தோத்திரம் செய்பவர்களுக்கு ஒரு தோத்திரம்!
தோத்திரம் செய்பவர்களுக்கு
ஒரு தோத்திரம்!
நான் இந்து மதத்தை சேர்ந்த
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பிற மதங்களை இதுவரை தூஷித்தது
இல்லை! நம் மதம் போல் அவர்களுக்கும் அவர்களுடைய மதம் உயர்ந்தது என்று நினைத்து
இருந்தேன். எனக்கு இஸ்லாமிய கிறித்தவ, ஜைன மத நண்பர்களும் படிக்கும் காலத்திலும்
பின்னரும் உண்டு.
ஒரு லிமிட் தாண்டி யாரும் யாருடைய மதத்தையும்
விமரிசித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் அருகில் இருக்கும் ஒரு
தர்காவில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் திருவிழாவிற்கு ஒரு பாய் எங்கள் வீட்டிற்கு
வந்து நன்கொடை வாங்கிச் செல்வார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னேரியில் பாய்
ஒருவர் வைத்திருந்த பெட்டிக்கடையில்தான் நியுஸ்பேப்பர் வாங்கிக் கொண்டிருந்தோம்.
இப்படி இஸ்லாமியர்களோடு எந்த முரண்பாடும் ஏற்பட்டது இல்லை.
கிறித்தவர்களும் கூட நிறைய மிஷினரிகள் அமைத்து
மருத்துவ சேவை செய்து வந்தார்கள். சோழவரம் அருகே ரெய்னி ஆஸ்பிடல், அழிஞ்சிவாக்கம்
அருகே ஒரு மருத்துவமனை என்று குறைந்த கட்டணம் அல்லது இலவச மருத்துவம் செய்து
வந்ததால் அவர்கள் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. நல்ல மரியாதையையே
வைத்திருந்தேன்.
ஆனால் சமீப காலமாக இந்த மரியாதையை குறைத்துக்
கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. சென்ற வாரம் ஒரு நண்பர் அவர் மைத்துனரை அழைத்து
வந்தார். அவரது பிள்ளைக்கு வரன் வந்துள்ளது பொருத்தம் பார்க்க வேண்டும் என்று என்
தந்தையிடம் வந்தார்கள். என் தந்தை ஒரு ஜோஸ்யரும் கூட! பொருத்தம் பார்த்து
கொடுத்தார். அன்று எங்கள் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்து பிரசாதம்
இருந்தது. பிள்ளையாரை கும்பிட்டு வாப்பா! பிரசாதம் தருகிறேன்! என்றார் அப்பா.
அந்த நண்பர் மட்டும் சென்று பிள்ளையாரை
வணங்கி பிரசாதம் வாங்கிக் கொண்டார். உடன் வந்த அவர் மைத்துனர் மறுத்துவிட்டார்.
காரணம் என்னவென்று அப்பா கேட்டபோது சர்க்கரை அது இது என்று கூறி சமாளித்து வெளியே
சென்றுவிட்டார். அவர் சென்றதும் நண்பர் என்னிடம் கூறினார். அவர் கிறிஸ்டியனாகி
விட்டார். அதனால்தான் உள்ளே வரவே தயங்கினார். பிரசாதம் வேண்டாம் என்று
கூறிவிட்டார் என்றார்.
“ அப்படியானால் எதற்கு இந்த பொருத்தம்
பார்க்கிறீர்கள்?” இது நம் மதத்தில் தானே வழக்கம் என்றேன்.
இல்லை! அவர் வீட்டில் அனைவரும் இந்துவாகத்தான்
இருக்கிறார்கள்! இவர்மட்டும் தான் மாறிவிட்டார்! இவருக்கு உடல்நிலை சரியில்லை
என்று சர்ச்சுக்கு சென்றாராம். இப்போது சரியாகிவிட்டது. அதனால் இவர் மட்டும்
கிறிஸ்டியனாக மாறிவிட்டார் என்றார்.
“ இதென்ன பைத்தியகாரத்தனமாக இருக்கிறது!
