இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!
இன்றைய தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுவினருக்கு மிக்க நன்றி!
தூரத்தில் கேட்குது! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 24th July 2017 04:21 PM | அ+அ அ- |
காலம் மாறிப் பெய்யும் மழை!
காய்த்தெடுக்கும் வெப்பம்!
புதைந்து போகும் ஏரிகள்!
புதியதாய் முளைக்கும் நோய்கள்!
காய்த்தெடுக்கும் வெப்பம்!
புதைந்து போகும் ஏரிகள்!
புதியதாய் முளைக்கும் நோய்கள்!
மரபணு மாற்ற காய்கறிகள்!
மாறி வரும் வேளாண்மை!
வறண்டு கிடக்கும் குளங்கள்!
திரண்டு நிற்கும் மாசுக்கள்!
மாறி வரும் வேளாண்மை!
வறண்டு கிடக்கும் குளங்கள்!
திரண்டு நிற்கும் மாசுக்கள்!
உழைப்பை மறந்த மக்கள்!
உலர்ந்து போகும் பசுமை!
பெருகும் வாகன போக்குவரத்து
அருகும் நடைப்பயிற்சிகள்!
உலர்ந்து போகும் பசுமை!
பெருகும் வாகன போக்குவரத்து
அருகும் நடைப்பயிற்சிகள்!
அழியும் கிராமிய பண்பாடு
வழியும் ஆங்கில மோகம்!
உருகும் பனி ஆறுகள்!
சுருங்கும் ஓசோன் படலம்!
வழியும் ஆங்கில மோகம்!
உருகும் பனி ஆறுகள்!
சுருங்கும் ஓசோன் படலம்!
நொறுங்கும் மலைச்சிகரங்கள்!
நெருங்கும் கடல் எல்லைகள்!
சரியும் நிலத்தடி நீர்வளம்!
உறிஞ்சும் அன்னிய நிறுவனங்கள்!
நெருங்கும் கடல் எல்லைகள்!
சரியும் நிலத்தடி நீர்வளம்!
உறிஞ்சும் அன்னிய நிறுவனங்கள்!
இவைகள் பெருகப் பெருக
அருகி வருகின்றது பூமியின் ஆயுள்!
அதோ தூரத்தில் கேட்கிறது
அபாயச் சங்கு!
அருகி வருகின்றது பூமியின் ஆயுள்!
அதோ தூரத்தில் கேட்கிறது
அபாயச் சங்கு!
டிஸ்கி: சில சொல்ல இயலாத விஷயங்களால் இணையப்பக்கம் நெடுநேரம் வரமுடியவில்லை! விரைவில் மீண்டதும் நண்பர்களின் வலைப்பக்கங்களுக்கு வருகிறேன்! பொறுத்தருள்க!
தங்களின் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்ல கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteசெம....வாழ்த்துகள் சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிதைக்கும் .எழுதியவர்க்கும்!
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிதைக்கும் எழுதியவர்க்குக்கும்!
ReplyDeleteவாழ்த்துகள், சாதனை தொடரட்டும்.
ReplyDelete