நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 17

நொடிக்கதைகள்!   பகுதி 17


வாஸ்து!
    பிரபல அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்கு ப்ளான் போட்டுத்தரும் இஞ்ஜினியர் குமார் தன் புது வீட்டிற்கு ப்ளான் போட்டுத் தரும்படி வாஸ்து ஜோஸியரிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஓசி!
    எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? காலையிலே வந்து கடையை திறந்தாத்தானே வியாபாரம் நல்லா நடக்கும்? சலூன் கடை வாசலில் காத்திருந்தவன் கோபத்துடன் கேட்டுவிட்டு சரி சரி அந்த பேப்பரை இப்படிக் கொடு என்று பேப்பரை விரித்து வாசிக்க ஆரம்பித்தான்.

பழங்கதை!
       இப்படித்தான் போனவருஷம் விடாது அடை மழை பேய்ஞ்சது….! என்று ஆரம்பித்த அப்பாவிடம் சரி சரி! அதெல்லாம் பேஸ்புக் மெமரீஸ்லே பார்த்து ஷேர் பண்ணிட்டேன்! விடு விடு! உன் பழங்கதையை என்றான்.

மடிப்பு!

     ”ஒரு நாளைக்கேனும் உங்க துணிகளை நீங்க மடிச்சு வைச்சுக்க கூடாதா?” என்றவளிடம் ”அப்புறம் நீ எதுக்கு இருக்கே? ”என்று கெத்தாக கேட்டவன் துணிக்கடையில் நுழைந்ததும் மடித்து வைக்க ஏராளமான புடவைகள் காத்து இருந்தன.

க்ளீன் போல்ட்!
   சாக்லெட் நிறைய சாப்பிட்டா பல் சொத்தையாயிரும்னு சொல்லி எனக்கு மட்டும் சாக்லெட் வாங்கி வரமாட்டேங்கிற! ஆனா ஸ்மோக் பண்ணா லங்ஸ் ஓட்டையாயிரும்னு தெரிஞ்சும் நீ மட்டும் தினமும் ஸ்மோக் பண்றியேப்பா! என்று மகள் கேட்டபோது பதில் கூற முடியாமல் முழித்தான் அசோக்.

பீப்புள் மைண்ட்!
     வரிசையாக ஜெயித்துக்கொண்டிருந்த அணியை பாராட்டிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாள் திடீரென தோற்கவும் “ மச்சி பிக்ஸிங்க்”டா என்று தூற்ற ஆரம்பித்தார்கள்.


ரிடையர்மெண்ட்!
    ரிடையர்மெண்ட் வயதை 60 ஆக அதிகரிக்க எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் 80 வயதிலும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தார் அமைச்சர் பதவியை..

 ஒழுங்கு!
    நடக்க கூட இடம் இல்லாம ப்ளாட்பார்ம் முழுக்க கடை விரிச்சிடறாங்க! ஒரு டிஸிப்ளின் கிடையாது. ஜனங்க கிட்டே!  தடுக்க வேண்டிய போலீஸ் காசு வாங்கிட்டு வேடிக்கை பார்க்குது! புலம்பிக் கொண்டே நடந்தவன் சுரங்கப்பாதையை தவிர்த்துவிட்டு  சாலையை வேகமாக கடந்தான்.

சாபம்!
    வி.ஐ.பி தரிசனம் என்று சிபாரிசோடு குறுக்கே புகுந்து ஃப்ரியாக சாமி தரிசனம் செய்து ஆசி பெற்றவர் சாபம் வாங்கிக் கொண்டிருந்தார் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்ற பக்தர்களிடம்!

பெவி குயிக்!
     அப்பா! நாளைக்கு வரும்போது பெவி குயிக் வாங்கிட்டு வர்றியா? என்ற குழந்தையிடம் எதுக்குப்பா அது? என்று கேட்டான் பிஸினஸ்மேன் சுதாகர். அது உடைஞ்சதை ஒட்டுமாமே நீதானே அம்மாக்கிட்டே நம்ம உறவு உடைஞ்சு போச்சுன்னு சொன்னியே என்றது குழந்தை.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. அருமை அத்தனையும்....ரசித்துப்படித்தோம்....தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கற்பனை இளவரசர்... ஊ..ஹூம்.. கற்பனை மன்னர்... இல்லை, இல்லை கற்பனைச் சக்கரவர்த்தி நீங்கள் சுரேஷ். மழையாய் பொழியறீங்க!

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன். பெவி குவிக் நன்றாக ஒட்டிவிட்டது.

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. கடைசி கதை மனதைத் தொட்டது....

    ReplyDelete
  5. பெவி குயிக்! - அது
    அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. பெவி குயிக் மனதில் ஒட்டி விட்டது.

    ReplyDelete
  7. நல்ல கதைகள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமை சுரேஷ்! அனைத்தும். ஃபெவிகுயிக் நன்றாகவே ஒட்டிக் கொண்டது...முதல் கதையும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2