தளிர் தளத்திற்கு கிடைத்த விருது!
தளிர் தளத்திற்கு கிடைத்த
விருது!
வணக்கம் அன்பர்களே! கடந்த
நான்கு வருடங்களாக பதிவுலகில் சஞ்சரித்து வருகின்றேன். முதலிரு ஆண்டுகள் என்னை ஒரு
பதிவர் என்றே சொல்லிக் கொள்ள முடியாது. பிற செய்தி தளங்களில் இருந்தே நிறைய
செய்திகளை பகிர்ந்து கொண்டு அதையே பதிவு என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர்
தான் பதிவுலகம் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டது.
பல தளங்களுக்கு சென்று பலரின் பல்வேறு விதமான
பதிவுகளை படித்தபின் தளிர் தளம் மெருகு பெற ஆரம்பித்தது. இதற்கிடையில் சச்சரவுகள்
சிலவும் ஏற்பட்டது. பதிவுலகில் பலரும் பலருக்கு விருது கொடுத்து அதை
வலைப்பக்கத்தில் வைத்திருப்பதை கண்டிருக்கிறேன். நானும் வாழ்த்தி இருக்கிறேன்.
இதே போன்ற விருதுகள் என்னுடைய தளத்திற்கு
கிடைக்கும் என்று நான் எண்ணியது இல்லை. நட்பு வட்ட பதிவர்கள் தங்களுக்குள்
வழங்கிக் கொள்வர். நான் எந்த நட்பு வட்டத்திலும் இல்லை. எனக்கு பிடித்த எல்லா
தளங்களும் செல்வேன். இயன்ற போது கருத்துக்கள் தந்து மகிழ்வேன். அவர்கள் என் தளம்
வந்து வாசித்தால் கூடுதலாக மகிழ்வேன். அவ்வளவுதான்.
இந்த நிலையில் திடீரென நேற்று தஞ்சையம்பதி
தள பதிவர் திரு துரை செல்வராஜு என்னுடைய பதிவில் விருது ஒன்றினை என்னுடன்
பகிர்ந்துள்ளதாக தெரிவித்தார். அடடா!
நமக்கும் விருதா! ஆச்சர்யமாக இருந்தது. இந்த நான்கு வருடத்தில் நாம் என்ன
சாதித்துவிட்டோம் விருதினைப் பெற என்று யோசித்தபடியே அவரது தளத்திற்கு சென்றேன்.
அங்கு சென்ற பிறகுதான் விருதைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது.
பதிவுலகில் தொடர்பதிவு என்று ஒன்று கொஞ்ச
காலம் முன்பு கோலொச்சி இப்போது கொஞ்சம் வழக்கொழிந்து வருகிறது. அதே போன்று இது ஒரு
தொடர் விருது போலும். பதிவர் கீதா சாம்பசிவத்திற்கு திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் விருதினை
அளித்து அதை ஐவருடன் பகிர்ந்து கொள்ள சொல்லியுள்ளார். அவர் அதை திரு துரை செல்வராஜ் உள்ளிட்ட ஐவருடன்
பகிர, திரு துரை செல்வராஜ் ஐவர் மட்டுமென்ன என்று நிறைய பேருக்கு விருதினை
பகிர்ந்துள்ளார். அதில் அடியேனும் ஒருவன்.
பொதுவாக விருதுகள் பட்டங்கள், பாராட்டுக்கள்
ஒருவனை ஊக்கப்படுத்தும் மேலும் உழைக்கத் தூண்டும். அந்த வகையில் பேஸ் புக்,
டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு இழந்து கொண்டிருக்கும்
வலையுலகை இத்தகைய விருதுகள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு உயிர்ப்புடன்
வைத்திருக்கும் என்று தோன்றுகிறது.
விருதினை பெற
விதிமுறைகள்.
- விருதினை கொடுத்த தளத்தினை பகிர வேண்டும்.
- விருதினை தளத்தில் பதிய வேண்டும்.
