கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 96

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 96


1.   தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே!
ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டாராம்!

2.   அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?
  சாப்பிடற எதுவுமே உடம்புலே ஒட்ட மாட்டேங்குதுன்னு சொன்னா கொஞ்சம் பெவிகால் தடவிட்டு சாப்பிட்டுப்பாருங்களேன்னு சொல்றாரே!

3.   நர்ஸா வேலைப்பார்க்கிற பொண்ணை உன் பையன் கட்டிக்க மாட்டேன்னு சொல்றானா ஏன்?
“சிஸ்டரை” கட்டிக்க முடியாதாம்!

4.   இது நம்ம தலைவர் சிலை மாதிரியே தெரியலையே! முகமே வேற மாதிரி இருக்கே!
   வருங்காலத்துலே சிலை உடைக்கிறவங்க கொஞ்சம் குழம்பிப்போவட்டும்தான் இந்த மாதிரி அமைச்சிருக்கோம்!

5.   பொண்ணுகிட்டே நிறைய பேரு “பல்லைக் காட்டிகிட்டே” இருப்பாங்களா? என்ன சொல்றீங்க தரகரே?
  ஆமாங்க! பொண்ணு “டெண்ட்டிஸ்ட்டா” இருக்குது!

6.    தலைவர் சிலையை சுத்தி இவ்வளோ இரும்பு வேலி அமைக்கலாம்னா ஏன் வேணாங்கிறார்?
  சிலையும் ஜெயில்ல” இருக்கிறமாதிரி ஒரு ஃபீலிங் வந்துருமாம்!


7.   ரோந்து பணியில் இருப்பவர்கள் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளது மன்னா!
    என்ன புகார்!
குதிரையில் செல்பவர்களை தலைக்கவசம் போடவில்லை என்று மிரட்டி கையூட்டு வாங்குகிறார்களாம்!

8.   விருந்தும் மருந்தும் மூணு நாள்தான் மாப்பிள்ளே!
  உங்கவீட்டு விருந்து சாப்பிட்டு வயிறு புண்ணாகி போச்சு! மூணு நாளுக்கு இருந்து மருந்து சாப்பிட்டு போறேன் மாமா!

9.   நான் சமைக்கிற சமையல்ல குத்தம் குறை எதுவும் சொல்லவே மாட்டா என் பெண்டாட்டி!
  பரவாயில்லையே!
நீ வேற சமையல் சரியில்லைன்னா மிச்சம் மீதி வைக்காம நானே சாப்பிட்டு முடிக்கணும்!

10. தலைவர் “ரெட்டை வேசம்” போடறாராமே!
ஆமாம்! புதுசா அவர் நடிக்கிற படத்துல அவருக்கு ரெட்டை வேசமாம்!


11.  நம்ம தலைவர் ரொம்ப அப்பாவி!
  எப்படி சொல்றே?
போர்ட் நம்பர் வாங்கணும் ஃபோர்ட் ஆபிஸ் வந்திருக்காரே!

12.  ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்கன்னு உங்ககிட்டே கேட்கறாரே நீங்க என்ன ஜோஸ்யரா?
  நான் ஜோஸ்யர் இல்லே அவர் அந்த படத்தோட டைரக்டர்!

13. பையன் ரொம்ப விசுவாசமா இருப்பான்னு சொல்லியும் அவர் வேலைக்கொடுக்க மாட்டேன்னுட்டாரா ஏன்?
அவர் “விஜய்” ரசிகராம்!

14. அரண்மனைப் புலவர் மீது மன்னர் ஏகக் கடுப்பாக இருக்கிறாராமே!
  போருக்கு செல்லும் மன்னரை  “களிம்போடு வரவேற்க காத்திருக்கிறோம்! என்று சொல்லி வழியனுப்பி வைத்தாராம்!


15. எதிரி எல்லைகளை விரிவுபடுத்தப் போகிறானாம் மன்னா!
தொல்லை தராமல் தொலை தூரம் சென்றுவிடுவோமா மந்திரியாரே!

16. நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டு போயிருக்குன்னு எதிர்கட்சிக்காரங்க புகார் பண்றாங்க தலைவரே!
வீட்டுக்கு ஒரு ப்ரிட்ஜ் இலவசமா கொடுத்து எல்லோரோட வாயையும் அடைச்சிருவோமா!

17.  சட்டசபைக்குள்ள நுழைஞ்ச ஒருமணி நேரத்துலேயே தலைவர் வெளிநடப்பு பண்ணிட்டாரே ஏன்?
  அப்போ போனாத்தான் கேண்டீன்ல போண்டா சூடா இருக்குமாம்!

18. ஜோஸ்யக்காரன் பொண்ணை கட்டிக்கிட்டது தப்பா போயிருச்சா ஏன்?
எந்த தப்பு செஞ்சாலும் “பரிகாரமா” நிறைய செலவு பண்ண வேண்டியிருக்கே!


19. எதிர்கட்சிக் காரங்க “கத்தை கத்தையா” உங்க மேல ஊழல் புகார் சொன்னாங்களே என்ன ஆச்சு தலைவா!
   எல்லாம் “ காத்தோட காத்தா” பறந்து போயிருச்சு!

20. தலைவர் வாயைத் திறந்து ஒரு அறிக்கை விட்டா போதும்!
   அப்புறம்?
ஆயிரக்கணக்குல மீம்ஸ் குவிந்து பேஸ்புக்கே அல்லோகலப்படும்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!



Comments

  1. ரசித்தேன்
    சிரித்தேன் நண்பரே

    ReplyDelete
  2. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
  3. வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது

    சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்

    அது திறந்து கொள்கிறது ...

    சிரிப்பு கவிஞர் வைரமுத்து.

    ReplyDelete
  4. ரசித்தோம் சுரேஷ்...பரிகாரம் செம!!!

    கீதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2