தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தவாரம் என் மகள்கள் பெயரிலும் இரு கவிதைகள் எழுதினேன். எனது ஒன்று என மூன்று கவிதைகள் பிரசுரம் ஆயின. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

யாருமில்லாத மேடையில்: எஸ். வேதஜனனி

By கவிதைமணி  |   Published on : 19th November 2017 04:52 PM  |   அ+அ அ-   |  
யாருமில்லாத மேடையில் அரங்கேறுகிறது
வாழ்க்கை நாடகம்!
நாளொரு காட்சிகள்!
பொழுதொரு வசனங்கள்!
இயக்கி வைக்கிறான் இறைவன்!
நாடக மேடையில் விமர்சனம் உண்டு!
நடக்கும் வாழ்க்கையிலும் விமர்சனம் உண்டு!
நாடக மேடைக்கு பார்வையாளர்கள் உண்டு!
வாழ்க்கை நாடகத்தில் பார்வையாளர் நாமே!
 மேடை நாடகத்திற்கு கட்டணச்சீட்டு!
வாழ்க்கை நாடகத்திற்கு பயணச்சீட்டு!
நாளொன்று கழிகையில்
செலாவணி ஆகிறது மேடைக்காட்சிகள்!
நெடுந்தொடர் ஆயினும்
நிறைவே பெறுவதில்லை வாழ்க்கை நாடகம்!

யாருமில்லா மேடையில்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 19th November 2017 02:49 PM  |   அ+அ அ-   |  
ரசிக்க யாருமில்லைதான்!
ஆனாலும் அழகாய் பூத்துக்குலுங்குகின்றன
காட்டுப்பூக்கள்!
கேட்பவர்கள் யாருமில்லைதான்
கானம் பாடுகின்றன குயில்கள்!
மேகம் திரளும் போதெல்லாம் ஆடும்
மயில்களை ரசிக்கக்கூட யாருமில்லை!
ஓடையில் நீந்தும் மீன்கள்
துள்ளி ஓடும் மான்கள்! -வாழும்
ரசிக்க யாருமில்லா மேடைதான் காடு!
மனிதன் வாழும் ஒவ்வொரு நாளும்
ஒர் நாடகம்
ஆளில்லாத மேடையில் அரங்கேறும் காட்சிகள்
ஓரங்க நாடகத்தில் ஒவ்வொருவரும் 
ஓர் பாத்திரம் ஏற்க
யாருமில்லா மேடையில் தொடர்கிறது
வாழ்நாள் நாடகம்!
கைதட்டல்கள் இல்லை!
சீட்டியொலிகள் இல்லை!
சீராக செல்கிறது நாடகம்!
கதாபாத்திரங்கள் மாறிக்கொண்டே போக
முடிவில்லாமல் பயணிக்கிறது
மெகாத்தொடராய் வாழ்க்கை நாடகம்!
யாருமில்லா மேடைதான்!
பேர் எடுக்கிறார்கள் பலர்!
பேர் கெடுகிறார்கள் சிலர்!
கதை வசனம் கடவுள் என்பதால்
காட்சிகள் நம் கையில் இல்லை!
ஆட்டுவிக்க ஆடுகின்றோம்
யாருமில்லா மேடையில்!
ஆடி முடித்த பின் எல்லோரும்
ஓடி நிற்பதுவே ஒரே மேடை!

யாருமில்லாத மேடை: எஸ். போதனா

By கவிதைமணி  |   Published on : 19th November 2017 01:56 PM  |   அ+அ அ-   |  
யாருமில்லாத மேடை!
உறங்கிக்கொண்டிருக்கிறது
ஒலிப்பெருக்கி!
 
யாருமில்லாத மேடை
அசைப்போட்டது!
பழைய நினைவுகள்!
பேசியவர்கள் கலைந்து போக
தனித்துவிடப்பட்டது
யாருமில்லாத மேடை!
திரை விழுந்ததும்
கலைந்து போனது காட்சி!
யாரும் இல்லாத மேடை!
காலி இருக்கைகள்!
சீட்டிஅடித்த அணில்கள்!
யாருமில்லாத மேடை!
இடம் நிரப்பிய இருக்கைகள்!
அடைத்துக்கொண்டன!
யாருமில்லாத மேடை!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது சுரேஷ்! மேடை உங்களுக்கு மேடை போட்டுவிட்டது!!! சூப்பர்!வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2