கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 75
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி
75
1. பொண்ணு பார்க்க வந்த இடத்திலே என்ன கலாட்டா? எதுக்கு போலீஸ்
வந்துருக்கு!
மாப்பிள்ளை பையன் தன்னை 14 நொடிக்கு
மேலே உத்து பார்த்தாருன்னு பொண்ணு கம்ப்ளைண்ட் பண்ணிருச்சாம்!
2. தலைவர் தன்னோட வெயிட்டை காட்டிட்டார்னு எப்படி சொல்றே?
சட்டசபைக்குள்ள போகும்போது நடந்து
தனியாப் போனார்! இப்ப நாலுபேரு தூக்கிட்டு வராங்களே!
3. மன்னா! பத்து செகண்ட்களில் உங்க கதையை முடித்துவிடுவேன் என்று
எதிரி கொக்கரிக்கிறான்!
தக்க சன்மானம் கொடுத்து அனுப்பிவிடுங்கள் தளபதியாரே!
4. அந்த மைனர் கோயில் சொத்துக்கு உரிமை கொண்டாடறாரா எப்படி?
கோயில் மைனர் சொத்துன்னு யாரோ
சொன்னாங்களாம்!
5. தலைவர் எதுக்கு சபையில கைவிரலை காட்டி காட்டி ஏதோ சைகை பண்றார்?
கவன ஈர்ப்பு தீர்மாணம் கொண்டுவர
முயற்சி பண்றாராம்!
6. எங்கள் மன்னரின் கை கொடுத்து கொடுத்து சிவந்து இருந்திருக்கிறது
தெரியுமா?
ப்பூ! இதென்ன பிரமாதம்! எங்கள்
மன்னரின் முதுகு வாங்கி வாங்கி வீங்கிப் போயிருக்கிறது!
7. தலைவரை வச்சு நிறைய பேரு பெட்டிங் நடத்தறாங்களாமே!
ஆமாம்! சபையை விட்டு எத்தனை நிமிஷத்துலே
வெளியே வருவாருன்னு ஆளாளுக்கு பெட் கட்டறாங்க!
8. தலைவர் ஆனாலும் அப்பாவியா
இருக்கார்?
எப்படி?
புயல் சின்னம் வலுவடைஞ்சிருக்குன்னு
சொன்னதும் அந்த சின்னத்தையே நம்ம கட்சிக்கு வாங்கிடனும்னு சொல்றார்!
9. ரெண்டு நாள் நல்லா தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போயிரும்னு
டாக்டர் சொல்லியும் தூங்க முடியலை!
ஏன்?
ரெண்டு நாளும் பண்டிகை வந்து ஆபீஸ்
லீவா போயிருச்சே!
10. வயிறு உப்புசமா இருக்குன்னு
டாக்டர்கிட்டே போனியே என்ன ஆச்சு?
பர்ஸுல இருந்த காசை ஜீரணம் பண்ணிட்டு
அனுப்பிச்சிட்டார்!
11. எதிரி வீரர்கள் ஆளுக்கு ரெண்டு பேர்களை தூக்கி அடிக்கும் வல்லமை
பெற்றவர்களாம்…!
நம்ம வீரர்கள்!
ஆளுக்கு ரெண்டு பீர்களை தூக்கி
அடிப்பார்கள் மன்னா!
12. ஜெயிலுக்கு வந்த கபாலியோட
அலும்பு தாங்க முடியலை சார்…!
என்ன பண்றான்?
வந்துட்டேன்…! திரும்ப வந்துட்டேன்னு சொல்லுங்கறான்!
13. புலவர்மேல் அரசர் ஏன் கோபமாய் இருக்கிறார்?
வாட்சப் சாட்டில் ராணியாரோடு கடலை
போட்டுக் கொண்டு இருந்ததை கண்டுபிடித்து விட்டாராம்!
14. ரெஸ்லிங்க் வீராங்கனையை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போயிருச்சா
ஏன்?
அடிக்கடி “மல்லு” கட்டறாளே!
15. ஆனாலும் நம்ம தலைவரை
இப்படி கலாய்க்க கூடாது…!
என்ன ஆச்சு?
தமிழ் நாட்டின் “கனவு கானும் முதல்வரே!”ன்னு
பேனர் வைச்சிருந்தாங்களாம்!
16. டீ வீ சீரியல் டைரக்டர்
வீட்டுல சம்பந்தம் பண்ண நினைச்சது தப்பா போயிருச்சு!
ஏன்?
முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி
திடீர்னு மாப்பிள்ளையை மாத்திட்டேன்னு சொல்றாங்க!
17. மன்னர் ஏன் சுரத்தில்லாமல்
இருக்கிறார்?
அவரின் ராத்திரி போக்குவரத்தெல்லாம்
ராணியாருக்குத் தெரிந்துவிட்டதாம்!
18. தலைவர் சபையில பேசினதுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸாமே!
ஆமாம்! இன்னிக்கு மட்டும் ஆயிரம் மீம்ஸ் போட்டு
கலாய்ச்சு இருக்காங்கன்னா பார்த்துக்கயேன்!
19. நம்ம கட்சியிலே இருந்து
அவ்வளவு சீக்கிரம் யாரையும் இழுக்க முடியாதுன்னு தலைவர் பெருமைப்பட்டுக்கிறார்…!
எப்படி…?
எல்லோரும் வெயிட்டான பார்ட்டிங்களாம்!
20. மன்னர் இப்போதெல்லாம்
நிறைய செல்ஃபி எடுத்துக் கொள்கிறாரே!
பேஸ்புக்கில் நிறைய குல்ஃபிக்களுடன்
தொடர்பில் இருக்கிறாராம்!
21. தலைவர் மேல அவங்க சம்சாரம் கோபமா இருக்காங்கன்னு எப்படி சொல்றீங்க?
ஒரு வாரம் கேரளாவுக்கு போய் வாங்கன்னு அனுப்பி வைக்கிறாங்களே!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
#ஒரு வாரம் கேரளாவுக்கு போய் வாங்கன்னு அனுப்பி வைக்கிறாங்களே!#
ReplyDeleteஅப்படியென்ன கேரளாவில் விசேசம் ,ஆயில் மசாஜ் பண்ணிக்கப் போறாரா :)
14 செகண்ட் உத்து பாத்தா சிறையிலே தள்ளிடுவாங்க ஜி அதுக்குத்தான் திட்டம் போட்டு அனுப்பி வைக்கிறாங்க!
Deleteசிரித்தேன்
ReplyDeleteரசித்தேன் நண்பரே
அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteCurrent affairs பற்றிய ஜோக்ஸும் ஸூப்பர்.
ReplyDeleteநிறைய ஜோக்ஸ்....
ReplyDeleteரசித்தேன்...
விரைவில் புத்தகம் ஆக்குங்கள்...
ரசித்தேன் சகோ
ReplyDeleteகேரளா முதல்லே எனக்கும் புரியலை! அதே போல் நாலாவதும் மைனர் சொத்து கோயில் புரியலை. மற்றவை நன்றாக இருக்கின்றன.
ReplyDelete