தளிர் ஹைக்கூ கவிதைகள்!
மவுனப்பொழுது!
முள்ளாய் குத்துகிறது!
கடிகாரத்தின் ஓசை!
எண்ணிக்கை குறைகையில்
ஏறுகிறது மகிழ்ச்சி!
மலைக்கோயில்!
இருண்ட பொழுது!
அழகாக்கின!
நட்சத்திரங்கள்!
ஆடை கட்டியதும்
ரசிக்கப்படவில்லை!
தேநீர்!
வீழ்ந்ததும்
உயிர்த்தெழுந்தது பூமி!
மழைத்துளி!
மேயும் ஆடுகள்!
பசுமை இழந்தது!
பூமி!
கோயில் கோபுரம்!
கூச்சலிடும் புறாக்கள்!
வெடிச்சத்தம்
உறுத்திக்கொண்டே இருந்தது
கழற்றும்வரை கைவிரல் மோதிரம்!
திருடனுக்கு!
புதிய ஊர்
நட்பு பாராட்டியது!
தேநீர்க்கடை!
விளக்கின் அடியில் ஒளிந்தன!
வெளிச்சம் தேடிய
பூச்சிகள்!
கிழித்து எறிந்தார்கள்!
வருத்தப்படவில்லை!
நாட்காட்டி!
நள்ளிரவில் பிரசவம்!
நாடெங்கும் கொண்டாட்டம்!
புத்தாண்டு!
பனி விலகியதும்
தெளிவானது
பூமி!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை சுரேஷ்...
ReplyDeleteரசித்தேன். வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteபுதிய ஊர்
ReplyDeleteநட்பு பாராட்டியது!
தேநீர்க்கடை!
என்ற கவிதை உலகெங்கும் காணும் உண்மையைக் கூறும்.
ReplyDeleteஉறுத்திக்கொண்டே இருந்தது
கழற்றும்வரை கைவிரல் மோதிரம்!
திருடனுக்கு!
அருமை...அருமை.
வீழ்ந்ததும்
ReplyDeleteஉயிர்த்தெழுந்தது பூமி!
மழைத்துளி!
சொற்பொருட்சுவை