கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 6

ஜோக்ஸ்!


1.      தள்ளுபடியிலே கார் வாங்கினியே எப்படி இருக்கு?
தள்ளும்படி ஆயிருச்சு!

2.      படை உள்ளவங்களா தலைவர் கட்சியில சேர்க்க சொல்றாரே ஏன்?
தலைவருக்கு படைபலம் இல்லேன்னு யாரோ சொல்லிட்டாங்களாம்!

3.      அந்த டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிறது ரொம்ப கஷ்டம்?
அவ்வளவு பிஸியா?
ஊகும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலேயே ஆஜர் ஆயிருவாரு!

4.      கபாலி ஏன் கோர்ட் படியை ஏறாம தாண்டி தாண்டி போறான்?
இனி ஒரு தரம் கோர்ட் படி ஏறுவியான்னு போனதடவை ஜட்ஜ் கோச்சுக்கிட்டாராம்!

5.      நாய் கடிச்சுதுன்னு ஆஸ்பிடலுக்கு போனியே என்ன ஆச்சு?
பர்ஸ் ரொம்ப கடிச்சிருச்சு!

6.      டீ.வி சீரியல் டைரக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு!
ஏன்?
ஒருவாரம் வீட்டில் இல்லைன்னுதும் இவருக்குப்பதில் இவர்னு வேறபொண்ணை செட்டப் பண்ணிக்கிட்டாரே!

7.      குடும்பம் ஒரு கோவில்னு நீங்கதானே மாமா சொன்னீங்க?
அதுக்காக வர விருந்தாளிங்க கிட்ட நுழைவுச்சீட்டு கேக்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே!

8.      நம்ம தலைவர் ஏன் நாற்காலியிலெ உட்காரவே மாட்டேங்கிறார்?
அவர் ஒவ்வொரு முறை உட்கார நினைக்கும்போதெல்லாம் யாராவது தட்டிப் பறிச்சிட்டே இருக்காங்களாம்!

9.      அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமா? எப்படி சொல்றீங்க?
எல்லா யூனிவர்சிட்டி சர்டிப்பிக்கேட்டும் அவர்கிட்ட கிடைக்குதே!

10.  என் பொண்டாட்டி மாமியாரை தெய்வமா மதிக்கிறா?
அவ்வளோ பக்தியா?
 நீ வேற மணி அடிச்சு சோறு போடறதைதான் அப்படி சொன்னேன்!


11.  அவர் சட்டத்தை ரொம்ப மதிக்கிறவரு!
    எப்படிச்சொல்றே?
   நோ எண்ட்ரியிலே நடந்து கூட வரமாட்டார்னா பாத்துக்கோயேன்!

12.  கூட்டத்துல தலைவர் மேல யாரோ செருப்பை வீசிட்டாங்க!
அப்புறம்?
 செருப்பு நல்லா இருக்கு! இதனோட ஜோடியையும் வீசுனா நல்லா இருக்கும்னு சொல்லிட்டாரு!

13.  மன்னர் அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து விடுகிறாரே ஏன்?
    சும்மா இரும்! ராத்திரி தூங்க முடியாமல் மகாராணியார் நச்சரிப்பதால் தியானம் என்று சொல்லி தூங்கி கழிக்கிறார்!

14.  வாஸ்து பார்த்து வீட்டை கட்டினியே இப்ப எப்படி இருக்கே?
அங்க அங்கே இடிச்சு இப்ப நடுத்தெருவுல இருக்கேன்!

15.  மன்னர் ஜுரவேகத்தில் கூட போர் போர் என்று பிதற்றுகிறார் பாருங்கள்!
அட இது ஐ.பி. எல் ஜுரம்! ஃபோர்! ஃபோர் என்று பிதற்றுகிறார்!


16.  எதிரி மன்னனுக்கு புறாத்தூது அனுப்பினோமே என்னாயிற்று மந்திரியாரே!
சமைத்து சாப்பிட்டுவிட்டு அடுத்த முறை கொஞ்சம் இளசான புறா அனுப்புமாறு சொல்லி அனுப்பியிருக்கிறான் மன்னா!

