இந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்!

இந்த வார பாக்யாவில் என்   ஏழு ஜோக்ஸ்!

வாரா வாரம் போடும் சுயபுராணம்தான்! இந்த வாரமும் என்னுடைய ஜோக்ஸ்கள் வழக்கம் போல பாக்யாவில் பிரசுரம் ஆகின. தமிழக எழுத்தாளர் வாட்சப்  குழு ஜான் ரவி குழுவில் தகவல் தெரிவித்து இருந்தார். அதற்கு முன்னரே செங்குன்றம் சென்று பாக்யாவை வாங்கி விட்டேன். இந்த முறை என்னுடைய ஜோக்ஸ்களுடன் குழு நண்பர் சீர்காழி ஆர் சீதாராமன் சார் ஜோக்ஸ் மூன்றும் வந்திருந்தது.

  யாரும் பதிவிடாததால் நானே எனக்கு தெரிந்த வரையில் செல்லில் படம் பிடித்து குழுவில் பகிர்ந்தேன். இப்போது உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன். இது என்ன வாராவாரம் இப்படி போட வேண்டுமா? என்று நினைப்பவர்களுக்காக. 
    வலைப்பூவில் பகிர்ந்து வைத்தால் ஓர் ஆவணமாக எதிர்காலத்தில் என் நினைவுகளுக்கு உதவும் என்று பகிர்ந்து கொள்கின்றேன். கல்கி தராசு பதில்களில் என் கேள்வி ஒன்றும் பிரசுரமானது. மற்றும் பொதிகைச்சாரல் இதழில் என் ஹைக்கூ ஒன்றும் இந்த வாரத்தில் பிரசுரம் ஆகி எனக்கு கூடுதல் மகிழ்ச்சியினை தந்தது.

   எனக்கு தொடர்ந்து ஆதரவினை தந்து வரும் பாக்யா குழுமத்தினருக்கும். தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினர்களுக்கும். வலைப்பூ நண்பர்களுக்கும் என் குடும்பத்தினர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

ஜோக்ஸ்கள் கீழே!















கல்கியில் எனது கேள்வி!



பொதிகைச்சாரலில் எனது  ஹைக்கூ!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வாழ்த்துகள் ஸ்வாமிகள்

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை ஆயிரம்தான் இருந்தாலும் செம

    ReplyDelete
  3. ஆவணப்படுத்தும் தங்களின் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள். அவ்வாறு ஆவணப்படுத்தும் நிலையில் முடிந்த வரை இதழின் பெயர், நாள், பக்கம் என்ற நிலையில் பதிவிட்டுக்கொள்ளுங்கள். தேடும்போது மிகவும் உதவியாக இருக்கும். 1980களின் இடையில் வெளிவந்த எனது முதல் வாசகர் கடிதம் முதல் அண்மையில் வெளியான கட்டுரை வரை அனைத்தையும் இந்த வகையில் நான் ஆவணப்படுத்தியுள்ளேன்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! சுரேஷ்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2