நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 31

நொடிக்கதைகள்!

க்வாட்டர்!

மதுக்கடைகள் மூடச் சொல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பேசியபடி கூலியுடன் வழங்கப்பட்டது குவார்ட்டர் பாட்டில்


வாட்ஸாப்!

கல்யாணத்தில் எதிர்பாராமல் சந்தித்த உறவினரிடம்,  அண்ணே! உங்க வாட்சாப் நம்பர் தாங்க! நைட் சாட்  பண்ணுவோம்! என்றான் ரமேஷ்!

நேரம்
புது கடிகாரத்தை  விற்கும் போது மொபைலை பார்த்து டைம் செட் செய்தார் கடை ஊழியர்

விலாசம்

முகவரி கேட்டு தேடி அலைந்தார் போஸ்ட் மேன் புதிய ஊரில்

துக்கம்

பங்காளி இறந்ததாக போனில் தகவல் வந்ததும் "யாரு சொல்ல சொன்னாங்க இவனை 15 நாள் தீட்டு காக்கணும் " என்று அலுத்துக்கொண்டார் ராமசாமி

தாகம்!

  தண்ணீர் கஷ்டத்தில் ஊரே தவித்துக்கொண்டிருக்கையில் திருமண விருந்தில்
வீணடிக்கப்பட்டன குடிநீர் பாட்டில்கள்!

பல்ஸ்!

ரசிகர்களில் பல்ஸ் பிடிக்க நினைத்த நடிகர் அரசியல்வாதிகளின் பல்ஸையும்
பிடித்து விட்டார்

அட்மிஷன்!

செயற்கை கருத்தரிப்புக்கு அட்மிசன் வாங்கினாள் இயற்கை வைத்தியரின் மனைவி.

 ஒரிஜினல்!

    ஒரிஜினல் “செக்கு எண்ணெய்”  என்று லேபிள்  திருட்டுத்தனமாய்   தயாரிக்கப்பட்டது  போலி எண்ணெய் கம்பெனியில்!

பீடி!

   இந்த காலத்து பசங்க “சிகெரெட் “ குடிச்சே சீரழிஞ்சு போகுது! என்று அலுத்துக்கொண்ட பெரிசு  இந்தாப்பா ஒரு கட்டு பீடி கொடு! என்றார் பெட்டிக்கடையில்!

வலி!

    துப்பாக்கியை  நீட்டி மிரட்டியதும்  “ வலிக்காம சுடுங்க!”  என்றது குழந்தை!


வக்கிரம்!

     முக்கிய பிரமுகர் இறந்ததும் பிறப்பெடுத்து பிரவாகித்தன வக்கிரங்கள்!

பிக்ஸிங்!

அதிக விலைக்கு வாங்கப்பட்ட ப்ளேயர் ஆடவில்லை! லாபம் பேசியபடி வந்தது
பிக்ஸிங்கில் அணிக்கு.

அரசியல்!

ரசிகர்கள் தன்னை மறந்துபோகக் கூடாது என்று நினைத்த பழம்பெறும் நடிகர்
அரசியலுக்கு வர ஆலோசனை செய்வதாக அறிவித்தார்.

இணைப்பு!

இரு அணிகளும் இணைய வேண்டும் என்று காராசாரமாக விவாதித்தவர் அண்ணன்
வரவும் முகத்தை திருப்பிக் கொண்டார் டீக்கடையில்.


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சூழலுக்கு தகுந்த நச் கதைகள் மிகவும் இரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  2. நல்ல ரசனையோடு கூடிய நகைச்சுவைகள்.

    ReplyDelete
  3. அனைத்து கதைகள் நன்று பாராட்டுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2