தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1. தூக்கிவிட யாருமில்லை!
வீழ்ந்தே கிடக்கிறது!
நிழல்!
2. ஆளில்லா வீடு!
ஓட்டுச்சந்துகளில் நுழைகிறது!
ஒளிக்கீற்று!
3.அசைகையில்
பிறக்கிறது!
இசை!
4.புகைவதை
விரும்புகிறார்கள்!
ஊதுபத்தி!
5.கூடியதாய் கொண்டாட்டம்!
குறைகிறது ஆயுள்!
பிறந்தநாள்!
6.ஈரம் பட்டதும்
பாசிபடர்ந்தது!
வயல்கள்!
7.வெடித்த சுவரில்
வேர்ப்பிடித்தது
செடி!
8. எங்கோ பெய்த மழை!
கிளப்பி விட்டது!
மண்வாசம்!
9. ஒலிப்பெருக்கியின் ஓசை!
கூட்டி வந்தது
ஆத்திரம்!
10. சுழலும் பூமி!
முடிவு தெரியா பயணத்தில்
மனிதர்கள்!
11. சுமக்க முடியாமல்
கொட்டுகின்றன மேகங்கள்!
மழை!
12 இருண்ட பொழுது
பெரிதும் உவக்கின்றன!
வண்டுகள்!
13.கால்களிடையே நீராட
நெளிந்தாடியது
வயல்!
14.குடைகளை அகற்றினார்கள்!
கோடை கொளுத்தியது!
மரங்கள்!
15.ஏற்றுகிறது இறக்கிவிடுகிறது
உடன் பயணிப்பதில்லை!
பேருந்துகள்!
16.உருப்போட்டு முடித்ததும்
சில்லறை விழுகிறது!
நடைபாதை ஓவியன்!
17. மறைந்ததும் கூடியது
கடற்கரையில் பெருங்கூட்டம்!
சூரியன்!
18.மறைத்து வைத்தாலும்
எடுத்துக் கொள்வதில்லை!
இருள்!
19. கொப்பளிக்கும் கோபம்!
அடங்கிப் போகிறது!
குழந்தையின் சிரிப்பு!
20. அசையாமல் நின்றதும்
பெருக்கெடுத்தது வியர்வை!
மின் விசிறி!
இன்று ஹைக்கூ உலகம் முகநூல் குழுவில் பதிந்த கவிதைகள் இவை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் எழுத முடிந்தது. இறைவன் அருளால் தொடர வேண்டும் என்பதே ஆசை!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அத்தனையும் முத்து..
ReplyDeleteதொடருங்கள்
அனைத்தும் அருமை சுரேஷ்....வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
அடடா...அத்தனையும் அழகு
ReplyDelete
ReplyDeleteஅருமையான துளிப் பாக்கள்