இந்த வார தினமணி கவிதைமணியில் என் கவிதை!
இந்த வார தினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை. தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்திற்கு நன்றி!
கொஞ்சி விளையாடும் கோபம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 04th March 2018 02:51 PM | அ+அ அ- |
நெஞ்சத்தே ரோஷம் பொங்குகையில்
வஞ்சத்தை தீர்க்கவே
கொஞ்சி விளையாடுகின்றது கோபம்!
வஞ்சத்தை தீர்க்கவே
கொஞ்சி விளையாடுகின்றது கோபம்!
கேட்டது கிடைக்காமல் போகையில்
கிடைத்தது தொலைந்து போகையில்
வரவேண்டியது வராமல் போகையில்
வேண்டாதது விரும்பி வந்து சேர்கையில்
விரைந்தே வந்து
கொஞ்சி விளையாடுகிறது கோபம்!
கிடைத்தது தொலைந்து போகையில்
வரவேண்டியது வராமல் போகையில்
வேண்டாதது விரும்பி வந்து சேர்கையில்
விரைந்தே வந்து
கொஞ்சி விளையாடுகிறது கோபம்!
நேரத்தை தொலைத்து விடுகையில்
தூரத்தை மறந்து தொலைக்கையில்
பாரத்தை அதிகம் சுமக்கையில்
பேரத்தில் ஏமாந்து போகையில்
ஓரத்தில் வந்து ஒளிந்து
விளையாடுகிறது கோபம்!
தூரத்தை மறந்து தொலைக்கையில்
பாரத்தை அதிகம் சுமக்கையில்
பேரத்தில் ஏமாந்து போகையில்
ஓரத்தில் வந்து ஒளிந்து
விளையாடுகிறது கோபம்!
வயிற்று தீ பசியாய் பற்றி எரிகையில்
பயின்ற வித்தை மறந்து போகையில்
நாட்டையே சூறையாடும் ஆட்சி நடக்கையில்
ஓட்டையே விலைக்கு விற்கையில்
பயின்ற வித்தை மறந்து போகையில்
நாட்டையே சூறையாடும் ஆட்சி நடக்கையில்
ஓட்டையே விலைக்கு விற்கையில்
மீட்டெடுக்க ஒரு தலைவன் தோன்றாதிருக்கையில்
சாட்டையடியாய் துயரங்கள் துரத்துகையில்
துன்பத்தை விலக்க துணிவில்லாமல் போகையில்
இன்பத்தை ஓரு சாரார் மட்டும் துய்க்கையில்
உள்ளத்தே ஆக்ரோஷம் பொங்கி
அகத்தினிலே ரௌத்திரம் வெடித்து
கொஞ்சி விளையாடுகிறது கோபம்!
சாட்டையடியாய் துயரங்கள் துரத்துகையில்
துன்பத்தை விலக்க துணிவில்லாமல் போகையில்
இன்பத்தை ஓரு சாரார் மட்டும் துய்க்கையில்
உள்ளத்தே ஆக்ரோஷம் பொங்கி
அகத்தினிலே ரௌத்திரம் வெடித்து
கொஞ்சி விளையாடுகிறது கோபம்!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! நன்றி!
கவிதை ஸூப்பர்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
கவிதை அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteகவிதை நன்று. வாழ்த்துகள் சகோ
ReplyDeleteஅருமையான பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
வாழ்த்துகள், தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteBook Dinamani classified advertisements through Eumaxindia in Chennai and all over Tamilnadu at lowest advertisement rates.
ReplyDeleteChennai Dinamani Ads Booking Centre