உடம்பு சரியில்லை என்றால் மதம் மாறி விடுவதா?” எத்தனை கிறித்தவர்களுக்கு உடம்பு
சரியில்லாமல் போகிறது? அவர்கள் எல்லாம் மதம் மாறிவிட்டார்களா என்ன? என்றேன்.
“ என்ன பண்றது? இவர் சொன்ன பேச்சைக் கேட்க
மாட்டார்?” விட்டுத் தள்ளுங்க! என்று கிளம்பி விட்டார் நண்பர்.
உடம்பு நன்றாக இருந்தவரை சாப்பிட்ட கோயில் பிரசாதங்களும் எடுத்துக் கொண்ட திருநீறும் உடம்பு கெட்டு கிறித்தவத்தில் சேர்ந்தவுடன் கசக்கிறது. திருநீறு அணிந்து பிரசாதம் சாப்பிட்டால் உடம்பு மீண்டும் கெட்டுப் போய்விடுமாம்.
ஒரு கிறித்தவன் இந்துக்கள் பெரும்பாண்மையாக வாழும் நாட்டுக்குள் நுழைந்து இந்துவை கிறித்தவன் ஆக்கலாமாம். அதே இந்துவாக இருந்த ஒருவன் மூளைச்சலவை செய்யப்பட்டு கிறித்தவன் ஆனவுடன் அவனது பழைய கடவுளை மறந்துவிட வேண்டும். கடவுளின் பிரசாதங்களையும் மறந்துவிட வேண்டும். என்னடா இது போக்கிரித் தனம்? இந்துக்கள் வாழும் ஊரில் உங்களை வாழ வேண்டாம் என்று சொல்லவில்லை! உங்கள் கடவுளுக்கு கோயில்( சர்ச்) எழுப்பத் தடை செய்யவில்லை. உங்கள் மதத் திருவிழாக்களை தடை செய்யவில்லை. எங்கள் அப்பாவிகளை ஏமாற்றி மதம் மாற்றாதீர்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.
இது இப்படி என்றால் ஒரு இரண்டு வருடங்கள்
முன்பு, காலை பத்து மணி வாக்கில் தச்சூர் கூட்டுச் சாலையில் வண்டியில் சென்று
கொண்டிருந்தேன். பொன்னேரி சாலையில் திரும்பும் சமயம் இளைஞர் ஒருவர் வழி மறித்தார்.
ஏதோ லிப்ட் கேட்கிறார் போல என்று வண்டியினை நிறுத்தினேன்.
கையில் ஒரு கவருடன் வந்தவர், உங்களை தினமும்
இந்த வழியில் பார்க்கிறேன்! நீங்கள் செய்யும் தொழில் சரியில்லை! இதை
செய்யாதீர்கள்! அது பாவம்! என்றார்.
நான் அப்படி என்ன தொழில் செய்கிறேன்?
என்றேன்.
இந்த தொழில்தான்! எதற்கு
விநாயகரை பூஜை செய்கிறீர்கள்? அதெல்லாம் செய்யாதீர்கள்! இதைப் படித்து பாருங்கள் என்று கவரை
நீட்டீனார்.
எனக்கு மிகவும் ஆத்திரம் வந்துவிட்டது. இதை
சொல்லத்தான் நிறுத்தினாயா? என்றேன்.
ஆமாம்! இந்த பாவத் தொழிலை விட்டுவிடுங்கள்!
என்றார்.
முதலில் நீ இதே போல வழியில்
செல்பவர்களை மறித்து நிறுத்துவதை விட்டுவிடு! என்றேன்.
இல்லை! இல்லை! நான் சொல்வதைக் கேளுங்கள்! இதை
படியுங்கள்! நீங்கள் பரிசுத்தமாவீர்கள் என்றார்.
நான் அந்தக் கவரை பிடுங்கி அவர் கண் முன்னே
கிழித்து எறிந்தேன்.
நீங்கள் கர்த்தரின் சாபத்திற்கு ஆளாகிறீர்கள்!
என்றார்.
மரியாதையாக வழியைவிடு!
இல்லையேல் என்னுடைய சாபத்திற்கு ஆளாவாய்! என்றேன்.
என்னுடைய பதினைந்து நிமிடங்கள் அன்று வீணானது.