- விருதினை பெற்ற நான் என்னைப் பற்றி சொல்ல வேண்டும்
- குறைந்தது ஐந்து பேருக்கு விருதினை பகிர வேண்டும்
விருதினை கொடுத்த திரு துரை செல்வராஜு அவர்கள் தஞ்சையம்பதி
என்னும் தளத்தின் பதிவர். ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள இவர் ஆன்மிக பதிவுகளை அழகுற
எழுதுவதில் வல்லவர். என்னை ஒரு பதிவராக மதித்து விருதினை தந்த இவருக்கு மிக்க
நன்றி! இவரது தள இணைப்பு. http://thanjavur14.blogspot.ch/2014/09/blog-post84-blog-award.html
விருதினை தளத்தில்
பதிந்துவிட்டேன்.
என்னைப் பற்றி ஏழு விஷயங்கள்!
- சுரேஷ்பாபு எனது முழுப்பெயர்.
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள
நத்தம் கிராமத்தில் வசிக்கின்றேன்.
- நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காரியசித்தி கணபதி
கோயிலின் குருக்கள்.
- சிறுவயது முதலே எழுத்தார்வம், கதை, கவிதைகள் எழுதுவேன்.
- வேத ஜனனி, போதனா என்ற பெண்குழந்தைகள். சமீபத்தில்
மூன்றாவதாக ஆண்பிள்ளை பிறந்துள்ளது.
- சிறந்த எழுத்தாளர் என்ற பெயர் எடுக்க வேண்டும்
பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு.
- முன்பு டியுசன் ஆசிரியராக இருந்தேன். புத்தகம்
வெளியிடும் ஆசையும் உண்டு.
இந்த
விருதினை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் நண்பர்கள்:
1. திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.
2. திரு, பாண்டியன் அவர்கள்.
3. திரு கில்லர்ஜி அவர்கள்.
4. திரு சொக்கன் சுப்ரமண்யன்அவர்கள்
5. திருமதி தென்றல் சசிகலாஅவர்கள்.
6. திருமதி கிரேஸ் அவர்கள் தேன்மதுரத் தமிழ்
7. திருமதி எழில் அவர்கள் நிகழ்காலம்.
8. திரு ராஜா மேலையூர் அவர்கள்
இன்னும்
நிறைய நண்பர்களுடன் பகிர விருப்பம் இருப்பினும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க
இத்துடன் பகிர்தலை நிறுத்திக் கொள்கிறேன். இது தொடர் விருதாக இருப்பதால் பலரும் பலருக்கு விருதினை அளித்து இருப்பதால் பட்டியலில் விடுபட்டவர்கள் பொறுத்துக் கொள்க! உங்களுக்கு என்றும் என் மனதில் இடம் உண்டு.
விருதினை
வழங்கிய திரு துரை செல்வராஜு அவர்களுக்கும் இவ்விருது கிடைக்க காரணமாக இருந்த என்
வலைப்பூ நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக்க நன்றிகள்.
விருது பெற்ற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... மேலும் பல விருதுகள் உங்களை வந்து சேர இது ஒரு நல்ல துவக்கமாகட்டும்!
ReplyDeleteநண்பரே.... எனக்கு எத்தனை ? விருதுகள் நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களும் கொடுத்து இருக்கிறார்கள் எமக்குமுண்டோ தகுதி ?
ReplyDeleteஎன்னை நானே கேட்கிறேன்.
இது தொடர் விருது என்பதால் பல விருதுகள் கிடைக்கும்! பலரும் பலருக்கு வழங்கி வருகின்றனர்! கண்டிப்பாக தங்களுக்கு பல விருதுகள் பெறும் தகுதி உண்டு கவலை வேண்டாம்!
Deleteவிருது பெற்றதற்கு நல் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அம்மா!
Deleteவிருது பெற்ற உங்களுக்கு இந்த அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteநன்றி நண்பா!
Delete
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள் சார்...
நன்றி ஜெய்!
