கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 7

ஜோக்ஸ்!


 1. தலைவர் ஏன் எல்லா டீக்கடைகளையும் இழுத்து மூடனும்னு அறிக்கை விடறார்?
பிரதமர் பதவிக்கு போட்டியா வந்துடப் போறாங்கன்னுதான்!

 1. கால்பந்து என்றாலே மன்னருக்கு பிடிக்காதா ஏன்?
எதிரி மன்னனிடம் உதைபட்ட நினைவை கிளப்பிவிடுகிறதாம்!

 1. தலைவருக்கு உலக அறிவு கம்மி!
எதைவைச்சு சொல்றே?
பணவீக்கத்தால மக்கள் கஷ்டப்படறாங்கன்னு சொன்னா கட்சி சார்பா ஆளுக்கொரு அயோடெக்ஸ் வாங்கிக் கொடுத்திருவோம்னு சொல்றார்!

 1. அமைச்சரே! எதிரி நாட்டு மன்னன் மயில் அனுப்பினானாமே! சமைக்க சொல்லவேண்டியதுதானே!
    மன்னா! அது மயில் இல்லை! மெயில்!

 1. தலைவரோட மனசு பஞ்சு மாதிரி லேசானது…
அப்ப மகளீர் அணித்தலைவியை கொஞ்சம் தூரமா இருக்க சொல்லணும்!
  ஏன்?
அவங்கதான் நான் நெருப்பு மாதிரின்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க பத்திக்க போவுது!

 1. சர்வர் என்னப்பா இட்லியிலே நூல் நூலா வருது!
நீங்கதானே சார் பஞ்சு மாதிரி இட்லி கேட்டீங்க!


 1. அளவுக்கு அதிகமா இவ்வளவு சொத்து சேர்த்திருக்கீங்களே எதுக்குன்னு ஜட்ஜ் கேட்டதுக்கு தலைவர் சொன்னபதில்ல கோர்ட்டே அசந்துருச்சு!
அப்படி என்ன சொன்னாரு?
எல்லாம் மக்களுக்காகத்தான்னு சொல்லிட்டாரு!

 1. அந்த நடிகை கட்சியை விட்டு விலகிட்டாங்களே ஏன்?
கட்சியோட டைரக்டர் மாறினதும் நடிகையும் மாறிட்டாங்களாம்!

 1. தலைவருக்கு விளம்பரம்னா ரொம்ப பிடிக்கும்!
    அதுக்காக தோத்ததுக்கு கூட “நோட்டாவை  முந்த உதவிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி”ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டணுமா?


 1. எங்கள் மன்னர் வீரப் பரம்பரை!
எங்கள் மன்னர் வெறும் வெட்டி அலப்பறை!

 1. கொசுவை விரட்ட ஒரு லிக்விட் வாங்கி வைச்சேன். எல்லா கொசுவும் அந்த லிக்விட்டையே மொய்க்க ஆரம்பிச்சுருச்சு!
    அப்புறம்?
  கதவை சாத்திட்டு வெளியே வந்து நிம்மதியா படுத்துக்கிட்டேன்!

 1. ஆனாலும் அடுத்த வீட்டு கமலாவுக்கு இத்தனை திமிர் இருக்க கூடாது!
ஏன் என்ன ஆச்சு?

அவங்க மாமியார் டூர் போயிருக்காங்களாம்! ஒரு வாரத்துக்கு உன் வீட்டுக்கு வந்து உன் மாமியோரட சண்டை போட்டுக்கவான்னு கேக்கறா?

 1. உன் பொண்ணு ஒரு பையன் மேல பாசமா இருக்கான்னு சொன்னியே அப்புறம்?
இப்ப மாசமா இருக்கா!

 1. அடிக்கடி கோர்ட் படி ஏறுகிறாயே உனக்கு  கஷ்டமாக இல்லை…!
வேறவழி இல்லையே எசமான் கோர்ட் படி ஏறாம இருக்க  ‘லிப்ட்’ வசதி இல்லையே!


 1. டாக்டர்! தினமும் தொடர்ந்து சமைக்கிறமாதிரி கனவாவே வருது டாக்டர்!
    அப்ப கூடிய சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் ஆகப்போவுதுன்னு சொல்லுங்க!

 1. பஸ் கண்டக்டரை நம்பி பொண்ணு கொடுத்தது தப்பா ஆயிருச்சா ஏன்?
சில்லறை பிரச்சனைகளுக்கெல்லாம் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிச்சிடுறாரு!

 1. கட்சியை தூக்கி நிறுத்தனும்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்…
அப்புறம்?
ரெண்டு கிரேனுக்கு ஆர்டர் புக் பண்ணிட்டார்!

 1. மாப்பிள்ளை கஸ்டம்ஸ்ல இருக்கார் பார்த்து செய்யுங்க பார்த்து செய்யுங்க!ன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா எப்படி?

கஷ்டத்துல இருக்கிறதைத்தான் இப்படி மாத்தி சொல்லியிருக்காங்க! 

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வணக்கம்
  ஐயா.

  நகைச்சுவை என்றால் எப்போதும் மகிழ்ச்சிதான்... தங்களின் நகைச்சுவையை இரசித்தேன் ஐயா.
  வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை. அதிலும் 18வது, வார்த்தை ஜலாத்தை காட்டுகிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2