இந்த வார கவிதை மணியில் என் கவிதை!
இந்த வாரம் திங்களன்று கவிதை மணி இணைய தளத்தில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!
என் முதல் கனவு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 25th November 2017 03:52 PM | அ+அ அ- |
ஒவ்வொரு நாளும் ஒர் கனவோடு விடிகிறது!
ஒவ்வொன்றும் புதிது புதிதாய்!
ஒளிப்படமாய் மனதில் ஓடினாலும்
வெளிப்படையாய் சொல்ல மறக்கிறது!
ஒவ்வொன்றும் புதிது புதிதாய்!
ஒளிப்படமாய் மனதில் ஓடினாலும்
வெளிப்படையாய் சொல்ல மறக்கிறது!
ஆழ்மனதில் புதைந்த நினைவுகள்
கண் மூடி உறங்குகையில்
கனவாக ஓடி மகிழ்விக்கின்றன!
கண் மூடி உறங்குகையில்
கனவாக ஓடி மகிழ்விக்கின்றன!
எல்லோருக்கும் ஓர் முதல் கனவிருக்கும்!
எல்லோருக்கும் அது நினைவாவதில்லை!
நடிக்க விரும்புபவனுக்கு ஹீரோ ஆவது
முதல் கனவாயிருக்கும்!
படிக்க விரும்புபவனுக்கு பாடத்தில்
முதலிடம் வருவது முதல் கனவாயிருக்கும்!
எல்லோருக்கும் அது நினைவாவதில்லை!
நடிக்க விரும்புபவனுக்கு ஹீரோ ஆவது
முதல் கனவாயிருக்கும்!
படிக்க விரும்புபவனுக்கு பாடத்தில்
முதலிடம் வருவது முதல் கனவாயிருக்கும்!
தொழிலில் சாதிக்கத் துடிப்பவனுக்கு
தொழிலதிபர் ஆவது பெருங்கனவாயிருக்கும்!
தொழிலதிபர் ஆவது பெருங்கனவாயிருக்கும்!
என் முதல் கனவு என்பதெல்லாம்
எழுத்தறிவிக்கும் ஆசான் ஆவது!
வகையாய் வாய்ப்புக்கள் தவறியபோது
வருந்தினேன் கனவு கலைந்து!
எழுத்தறிவிக்கும் ஆசான் ஆவது!
வகையாய் வாய்ப்புக்கள் தவறியபோது
வருந்தினேன் கனவு கலைந்து!
முதல் கனவு கலையலாம்
முடிவு வரை தொடரும் கனவுகள்
என்றாவது ஒருநாள் பலிக்கும் என்ற
நம்பிக்கை இருக்கும் வரை
கனவுகள் நினைவாகும் காலம் வரும்வரை
காத்திருப்போம்! கனவுகளை
உயிர்த்திருப்போம்!
முடிவு வரை தொடரும் கனவுகள்
என்றாவது ஒருநாள் பலிக்கும் என்ற
நம்பிக்கை இருக்கும் வரை
கனவுகள் நினைவாகும் காலம் வரும்வரை
காத்திருப்போம்! கனவுகளை
உயிர்த்திருப்போம்!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!
Comments
Post a Comment