அதே நபரை நேற்றும்
பார்த்தேன். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பஞ்செட்டியில் போகும் வரும்
வாகனங்களை எல்லாம் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் போல தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.
பரபரப்பான காலை நேரம்.
சிலர் அடிக்கவே வந்து விட்டார்கள். சிலர்
பரிதாபமாக பார்த்தார்கள். சிலர் விரட்டி அடித்தார்கள்.
பைத்தியம் முத்திருச்சு! டிராபிக் போலீஸ் ஆக
பணம் கொடுத்து ஏமாந்துட்டாரு! என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.
எத்தனைபேர் கொடுத்த சாபமோ?
என்று நினைத்துக் கொண்டேன். இப்போது ஏன் இவருடைய கடவுள் இவரை ஏமாறுவதில் இருந்து
காப்பாற்றவில்லை! அல்லது குறைந்தபட்சம் இப்படி மனநிலை பாதிக்கப்பட்ட இவரை இவரது
மதத்தினர் இப்படி சாலையில் அலையவிடாமல் பிறரிடம் வசவு வாங்க விடாமல் தங்களுடைய
சர்ச்சிலோ அல்லது மருத்துவமனையிலோ சேர்த்து சிகிச்சை அளித்திருக்கலாமே?
இவர் இந்துவாக இருக்கும் போது இவரை மதம் மாற்றி
மூளைச் சலவைச் செய்து பிறரை மதம் மாற்றச்சொல்லி துண்டு பிரசுரம் கொடுத்து கேன்வாஸ்
செய்ய சொன்ன அமைப்புக்கு இப்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டபோது சரிவர உதவி கூட
செய்யவில்லையே?
இப்போது எங்கு போனது அவரின் கடவுள்?
தோத்திரம் செய்து வழியில்
போகிறவர் வருகிறவர்களைக் கூட உங்கள் மதத்திற்கு மாற்ற நினைக்கும் கிறித்தவ
அன்பர்களே! உங்களுக்கு ஒரு தோத்திரம்!
மதம் என்பது ரத்தத்தில் ஊறியது! எப்படி
தாய்க்கு பிள்ளையோ அப்படித்தான் மதமும். நீங்கள் என்னதான் கூவிக் கூவி அழைத்து
ராமசாமியை ஆசிர்வாதம் என்று பெயர் மாற்றி உங்கள் மதத்திற்கு மாற்றினாலும் அவர்
ரத்தத்தில் ஊறிய இந்துமதம் மறக்க விடாது. என்றாவது ஒருநாள் அவர் தன் தாய் மத
நம்பிக்கைகளையோ சடங்குகளையோ பின்பற்றுவார். இதை அறிந்துதான் இப்போதெல்லாம் இந்துமத
சடங்குகளை எல்லாம் நீங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டீர்கள். இதெல்லாம்
உங்களுக்குத் தேவையா?
உங்களை நாங்கள் வெறுக்கும்படி உங்கள் செய்கைகளை
அமைந்துவிடுகிறது! இதை விட்டொழியுங்கள்! உங்கள் மதம் உங்கள் உரிமை என்பது போல
எங்கள் மதம் எங்கள் உரிமை! எங்கள் உரிமையில் தலையிடாதீர்கள். ஏதோ வணிகம் செய்ய
எங்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்தீர்கள். அந்த வணிகம் வர்த்தகம் மட்டுமாகவே
இருக்கட்டும் மத வணிகம் செய்வதாக இருக்க வேண்டாம்.
இந்துக்களை மதம் மாற்றித்தான் உங்கள்
பிழைப்பு நடக்க வேண்டும் என்றால் அதைவிட கேவலம் உங்கள் மதத்திற்கு இல்லை! இதை
உணர்ந்துகொள்ளுங்கள்! அனாவசியமாக எங்கோ அவசர வேலைக்கு செல்பவனைக் கூட வழிமறித்து
மத உபதேசம் செய்வதை எல்லாம் மாற்றிக் கொள்ளுங்கள்! மதங்களைவிட மனிதம் தான்
உயர்ந்தது. இதை உங்கள் கடவுளே சொல்லி இருக்கிறார் அதை பின்பற்றினாலே உங்கள் மதம்
செழிக்கும் இதை அறியாது மதவியாபாரம் செய்யாதீர்கள்!!
