நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 15

நொடிக்கதைகள்!  பகுதி 15

 பேஸ்புக் துக்கம்!

    துக்க வீடு நிறைந்திருந்தது செல்போன் கேமரா ஒளிவெள்ளத்தில்!

  ஊடகக் கொலை!
   இறந்து போனார் பிரபலம்! மரணத்திற்கு காரணம் கற்பித்து எழுதி கொலை செய்துகொண்டிருந்தன ஊடகங்கள்!

போராளி!

   டூ வீலர் பார்க்கிங்கில் பில்லை விட ரெண்டு ரூபாய் அதிகம் கேட்டதற்கு பொங்கி எழுந்த போராளி மாலையில் டாஸ்மாக்கில் சரக்கடிக்கும் போது ரெண்டுரூபாய் வாட்டர் பாக்கெட்டிற்கு அஞ்சு ரூபாய் தாராளமாய் கொடுத்தான்.

பூமராங்!
  “எப்ப பாரு சோட்டா பீம் பார்த்துக்கிட்டு இருக்கா? படிக்கறதே இல்லை! கொஞ்சம் கண்டிச்சு வைங்க! என்று மிஸ்ஸிடம் சொன்னபோது, “எப்ப பாரு பேஸ் புக் பார்த்துட்டு இருக்காரு! ஹோம் ஒர்க் சொல்லிக் கொடுக்கவே மாட்டேங்கிறாரு மிஸ்! என்றது குழந்தை!

சலிப்பு!
   முப்பது வருடங்களுக்கு முன் கிராமத்து வாழ்க்கையை வெறுத்து நகரத்துக்கு வந்தவன்  சலித்துப் போய் இப்போது அந்த நவீன கிராமத்து உணவகத்தில் மண்பாண்ட சமையலை ருசித்துக் கொண்டிருந்தான்.

கிழிந்த நோட்டு!
   கிழிந்த நோட்டுக்களை கொள்ளையடிச்சு என்ன பண்றது? மாத்தினா மாட்டிக்குவோம்! என்றவனை கையமர்த்தி “நல்ல நோட்டுக்களா அடிச்சு மாத்திருவோம்! என்றான். சில மாதங்களில் அதே எண்களில் படையெடுத்தன கள்ள நோட்டுக்கள்.

புகார்!

      “வெளியே போய் நாலு பசங்களோட விளையாடிட்டு வா! உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு சொன்னா எங்க கேக்கறான்? எப்ப பாரு செல் போன்ல வீடியோ கேம்ஸ் ஆடிக்கிட்டு இருக்கான் என்று புலம்பினார் தாத்தா.

செல்ஃபி!
    வயலை உழுது முதல் முதலாய் நாற்று நட்டதை செல்ஃபி எடுத்து பகிர்ந்தான் ரமேஷ். விளைச்சல் அமோகம் ஆயிரம் லைக்ஸ் விழுந்தது.

குருப்!

  “ என்னங்க நீங்க! விவரம் புரியாத ஆளா இருக்கீங்க! நாலுபேரோட சேர்ந்து ஒரு குருப்பா இருந்தாத்தான் மதிப்பு! இப்படியே தனியே எத்தனை நாளைக்கு இருப்பீங்க? ஒரு பய மதிக்கமாட்டான்! என்னையே எடுத்துக்கோங்க ஆறு குருப்ல  இருக்கேன்! நீங்களும் சேர்ந்திருங்க! என்னோட குருப்லேயே சேர்த்திடறேன்! என்று சேர்த்துவிட்டார்கள். அடுத்த நொடி முதல் குருப்பாய் வாட்ஸப்பில் தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.

நட்பு!
   தொலைந்து போன தனது பள்ளிக்கால நட்புக்களை தேடிக்கொண்டிருந்தான் மகேஷ் தன்னுடைய பேஸ்புக்கில்.

 நினைவு!
       பொம்மை பன்னீர் தூவி வரவேற்க நுழைந்தவுடன் ரிசப்ஷனில் வரிசைகட்டி நின்று கவர்கொடுத்து மணமக்களுடன் போட்டோ எடுத்து அதை பேஸ்புக்கில் பகிர்ந்து வாழ்த்து சொல்லி டின்னரில் முட்டி மோதி இடம்பிடித்து கேட்டரிங் பெண்மணி செயற்கை சிரிப்புடன் தரும் தாம்பூலம் வாங்கி விடைபெறுகையில் நினைவில் வந்து தொலைக்கிறது அந்தகாலத்து கல்யாண வீடு!

தேடல்!
   கல்யாண வீட்டில் கொடுத்த தென்னங்கன்றை வைக்க இடம் தேடிக்கொண்டிருந்தார்  அப்பார்ட்மெண்ட் வாசி.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

 1. சமீபத்து முத்துக்குமார் மரண அரசியலைக் கூட கதையில் சேர்த்து விட்டீர்கள் போல.. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 2. அதே எண்களில் படையெடுத்தன கள்ள நோட்டுக்கள்....இந்த ஐடியாவை உண்மையில் செயல் படுத்தப் போகிறார்கள் கொள்ளையர்கள் :)

  ReplyDelete
 3. நொடிக் கதைகள்
  எல்லாம் ஹைகூக் கதைகள்
  எனவே சொல்லலாம்
  முடிவு அத்தனை சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அனைத்துமே அருமை. ரூபாய் நோட்டினை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
 6. அனைத்தும் நன்று,

  ReplyDelete
 7. கிழிந்த நோட்டு, சமீபத்தில் நடந்தவற்றை நினைவூட்டியது! :(

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெற்றி உன் பக்கம்! கவிதை!

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!