தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

மூடி வைத்த வீடு!
குடிபுகுந்தது!
ஒட்டடை!

கும்மிருட்டு
கூட்டி வந்தது!
பயம்!

தொலைவில் பூத்தன!
வாசமில்லா மலர்கள்!
நட்சத்திரங்கள்!

தூண்டில் போடாமலே
சிக்கின மீன்கள்!
நட்சத்திரங்கள்!

தாகம் தீர்த்தவனை
வெட்டிப்போட்டார்கள்!
இளநீர்!

சிதறும் ஒளியில்
சீறிப்பாய்ந்தன
வாகனங்கள்!

மழலையிடம் பூக்கிறது
மாசில்லாத
புன்னகை!

குழிவிழுந்ததும்
குதூகலம்!
குழந்தையின் சிரிப்பு!

தும்பிகள் அழைத்ததும்
தூறல் ஆரம்பித்தது
மழை!

சிறைபிடித்தது
விலங்கிடவில்லை!
குழந்தையின் சிரிப்பு!

ரசமில்லை!
ரசிக்க முடியவில்லை!
கண்ணாடியில் முகம்!

முரட்டுத் தழுவல்!
சிக்கிக் கொண்டது கொடி!
காற்று!

இரவு முழுதும் சப்தம்!
கேட்க ஆளில்லை!
சில்வண்டுகள்!

சேற்றில் பூத்தன
இறகுள்ள பூக்கள்!
கொக்குகள்!

வண்டுகள் இசையில்
வளைந்து கொடுத்தன
மலர்கள்!

கள்வனே ஆனாலும்
கடவுளும் அவனே!
காற்று!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அனைத்தும் அருமை, குறிப்பாக தும்பி, மழலை, ஒட்டடை,காற்று , கொக்கு உள்ளிட்டவைகள் அருமை....

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா.
  இரசிக்கவைக்கும் வரிகள் ஐயா.பகிர்வுகப்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. நல்ல கவி நண்பரே வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. துளிப்பாக்கள் ஒவ்வொன்றும் சிந்தையைக் கவர்கிறது...

  ReplyDelete
 5. எப்பவும் போல் அருமை..

  ReplyDelete
 6. ரசிக்கவைக்கும் ஹைக்கூ கவிதைகள்

  ReplyDelete
 7. அனைத்துமே ரசித்தேன். பாராட்டுகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2