இந்துமத அன்பர்களே! நம் மதத்தில் இருக்கும் ஏற்ற
தாழ்வுகள் மறைந்து வருகிறது! எங்கோ சில இருக்கலாம்! நம் மதத்தில் அழுக்கு
இருக்கிறது என்றால் அதை துடைத்து சுத்தப்படுத்த வேண்டுமே தவிர பிற மதத்தில்
சேர்ந்து நீங்கள் வெள்ளையடித்து கொள்ளக் கூடாது. துன்பங்களும் இன்பங்களும்
வாழ்வின் இரண்டு பக்கங்கள்! நல்லது கெட்டது இரண்டும் அனைவர் வாழ்விலும் உண்டு.
கிறித்தவத்தில் சேர்ந்தால் வியாதி குணமாகிவிடும். பணம் கொட்டோ கொட்டென்று
கொட்டும். வீடு வாங்கலாம் மனை வாங்கலாம்! என்பதெல்லாம் சும்மா ஒரு கட்டுக் கதை.
அதை நம்பி சுயத்தை இழக்காதீர்கள்.
இந்தப் பதிவை பார்த்து பிற மத
அன்பர்கள் வருந்த வேண்டாம். நான் எந்த மதத்திற்கும் எதிரி அல்ல. மதத்திற்குள்
இருக்கும் வியாபாரிகளுக்குத்தான் எதிரி. இந்த வியாபாரிகளிடம் சிக்கி இருப்பதையும்
இழக்கும் சில அப்பாவிகளை காப்பாற்றவே இந்தப் பதிவு.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நீங்கள் கர்த்தரின் சாபத்திற்கு ஆளாகிறீர்கள்! என்றார்.
ReplyDeleteமரியாதையாக வழியைவிடு! இல்லையேல் என்னுடைய சாபத்திற்கு ஆளாவாய்! என்றேன்.
ரசித்தேன்....
ஐயா நீங்கள் சந்தித்த சிலரை வைத்து கிறிஸ்த்தவ மததையே தவறாக எண்ணியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இன்னொன்று நீங்கள் சந்தித்த அனைவரும் கீறிஸ்தவ மதத்திலேயே உள்ள பல பிரிவுகளில் சிறுபான்மையின பிரிவுகளை சேர்ந்தவர்கள் (10%) என அடித்துக் கூறுவேன். காரணம் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதாவது கிறிஸ்துவத்தின் தாய் திருச்சபையைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் பிறர் மனம் புண்படும்படியோ அல்லது கட்டாய மதமாற்ற மூளைச்சலவையோ செய்யமாட்டார்கள், அத்துடன் இந்த பிரசாதம் வாங்காமல் தவிர்ப்பது, பேச்சுக் கொடுப்பது போல் மதம் மாற்ற முயற்சிப்பது உள்ளிட்டவைகளையும் செய்வதில்லை. இடையில் மதம் மாறும் சிலர் அந்த மதத்திற்கு மாற்றியவர்கள் சொல்லிக் கொடுத்ததை பின்பற்ற முயற்சிப்பார்கள்.( நீங்கள் கூறியது போல)அது தவறெனக் கொள்ளக் கூடாது என்பது என் கருத்து. இதை எப்படிக் கூறுகிறேன் என்றால் நானும் ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவன். அதுவும் இடையில் மாறியது அல்ல, ஏறத்தாழ 400 வருடங்களாக...எங்கள் ஊரையே எடுத்துக் கொள்ளுங்கள், எங்களுடைய தேர்ப்பவனியின் போது இந்துக்களும்,இஸ்லாமியர்களும் கூட பக்தியுடன் மெழுகுதிரி, பூ கொடுத்து சிறுவத்தில் வைத்து வாங்கிக் கொள்வர். அதே போல எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் தேருக்கு நாங்களும் அர்ச்சனை செய்வோம்.அதே போல பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம்.கார்த்திகை தீபம் ஏறுவோம்.இதை நீங்கள் அனைத்து கிறிஸ்தவர்கள் வசிக்கும் ஊரிலும் ( ரோமன் கத்தோலிக்க ) கண்டிருப்பீர்கள். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் எங்களைக் காட்டிலும் அதீத ஈடுபாடு அந்த சமீபத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களிடம் இருக்கும். அது பல நேரங்களில் கொஞ்சம் எல்லை மீறும்படியும் நடக்கும். ஆனால் நான் மதங்களை நம்புபவன் கிடையாது, என்னைப் பொறுத்தவரை கடவுள் ஒருவரே.
