நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 30

நொடிக்கதைகள்! பகுதி 30

1.விதை:
  உங்க “செமன்”ல போதுமான உயிரணுக்கள் இல்லை! டெஸ்ட் ட்யுப் பேபிதான் முயற்சிப்பண்ணனும் என்று டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் .விதையில்லா பழங்களை இறக்குமதி செய்யும் வியாபாரி.

2. ஏமாற்றம்:
    இடைத்தேர்தல் ரத்தாகாமல் நல்லபடியாக நடந்து முடிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர் தொகுதி வாசிகள்!

3. சாட்டிங்க்!
   இப்ப பேசறதுக்கு நேரம் இல்லை! உன் வாட்சப் நம்பர் சொல்லு! சாட்டிங்க்ல வரேன்! என்று அவசர அவசரமாக நம்பரை ஸ்டோர் செய்து கொண்டு நகர்ந்தான் சதிஷ்!

4.சுமை!
   மலைக்கோயிலில் சுமக்க முடியாமல் சுமந்து வந்த சுமையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டனர் டோலி சேவகர்கள்!

5. வரன்!
 “வயசு கூடிக்கிட்டே போவுது! இன்னும் கல்யாணம் குதிர்ந்த பாடில்லை! வந்த வரனெல்லாம் தட்டிக்கிட்டே போவுது!  தலையிலும் லேசா நரை விழ ஆரம்பிச்சிருச்சு! என் மகனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணை தேடிக்கொடு தெய்வமே! கோயிலில் புலம்பிக்கொண்டிருந்தாள் அந்த தாய்.

6. ஓட்டு!
    ”மறக்காம நம்ம சின்னத்துக்கு ஓட்டு போட்டுடுங்க! உங்களுக்கு காலம் முழுவதும் சேவை செய்வேன்” என்று ஓட்டுக்கேட்ட வேட்பாளரிடம்  “அதெல்லாம் இருக்கட்டும்! துட்டு எவ்வளோ தருவே? என்றான் வாக்காளன்.

7. மறதி!
       மக்களோட மறதிதான் நமக்கு பெரிய மூலதனம்! அவசர யுகத்தில் நாம செய்யற தப்புக்களை சீக்கிரமே மறந்துடுவாங்க என்று சொல்லிய தலைவர் தேர்தல் முடிவுகளை பார்த்து அதிர்ந்து போனார். மக்கள் அவரது சின்னத்தை மறந்துவிட்டிருந்தனர்.

8. தாய்ப்பால்!
  நாள் முழுவதும் தாய்ப்பால்தான் குழந்தைக்கு நல்லது என்று கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்த சுகாதார ஊழியை தன் குழந்தைக்கு ஊட்ட பாலில்லாமல் புட்டிப்பால் புகட்டிக்கொண்டிருந்தார்.

9.யூ ட்யுப்!
    நீங்க தைரியமா ஷாப்பிங் போயிட்டு வாங்க! நீங்க திரும்பி வர வைக்கும் நான் வீட்டுல பத்திரமா யூ ட்யுப்ல வீடியோஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன் சமர்த்தா என்றது குழந்தை!

10. பேய்ப்படம்!
      அப்பா! டீவியிலே இன்னிக்கு பேய்ப்படம் போடறான்! காமெடி காமெடியா இருக்கும் நீங்களும் என்னோட சேர்ந்து பார்க்கறீங்களா என்றாள் மகள்.

 11. கந்துவட்டி!
    ”கந்து வட்டி கொடுமையால பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்ம ஹீரோ உதவறான் சார்! இதான் படத்தோட ஒன்லைன்! “என்று டைரக்டர் சொன்னதும் ட்ரெண்டியான சப்ஜெக்ட்தான் சேட்டுகிட்ட வட்டிக்கு பைனான்ஸ் புரட்டிடலாம் என்றார் தயாரிப்பாளர்.

12.  விடுமுறை!
      பள்ளிக்கு விடுமுறை விட்டதும் “ஏந்தான் லீவு விட்டுத் தொலைக்கிறாங்களோ? இதுங்களை பத்து நாள் மேய்க்கிறதுக்குள்ளே எனக்கு தாவு தீர்ந்திரும்! என்று அலுத்துக்கொண்டாள் பெற்றவள்.

13. வைஃபை!
     வீட்டு வேலைக்கு சொல்லியிருந்தீங்களே! வந்திருக்கேன்! உங்கவீட்டு வைஃபை பாஸ்வேர்டு என்ன? என்றாள் அந்த மாடர்ன் வேலைக்காரி.




Comments

  1. அனைத்தும் இரசிக்க வைத்தன...

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  3. எல்லாம் அருமை. சிறப்பு. தொடர்வோம்.

    மேகராகம்
    https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo
    பதிவர் : கி.பாலாஜி
    #sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2