17.  அவர் வாழ்க்கையே இருண்டு போச்சு!
அப்ப தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்பர் ஆயிட்டாருன்னு சொல்லுங்க!

18.  அப்ளிகேசன் பார்மோட பதிவர் திண்டுக்கல் தனபாலன் வாசல்ல ஏன் நிக்கறே!
டி.டியை  இணைச்சு அனுப்ப சொல்லியிருக்காங்களே!

19.  மன்னர் எதற்கு போர்க்களத்திற்கு பேப்பரோடு போகிறார்!
    எதிரியின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்களாம்!

20.  அரசவைப் புலவர் ஏன் புலம்பிக்கொண்டு செல்கிறார்?
படி உயர்வு கேட்டதற்கு அரசர் அவரது ஆசனத்தை ஒரு படி உயர்த்திப் போட்டு போதுமா? என்று கேட்டாராம்!

21.  தலைவர் எல்லார்க்கிட்டேயும் ‘செல்’ ல பத்தி பேசிக்கிட்டு இருக்காரே புது ‘செல்’ வாங்கப்போறாரா?
கூடிய சீக்கிரம்’ ‘செல்” லுக்கு போகப்போறார்!

22.  தலைவர் செண்டிமெண்டா பேசி தன்னோட கல்வித்தகுதியை பத்தின சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைச்சிட்டார்!
அப்படி என்ன பேசினார்!
எல்லோரும் கோடி கோடியா சொத்து சேர்த்துப்பாங்க! நான் பேருக்கு முன்னாடி ரெண்டு எழுத்து சேர்த்துக்கிட்டது தப்பான்னு கேட்டார்.


23.  ஒரு பொண்ணை உருகி உருகி காதலிச்சியே என்னாச்சு!
அந்த காதல் கரைஞ்சுப்போச்சு!

24.  இன்னிக்கு சாப்பாடு ரொம்ப காஸ்ட்லி ஆயிருச்சுன்னு சொன்னியே எப்படி?
ஒரு கல்யாணத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு வரேன்!

25.  என் மனைவி என் கிட்ட வெளிப்படையாத்தான் நடந்துப்பா!
உங்க மூஞ்சி வீங்கி இருப்பதை பார்த்ததுமே புரிஞ்சுகிட்டேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கபடுத்துங்கள்! நன்றி!

    

Comments

 1. எவ்வளவு ஜோக்ஸ் !!!!!..... இதை இரண்டு பதிவா போட்டுருக்கலாமே ??

  ReplyDelete
  Replies
  1. ஜோக்ஸ் எழுத பயிற்சி எடுக்கிறேன் நண்பா! எது நல்லா இருக்குன்னு ஒரே குழப்பம்! அது மட்டும் இல்லாமல் நிறைய ஜோக்ஸை முன்பு தொகுத்து போட்டுகிட்டு இருந்தேன்! இப்ப சொந்தமா அதே மாதிரி கொடுக்கணும்னு ஒரு எண்ணம்! உடனடி கருத்துரைக்கு நன்றி!

   Delete
 2. மின் வெட்டிட்டாங்க! அப்புறம் வரேன்!

  ReplyDelete
 3. 10 இல்லை என்றால் 15 ஜோக்ஸ் போடுங்கள். உங்களுக்கும் இன்னொரு பதிவை தேத்தின மாதிரி இருக்கும்.
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
 4. ஹிஹி... நல்லா இருக்குங்க...

  ReplyDelete
 5. கலக்குறீங்க, ஸூப்பர்.

  ReplyDelete
 6. எல்லாமே சூப்பர். ஆனா எத்தனை ஜோக்ஸ்ஸா?

  ReplyDelete
 7. கூட்டத்துல தலைவர் மேல யாரோ செருப்பை வீசிட்டாங்க!
  அப்புறம்?
  செருப்பு நல்லா இருக்கு! இதனோட ஜோடியையும் வீசுனா நல்லா இருக்கும்னு சொல்லிட்டாரு!/// ஹிஹி இது எல்லா
  த்துலயும் நல்லா இருக்கு

  ReplyDelete
 8. அனைத்துமே அருமை நண்பரே.......

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2