இந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது படைப்புக்கள்!

இந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது படைப்புக்கள்!

    வாரா வாரம் எது தவறினாலும் பாக்யாவிற்கு ஒரு பத்து ஜோக்ஸ்கள் மெயில் அனுப்பி விடுவேன். ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் அதில் சில அடுத்த வார பாக்யாவில் வரும். மக்கள் மனசு கேள்வி பதிலும் ஞாயிறு அன்று பதில் அளித்து அடுத்த வாரம் வரும்.

   வர்தா புயல் வீசி எங்கள் ஊரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஓடிப்போய் இருந்தது. போன சனியன்று இரவு வந்தது. மீண்டும் ஞாயிறன்று காலையில் துண்டிக்கப்பட்டது. போனில் நெட் வொர்க்கும் போய் போய் வந்து கொண்டிருந்தது. சிரங்கு பிடித்தவன் கையும் எழுத்தாளன் கையும் சும்மா இருக்குமா?
    எப்படா கரண்ட் வரும் என்று காத்திருக்கையில் இரவு 8 மணி வாக்கில் மின்சாரம் வந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்து ரிலையன்ஸ் ஜியோ கனெக்ட் செய்தால் கனெக்ட் ஆகவில்லை!  முயன்று பார்த்து தோற்று பி.எஸ்.என்.எல் நெட் கனெக்ட் கிடைத்து மெயில் ஓப்பன் செய்து ஒரு பதினைந்து ஜோக்குகள் ஒரு கதை  பாக்யாவிற்கு மெயில் அனுப்பி முடிக்கையில் மணி பதினொன்றை நெருங்கி இருந்தது. இடையிடையே வெவ்வேறு தொல்லைகள் அதனால்தான் இவ்வளவு நேரம். காரிய சித்தி கணபதிக்கு நன்றி சொல்லி படுத்தேன். மின் வழங்கலை சீரமைத்த  கள்ளகுறிச்சி விழுப்புரம் மின் ஊழியர்களுக்கும் மானசீகமாக நன்றி சொல்லி உறங்கிப் போனேன்.

  கஷ்டப்பட்டது வீணாக வில்லை! இந்த வார பாக்யாவில் என்னுடைய கதை எடை  மற்றும் 8 ஜோக்ஸ்கள் வெளியாகி என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது. வழக்கமாக செங்குன்றம் சென்று வாங்குவேன். இந்த முறை சகோதரி ஊரில் இருந்து வந்ததால் அவரை வாங்கிவரச் சொன்னேன்.  புத்தகத்தை புரட்டினால் இரண்டாவது பக்கத்திலேயே என் கதை! 

   என் மீது மதிப்பளித்து என் படைப்புக்களை வெளியிட்டு வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் பாக்யா நிறுவனர் பாக்யராஜ் சாருக்கும் பாக்யாவுக்கு எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்திய பூங்கதிர் சாருக்கும்  இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வளர்ச்சியினை பாராட்டி ஆதரித்து வாழ்த்துக்கள் நல்கி வரும் வலைப்பூ நண்பர்களுக்கும் என் படைப்புக்களை வெளியானதும் தமது குழுமத்தில் பதிந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் இந்த வாரம் குழுவில் பகிர்ந்து கொண்ட ஜான் ரவி சாருக்கும் மற்றும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள். படைப்புக்கள் கீழே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நான் அறிந்தவர்
  பெரும் எழுத்தாளர் எனச்
  சொல்லிக்கொள்வது பெருமையாக இருக்கிறது
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 3. மனம் நிறைந்த வாழ்த்துகள்....

  ReplyDelete
 4. வாராவாரம் டஜன் கணக்கில் நீங்களே ஜோக் அனுப்பிக்கொண்டிருந்தால், மற்ற எழுத்தாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்களோ என்று கவலைப்படுகிறேன். (அதற்காக நீங்கள் நிறுத்திவிடாதீர்கள்.) பணம் வருகிறதா? - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து.

  ReplyDelete
 5. கவிதையிலிருந்து கதைக்கு...தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 7. வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 8. பாக்யாவில் வந்ததுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!