ReplyDeleteவிரிவான விளக்கத்திற்கு நன்றி நண்பரே! கிறித்தவத்தையோ அந்த மதத்தினரையோ நான் எதிர்க்கவில்லை! எல்லா மதத்திலும் ஊடுறுவி விட்ட சில வியாபாரிகளைத்தான் எதிர்க்கிறேன் என்று பதிவிலேயே கூறிவிட்டேன். எல்லா மதமும் போதிப்பது அன்பைத்தான். அதை நம்புபவன் நான். மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteஉங்களின் கோபம் நியாயமானது தான் சார், ஒரு முறை எங்கள் ஊரில் என்னிடமே இப்படிக் கொடுத்து , அவர்கள் பிரிவுக்கு மாற வற்புறுத்தியிருக்கின்றனர், நான் அசருவேனா, நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் என்னிடமிருந்து தப்பிவிட்டார் அவர். அவரிடம் கேட்டதிலிருந்து அவர் கிறிஸ்தவத்திற்கு மாறி(பிரிவைக் குறிப்பிட விரும்பவில்லை) கொஞ்ச வருடங்கள் தான் ஆகிறது என்றார். அதேபோல என் நண்பன் (சமீபமாய் மாறியவன்)நான் நண்பர்களுடன் நெல்லையப்பர் கோவிலுக்குச் செல்வதைப் பார்த்து நீயெல்லாம், கிறிஸ்துவனா எனக் கேட்டான், அவனுடைய அதீத ஆர்வத்தின் வெளிப்பாடு எனப் புரிந்து கொண்டு பதில் கூறாமல் சென்றுவிட்டேன். இவ்வளவு ஏன் எங்கள் மத திருமணத்தில் தாலி தான் கட்டுவோம் . அதுவும் மஞ்சள் தடவிய தாலி அப்படியானால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் குறித்து தவறாக நினைக்காமல் நாசுக்காக தவிர்த்துவிடுங்கள்.
ReplyDeleteநாசூக்காக தவிர்த்துதான் வந்தேன் ஜெயசீலன்! நேற்று டிராபிக்கில் மதிய வெயிலில் அந்த கிறிஸ்தவத்திற்கு மாறச்சொன்ன அன்பர் மன நோயாளியாக அல்லல் படுவதை பார்த்த பின் தான் கோபம் அதிகமானது. மதங்களை பின்பற்றுவதில் தவறில்லை! அதை கட்டாயமாக பிறர் மீது திணித்து அவர்களுடைய நேரத்தை வீணாக்குவதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது. அன்று எனக்கு பதினைந்து நிமிடங்கள் விரயம் ஆனதுடன் மனமும் உளைச்சல் ஆனது.
Deleteஇருவருமே இதை இத்துடன் விட்டு விடுங்கள் நண்பர்களே....
Deleteஅன்புடன்
கில்லர்ஜி.
