தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


இருண்டது வானம்!
ஒளிர்ந்தது பூமி!
மழைமேகம்!

சிரித்ததும்
சிறைபட்டன
பூக்கள்!

ஒளிந்து கொண்ட பசுமை!
மீட்டெடுத்தது
மழை!

உச்சியில்
ஊற்றெடுக்கிறது நீர்!
இளநீர்!

அழுகைச் சத்தம்!
ஆனந்திக்கிறது மனசு!
பிரசவம்!

வாகனங்களின்
தாலாட்டு!
உறக்கத்தில் நெடுஞ்சாலைகள்!

மேகங்கள் கர்ஜனை!
மிரண்டு ஓடிய சூரியன்!
பூமியில் மழை!


மேகங்கள் பூத்ததும்
பறித்துக் கொண்டது வானம்!
மின்னல்!

சிறகடித்த பூக்கள்!
சிறைபட்டது மனசு!
வண்ணத்துப் பூச்சிகள்!

கடத்தல் காரன்!
சிறைபடவில்லை!
காற்று!

கொட்ட கொட்ட
மகிழ்ந்தார்கள்!
அருவி!

சட்டையில் பொத்தல்கள்!
ஏழையான வானம்!
நட்சத்திரங்கள்!

அம்மாக்களை உருவாக்க
அவதரிக்கின்றன
குழந்தைகள்!

கடவுளுக்கும்
தாயாகின்றன!

குழந்தைகள்!

Comments

 1. அருமையான கருத்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரர். நலம் அறிய ஆவல். அனைத்து கவிகளும் அழகான சிந்தனைகளைத் தாங்கியுள்ளது. குறிப்பாக
  கடவுளுக்கும் தாயாகின்றன
  குழந்தைகள்
  முத்தாய்ப்பு.. தொடருங்கள்.. பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 3. ரொம்ப நாளாயிற்று தளிர் ஹைகூ படித்து.... ஒரு வேளை நான் பார்க்கவில்லையோ என்னவோ... எப்போதும் போல் கலக்கல்தான்...

  ReplyDelete
 4. அனைத்துமே அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

  ReplyDelete
 5. எல்லாமே அருமை, அதிலும் மின்னல், குழந்தைகள், பூக்கள் , வண்ணத்துப் பூச்சி போன்றவை சூப்பர் சார்....

  ReplyDelete
 6. அனைத்தும் அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள் சுரேஷ்

  ReplyDelete
 7. அனைத்தும் அசத்தலான ஹைக்கூகள்.

  ReplyDelete
 8. ஆஹா! ஹை!!! ஹைகூக்கள்!

  ReplyDelete
 9. வலையில் விழுந்த மழைத்துளி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ஹைகூக்கள்......கலக்கல்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!