தினமணி கவிதை மணி ஜூன் 2018 இணைய தள கவிதைகள் ! பகுதி 1
தினமணி கவிதைமணி இணைய தளப்பக்கத்தில் ஜூன் மாதம் வெளியான கவிதைகள் இரண்டு உங்கள் பார்வைக்கு!
வாழ்க்கையென்னும் போர்க்களம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 03rd June 2018 02:05 PM | அ+அ அ- |
வாழ்க்கையென்னும் போர்க்களத்தில் அனுதினமும் போராட்டம்தான்! தினம் தினமும் பூத்திடுமே புதுப்புது பிரச்சனைகள்! பதுங்கு குழிகளும் கண்ணிவெடிகளும் இங்கு தாராளம்! துணிச்சல் இருப்பவன் துணிந்து இங்கே போராடி ஜெயிக்கின்றான்! தன்னம்பிக்கை என்னும் கதாயுதம்! தந்திடுமே என்றும் வாழ்க்கையெனும் போர்க்களத்தில் போராளிக்கு பெரும் வெற்றி! ஊக்கத்தை தொலைத்தோருக்கு என்றுமே துக்கம்தான்! தூக்கத்தை விரும்புவோருக்கு வாழ்க்கையில் என்றும் வெற்றிடம் தான்! வெற்றிகளை குவித்திட்டோர் வீண்ஜம்பம் பேசுவதில்லை! போற்றி பாடல்களை விரும்பிட்டோருக்கு ஏற்றம் என்றுமே நிலைப்பதில்லை! வஞ்சகம் வன்மம், பகை, சூது, பொறாமை, எரிச்சல் பொய் , களவு ,புனைச்சுருட்டு என்று பலவித ஆயுதங்கள்! போர்க்களத்தில் இத்தனையும் சமாளிக்கும் அன்பு எனும் ஒற்றை ஆயுதம்! வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அன்பும் நம்பிக்கையும் நம்மோடிருப்பின் நலமோடிருப்போம்! நம் கையில் வாழ்க்கை வீழ்ந்திருக்க நல் வாழ்க்கை பாடத்தை கற்பித்திருப்போம்! வாழ்க்கையெனும் போர்க்களத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்! வாழ்க்கைதரும் பாடங்களை வழிவழியே கற்றிடவே எதிர்காலம் எதிரிகள் இல்லா காலமாகும் இனிதாக பூத்திடும் போர்க்களத்தில் இன்பம் தரும் வெற்றி!
வெல்லும் சொல்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 11th June 2018 04:05 PM | அ+அ அ- |சொல் ஓர் ஆயுதம்! சொல் ஓர் கேடயம்! சொல் ஓர் கூர் வாள்! ஒற்றை சொற்பிழை கோவலன் உயிர் எடுத்தது! சொல்லின் இனிமை பேச்சின் வன்மை! சொல்லின் வன்மை விலக்கும் கேண்மை! சொல்லும் சொல்லில் வேண்டும் உண்மை!வெல்லும் சொல்லில் வெளிப்படும் தமிழின் திண்மை! ஆற்றுபடுத்த செல்கையில் ஊற்றாய் பெருக்கெடுத்தாலும் தேற்றலே தெள்ளத்தெளிவாய் பிரதானம்! கொல்லன் தெருவில் ஊசி விற்க திறமைவேண்டும்! கற்றவர் முன் சொல்லாட புலமை வேண்டும்!நுனிப்புல் மேய்கையில் நனி சிறக்காது சொல்! ஆழ்ந்து வாசிக்கையில் அகத்தில் சிக்கிடும் அரும்சொல்! சொல்லாடலில் விளையாட சொற்புலமை அவசியம்! செல்லுமிடமில்லாம் சிறப்பெய்த சொல்வாக்கு வசியம்! வெல்லும் சொல்லை அறிந்திட்டால் வெற்றி மாலை உனக்கு!நாவன்மை சித்திக்க நயமாகும் வெல்லும் சொல்! நாடு முழுதும் தித்திக்கும் நீ சொல்லும் சொல்!
Comments
Post a Comment