Deleteவிருது பெற்ற உங்களுக்கும், விருதினை நீங்கள் பகிர்தளித்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி சார்!
Deleteவாழ்த்துகள்....என் விருதும் உங்களுக்கு பகிர்ந்துள்ளேன் ....சகோ
ReplyDeleteநன்றி சகோ..!
Deleteவாழ்த்துக்கள் சுரேஷ்! உங்கள் பெயரையும் வைத்திருந்தோம்...பின்னர் உங்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்பதால் மாற்றினோம்....
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி சார்! நானும் அப்படித்தான் சில பெயரை மாற்றும் படி ஆகிவிட்டது!
Delete//சிறந்த எழுத்தாளர் என்ற பெயர் எடுக்க வேண்டும் பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு.// அட்டகாசம் உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்... அதற்கு என் மனப்பூர்வமான வாழ்துக்கள் மற்றும் பிராத்தனைகள்
ReplyDeleteநன்றி சீனு!
Deleteவிருது பெற்றமைக்கும் மற்றவர்களுக்கு கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteதாங்கள் தற்போதும் சிறந்த எழுத்தாளரே
ReplyDeleteபுத்தகம் வெளியிடும் விருப்பம் (ஆசை) விரைவில் நிறைவேறும்
வாழ்த்துகள்
நன்றி சார்!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவிருதினைப் பெற்றமைக்கு
ReplyDeleteமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அன்பின் சுரேஷ்.. உங்களை மறக்க முடியுமா நண்பரே!..
ReplyDelete//சிறந்த எழுத்தாளர் என்ற பெயர் எடுக்க வேண்டும் பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு.//
ஸ்ரீகார்யசித்தி கணபதி அருகில் இருக்கையில் கவலை எதற்கு!..
மகனுக்கு இன்னும் பெயர் சூட்டவில்லையா!.. தங்கள் பிள்ளைகளுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..
தங்களிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி நண்பரே! அறுவை சிகிச்சை நடந்தமையால் மூன்றாம் மாதம் பெயர்சூட்டு விழா நடைபெற உள்ளது. நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... தங்களுக்கு கிடைத்த விருதினை மற்றவர்களுக்கு பகிந்தமைக்கு நன்றிகள் பல....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்! வேளைப்பளுவால் இந்த முறை கவிதைப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை! அடுத்த முறை கட்டாயம் பங்கெடுப்பேன்! நன்றி!
Deleteவிருதினைப் பெற்றமைக்கு என் உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteஉங்களிடமிருந்து இவ் விருதினை பெறுபவர்களுக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள்!
நன்றி சகோ...!
Deleteவிருது பெற்றமைக்கும் அதை சக தோழமைகளோடு எனக்கும் பகிர்ந்து மகிழ்ந்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteவணக்கம் திரு சுரேஷ் ஐயா....
ReplyDeleteவிருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
சரி....எப்போ ட்ரீட்?? :)
"//அடடா! நமக்கும் விருதா! ஆச்சர்யமாக இருந்தது. இந்த நான்கு வருடத்தில் நாம் என்ன சாதித்துவிட்டோம் விருதினைப் பெற //" -
ReplyDeleteதாங்களே இவ்வாறு சொன்னால், நான் எல்லாம் என்ன சொல்வது. மேலும் எனக்கும் விருது வழங்கி, என்னையும் கௌரவித்து விட்டீர்கள். மிக்க நன்றி சுரேஷ்.
விர்து பெற்றமைக்காக தங்களுக்கு பாராட்டுக்கள். என்னை போல் விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சுரேஷ்... அந்த விருதினை என்னுடன் பகிர வேண்டும் என எண்ணியமைக்கும் மிக்க மகிழ்ச்சி. ஏதோ ஒரு விதத்தில் தோழமையை என்னுடைய எழுத்து ஈர்த்திருக்கிறது என்பது மகிழ்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ விருது பெற்றமைக்கும் வழங்கியமைக்கும்.
ReplyDeleteவிருது பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!