நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 13

நொடிக்கதைகள்! பகுதி 13

புகார்!

 தன்னுடைய பிள்ளை எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பதாக தோழியிடம் வாட்சப்பில் சாட்டிங் செய்து கொண்டிருந்தாள் ரமா.

அறை!
   ஒரே ஓர் அறை தான் விட்டேன்! நான் செஞ்ச ஊழல் எல்லாம் மறைஞ்சு போயிருச்சுலே! என்று அட்டகாசமாய் சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தார் அந்த அரசியல் கட்சி தலைவர்.

முரண்!
   மதுவை எதிர்த்து போராட்டம் செய்து போராடிக்கொண்டிருந்த வேலையில்லாத இளைஞனுக்கு திடீர் என்று வேலை கிடைத்தது டாஸ்மாக் சூப்பர் வைசராக.

ஓய்வு!

   30 ஆண்டுகள் அலுவலகப் பணி செய்து 58 வயதில் ஓய்வு பெற்று வீடு திரும்பியவருக்கு ஒதுக்கப்பட்டது ஈ.பி பில், கட்டும் பணி, பால் காய்கறி வாங்கும் பணியோடு ஓவர் டைமாக பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பணி.

லாக்!
  பல நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி சர்வீஸ் செய்து தரும் மோகனிடம் வந்து செல்போனை நீட்டிய அவள் மகள் “ அப்பா உங்க போனுக்கு நீங்க போட்டிருந்த லாக்கை ஈசியா உடைச்சிட்டேன்!” என்றாள்.

மாற்று வைத்தியம்!

   நகரின் பிரபல மருத்துவமனையில் பிரபல ஆர்த்தாலாஜிஸ்ட் பலருக்கும் சிறப்பு மருந்துகள் கொடுத்து குணப்படுத்துபவர்  தன்னுடைய மூட்டு வலிக்கு நாடினார் சித்த வைத்திய சிரோண்மனி வைத்தியலிங்கத்தை!

கூட்ட நெரிசல்!
  நகரின் பிரபலமான கோயில் ஆடி அமாவாசை கூட்டம் அள்ளியது. நெரிசல் தள்ளு முள்ளு எல்லோரும் அவதியோடு சாமி கும்பிட காத்திருந்த போது வரிசையில் மகிழ்ச்சியோடு இருந்தான் பிக்பாக்கெட் மாரிமுத்து! இன்னிக்கு கலெக்‌ஷன் அள்ளிடலாம்!

அதிர்ச்சி!

     அடித்து பிடித்து பலரின் சிபாரிசுகளை பெற்று சில லட்சங்களை கொடுத்து அந்த கல்லூரியில் இடம் வாங்கி மகிழ்வோடு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இருந்தார்கள்.

ஆடி!
    ஆடி மாசம்! பிரித்து வைத்திருந்த புதுமணத் தம்பதிகள் நள்ளிரவில் கூடிப்பேசினார்கள் வாட்சப் சாட்டிங்கில்!

பாரம்!
   எல்லோருடைய பாரத்தையும் இறக்கி வைக்கும் கடவுளை சுமந்து கொண்டிருந்தார்கள் வீதி உலாவில் பாரம் தூக்கிகள்.

செல்ஃபி!
   மலை உச்சியில் செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்ய ஆசைப்
                 பட்டவர்களின் படங்கள் அப்லோட் ஆகிக்கொண்டிருந்தது பத்திரிக்கைகளில் கடைசிபக்கத்தில் மலை உச்சியிலிருந்து விழுந்து இறந்தவர்கள் என்ற தகவலோடு!

போலி!

   பிரபல பிராண்ட்களின் பெயரில் போலிப் பொருட்களை தயாரித்து விற்றுக்கொண்டிருந்தவர் போலீஸ் கெடுபிடி அதிகரித்ததும் தொழிலை மாற்றிக்கொண்டார். போலி சர்டிபிகேட் போலி முத்திரைத் தாள் தயாரித்து விற்க ஆரம்பித்தார்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   

Comments

  1. அருமை அனைத்தும். சூப்பரா எழுதுகின்றீர்கள் சுரேஷ். வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் பாரட்டறீங்க! ஆனா பத்திரிக்கைகளுக்கு அனுப்புனா பிரசுரம் ஆக மாட்டேங்குது! ஏதோ ஓர் குறை இருக்கு! அது எதுன்னு இன்னும் பிடிபட மாட்டேங்குது!

      Delete
  2. நொடிக்கதைகளில் கலக்குறீங்க....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார்! இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று தோன்றுகிறது! அதற்கான பயிற்சிக் களமாக வலைப்பூவை தேர்ந்தெடுத்து உள்ளேன்! உங்களின் ஆலோசனைகளை வழங்குங்கள்! நன்றி!

      Delete
  3. ஒரு நொடி அனைத்தும் சரவெடிக் கதைகள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எல்லாமே ரசிக்க வைத்தது நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. குட்டி... குட்டி கதைகள் ஆனால் கருத்தான கதைகள். அருமை.

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2