வணக்கம்
ReplyDeleteநல்ல .. விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.. எம்மதமும் சம்மதம்... எனக்கு....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ. உங்கள் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜெயசீலன் சகோ சொல்லியிருப்பது போல இவையெல்லாம் புதிதாக முளைக்கும் சபைகள் செய்வன..இவர்கள் எங்களையேக் (கத்தோலிக்கர்) கோபப்படுத்திவிடுவார்கள், அப்புறம் மற்ற மதத்தினருக்கு? ஜெயசீலன் சகோவின் கருத்தை ஆமோதிக்கிறேன். உங்கள் பதிவில் ஒன்று மட்டும் வருந்தச் செய்கிறது சகோ, //ஏதோ வணிகம் செய்ய எங்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்தீர்கள். // எங்கள் நாடு என்று நீங்கள் சொல்வதுதான்..ஜெயசீலன் அவர்கள் சொல்வது போல நாங்கள் 300-400 ஆண்டுகளுக்கு கிறித்தவராக மாறியவர்களின் வழிவந்தவர்கள்..ஆனால் இந்தியர் தான் சகோ. புரியாத சிலர் செய்யும் தேவையற்ற காரியங்களினால் நீங்கள் இப்படி நாங்கள் இந்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லிவிட்டீர்களே சகோ
ReplyDeleteதங்களை வருந்த வைத்தமைக்கு வருந்துகிறேன் சகோதரி! நாம் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் இருப்போம். ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ மதம் காலூன்றியது என்ற அடிப்படையில்தான் அந்த வாசகத்தை வைத்தேன். அது உங்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். உங்கள் மதத்தின் பல கோட்பாடுகள் சிறப்பானவைதான். உங்களின் மத அமைப்புக்களால் நடத்தப்படும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களின் சேவை பாராட்டுக்குரியது. இடையில் சில மதவியாபாரிகளின் தொல்லைதான் என்னைக் கோபப்பட செய்தது. இந்து மதத்திலும் இப்படிப்பட்ட தீவிர வாதிகள் உண்டு. அவர்களின் செய்கைகள் என்னை கோபப்படுத்தியதையும் விரைவில் பகிர உள்ளேன். பொதுவாக நான் எந்த மதத்திற்கும் எதிரி அல்ல! மதம் என்ற பெயரால் மதம் பிடித்து அலையும் சிலருடைய போக்கு பிடிக்காததால்தான் இந்தப் பதிவு. நன்றி
Deleteபரவாயில்லை சகோ. நாம் இந்தியர், மனிதர் என்றே இணைந்திருப்போம். ஆங்கிலேயர் காலத்தில் வந்தது பிற பிரிவுகள் சகோ, கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையார் (St.Thomas) முதல் நூற்றாண்டிலேயே கேரளா மற்றும் தமிழகம் வந்தார்..அப்போது இருந்தே கிருத்துவம் வந்துவிட்டது.. அதற்குப் பின் பல கத்தோலிக்க பாதிரிமார் வந்திருக்கின்றனர்..
Deleteநீங்கள் சொல்லியிருப்பது போன்ற செயல்களால் ஆங்கிலேயர் காலத்தில் தான் கிருத்துவம் வந்தது என்று பொதுவான கருத்து இருக்கிறது. இது தகவலுக்கு மட்டுமே சொல்கிறேன். உண்மைதான் அனைத்து மதத்திலும் இப்படிப்பட்ட தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்..
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் தான் இந்த மதம் மற்றும் வேலை நடைப்பெற்றதென்றால், இப்போதும் அது தொடர்வது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
ReplyDeleteilankaiyil ivarhal thirumanam enra peyaril mathamattraththai metkolhintranar. Mukkiya vidayam ivarhal mattumalla islamiyarhalum kooda.... 20000 varudankalukku munthiya thamilayum saivathayum pinpatrum emidame 1000 varudathittkul mulaithavaihalellam vaalaatuhintrana.... :(
ReplyDeleteசுரேஷ் கொஞ்சம் வலைச்சரம் வந்து எட்டிப் பாருங்கள் !!!!
ReplyDeleteமதம் என்பதே மக்களை நல்வழிப்படுத்தத் தோன்றியதுதான்
ReplyDeleteஆனால் இன்று மதத்தின் பெயரால் கலவரம், அழிவு
தளிர் - அட நீங்க இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா.. உங்கள் கோபம் நியாயமானது, அதாவது தாய் வீட்டில் இருந்த வரை இனித்த ஒரு விஷயம் மாற்றான் தாய் வீட்டில் நுழைந்தவுடன் கசக்க ஆரம்பித்துவிடுகிறது... மனநிலை பிறழ்ந்ததாய் கூறிய அந்த நண்பருக்கு என் அனேக பிராத்தனை..
ReplyDeleteஅப்புறம் இந்துக்கள் நாடு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை இந்துக்கள் பெரும்பான்மையாய் இருக்கும் நாடு என்று மாற்றிக் கொள்ளுங்கள்...
நல்ல பகிர்வு.
ReplyDeleteஒரு சிலரால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகின்றது.