDelete
 6. அஹஹஹஹ அனைத்தும் ரசனையாக உள்ளன...21 மிகவும் பிடித்தது....

  ReplyDelete
 7. அனைத்தும் அருமை. போக்குவரத்துக்கழக நகைச்சுவையினை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
 8. மனம் விட்டு சிரிக்க மனம் நோகா வரிகள்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!