என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக
வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2 வணக்கம் அன்பர்களே! சென்ற பகுதியில் வார மாத இதழ்களில் சிறுகதை எழுதுவது குறித்து பார்த்தோம். சிறுகதை இலக்கியத்திற்கு இப்போது பத்திரிகைகளில் பெரிய வரவேற்பு இல்லை. நாவல் என்பது கூட 80 முதல் 100 பக்கங்களுக்குள் குறைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட சூழலில் சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாகத்தான் இருக்கும். சரி அப்புறம் எப்படி பத்திரிகையில் உங்கள் பெயர் வருவது? நீங்கள் எப்படி சந்தோஷம் அடைவது? அதற்கு நீங்கள் வாசக எழுத்தாளராக துணுக்கு எழுத்தாளராக மாற வேண்டும். இன்று வரும் பிரபல வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குத்தவிர வீட்டுக் குறிப்புகள், வாசகர் கடிதங்கள், ஆன்மீகக் குறிப்புகள்,கேள்வி பதில், இணையத் துணுக்குகள் என்று ஏராளமான வாய்ப்புகள் வாசக எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கிடக்கின்றன. பத்திரிகையில் எழுத விரும்பும் ஆரம்ப கால எழுத்தாளர்கள் வாசகர் கடிதம், கேள்விபதில் துணுக்கு, ஜோக்ஸ் என்று படிப்படியாக தன்னை வளர்த்துக் கொள்வது வழக்கம். சில வாசகர்கள் வாசகர் கடிதம், கேள்விபதிலோடு தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும் உண்டு
வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? சங்கப்பலகையில் நண்பர் சுந்தரராசன் வார மாத இதழ்களில் படைப்புகள் எழுத சக எழுத்தாளர்கள் வழிகாட்டலாமே என்று கேட்டிருந்தார். அவருக்காகவும் இங்கு எழுதும் புதிய படைப்பாளர்களுக்காகவும் இந்தப் பதிவு. முதலில் இப்படி ஒரு பதிவு எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஒரு சுய பரிசோதனையும் செய்து கொண்டேன். முடிவில் ஓரளவுக்கு அனுபவமும் தகுதியும் இருக்கிறது என்று முடிவுக்கு வந்து இந்த பதிவை எழுதுகின்றேன். முதலில் என்னைப் பற்றி ஓர் அறிமுகம். நான் நத்தம் எஸ்.சுரேஷ்பாபு. 1988ல் சிறுவர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை முதலில் நட்த்தினேன். அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்புறம் தேன்சிட்டு என்ற இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிகையை என் கல்லூரிக் காலத்தில் நடத்தினேன். தளிர் என்ற வலைப்பூவில் 2011 முதல் படைப்புகள் எழுதி வருகின்றேன். என் கதைகள் துணுக்குகள், பாக்யா, குமுதம், தங்கமங்கை ,கோகுலம், கல்கி, ஆன்ந்தவிகடன், தமிழ் இந்து, மாயாபஜார், பொம்மி, பொதிகைச்சாரல் வாரமலரில் வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு வாரமலர் டி.வி.ஆர்.சிறுகதைப் போட்டி (திருச்சி
அனைத்தும் மிகமிக அருமையாக..
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாழ்த்துகள் சுரேஷ்.
ReplyDeleteபஞ்ச் டையலாக் நன்று பாராட்டுகள்
ReplyDelete