கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 88

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 88


1.அதோ போறாரே அவர் ஒண்ணை பத்தா மாத்திடுவார்!
    எப்படி?
  பேங்க் கேஷியரா இருக்கார்!

2.  தலைவர் பிறந்தநாளுக்கு நோட்டு மாலை ஒண்ணு கூட வரலையே!
   மாலை மாற்றிக்க மாட்டேன்னு! முதலிலேயே தலைவர் கறாரா சொல்லிட்டாராம்!


3.  இடைத்தேர்தல்ல தோத்ததுக்கு அப்புறமும் தலைவரோட அலும்பு தாங்க முடியலை!
இது “இடை’த்தேர்தல் நியாயமா பார்த்தா ஓட்டு மெலிந்து போன நாங்கதான் வெற்றி பெற்றதா அர்த்தம்னு அறிக்கை விடறாரே!

4 என் மருமக ஊட்டி கான்வெண்ட்ல டீச்சரா ஒர்க் பண்றா! என் பையன் மும்பை தானே யில வொர்க் பண்றான்!
 இதைத்தான் ஊரார் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்னு சொல்றாங்களோ!

5. குருகுலத்தில் இளவரசர்  அம்பு எய்ததில் பிரச்சனையாம் மன்னா!
    அதில் என்ன பிரச்சனை?
   குருவின் மகள் மீது காதல் அம்பெய்திவிட்டாராம்!

6. தலைவர் எதுக்கு நியுஸ் பிரிண்ட் இங்கை எடுத்து பூசிக்கிறார்?
   அவருக்கு படிப்பு வாசனை இல்லைன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!

7. நம் பாசறையில் சத்தம் அதிகமாக இருக்கிறதே நம் வீரர்கள் பயிற்சி அதிகம் செய்கிறார்களோ தளபதியாரே!
   கனவு காணாதீர்கள் மன்னா! அது நம் வீரர்களின் குறட்டை ஒலி!

 8. புலவர் பாட ஆரம்பிக்கும் முன்னரே மன்னர் பரிசில்களை அள்ளிக் கொடுத்துவிட்டாரே…!
  “ எல்லாம் வருமுன் காப்போம்!” திட்டம்தான்!


9. தலைவர் சில்லறை கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே ஏன்?
   நிறைய நோட்டுக்களை செலவழிக்க வேண்டியிருக்குமேங்கிற பயம்தான் காரணம்!

  10 நகை போடாவிட்டாலும் பரவாயில்லை! கொஞ்சம் நட்டு போட்டு அனுப்புங்க மாமான்னு சொல்றீங்களே மாப்பிள்ளே புரியலையே!
   உங்க பொண்ணு “லூசா” இருக்காளே!

 11. மந்திரியாரே! சபைக்கு புலவர்களே வருவது இல்லையே என்ன விஷயம்!
     சபையில் விழாத லைக்குகள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் விழவும் அதிலேயே மூழ்கிவிட்டார்கள் மன்னா!

12. பேங்கில் இருந்து ரெண்டாயிரம் ரூபா எடுத்து வரதுக்குள்ளே கையெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிருச்சு!
   ஏன்?
அத்தனையும் சில்லறை காசுகளா கொடுத்திட்டாங்களே!

13. மன்னர் தன்னை ரன்னர் அப் சேம்பியன் என்று சொல்லிக் கொள்கிறாரே…?
    போரில் தோற்று ஓடிவந்ததைத்தான் அப்படி கவுரவமாக சொல்லிக்கொள்கிறார்!

14. அடிக்கிற கைதான் அணைக்கும்னு என் பொண்டாட்டிக்கிட்ட சொன்னது தப்பா போயிருச்சு!
   அடிபம்புல பத்து குடம் தண்ணி இப்ப அடிச்சு வையுங்க அணைக்கிற வேலை அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டா!

15.  தலைவர் பதவி தனக்கு தவமின்றி கிடைத்த வரம்னு நம்ம தலைவர் சொன்னாராமே!
   அவருக்கு அது வரம் நமக்கு அது சாபம்!

16. மன்னர் எதற்கு வீரர்களுக்கு பேய் முகமூடி அணிவிக்க சொல்கிறார்?
   எதிரிக்கு பயத்தைக் காட்டப்போகிறாராம்!

17. சண்டைன்னு வந்தா வீட்டுல என் பொண்டாட்டி கை ஓங்கி இருக்கும்!
   அப்புறம்?
அப்புறம் என்ன? என் கன்னம் வீங்கி இருக்கும்!

18 அந்த கல்யாணத்துல என்ன கலாட்டா?
   வரதட்சணை பணத்தை அலசிப்பார்தப்புறம்தான் பொண்ணு கழுத்துல பையன் தாலிகட்டுவான்னு மாப்பிள்ளை வீட்டார் சொல்லிட்டாங்களாம்!


19  எதிரி புறாமூலம் விட்ட தூதுக்கு பதில் கேட்கிறான் மன்னா?
   அடுத்த முறை இளசான புறாவா அனுப்ப சொல்லுங்கள் இந்த புறா டேஸ்ட் சரியில்லை!

20  எங்க டாக்டர் படுத்துக்கிடக்கிற பேஷண்டைக் கூட எழுந்து நிற்க வைச்சிருவார்!
   எப்படி?
தேசிய கீதம் போட்டுத்தான்!

21 அந்த நடிகைக்கு நிறைய விசிறிகள் அதிகமாம்!
   ஓ! அதனாலதான் எல்லா படத்துலேயும் “காத்துவாங்கறாப்பல திறந்து போட்டு நடிக்கறாங்களோ!

22  பையன் செயின் ஸ்மோக்கர்னு சொல்லவே இல்லையே தரகரே?
    எவ்வளோ பெரிய பிரச்சனை வந்தாலும் ஊதித் தள்ளிடுவார்னு சொன்னேனே!

23  எதிரிக்கு கைரேகை பார்ப்பதில் ஆர்வமா மந்திரியாரே?
     ஏன் கேட்கிறீர்கள் மன்னா?
   ஒரு “கை” பார்த்துவிடப்போவதாக சொல்லி இருக்கானாமே!

24 உன் புருஷனை ”ஆட்டிப் படைக்கிற தெய்வம்”னு சொல்றியே ரொம்ப டார்ச்சர் பண்ணுவாரா?
  ஊகும்! நான் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டு கேக்கறதெல்லாம் வாங்கி கொடுக்கிறதாலே அப்படி சொல்றேன்!

25 என் பையனும் டேலி முடிச்சிருக்கான்.வந்த மருமகளும் டேலி முடிச்சிருக்கா!
   “டேலி பாக்கியம்”னு சொல்லு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. வெளியில் சாரல்மழை. வலையில் ஜோக் மழை .

    ReplyDelete
  2. சில்லறை கட்சிகள் உட்பட அனைத்தும் கலகல...

    ReplyDelete
  3. டெலி ஆய்டுத்து
    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ரசித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
  5. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2