தளிர் சென்ரியூ கவிதைகள்!

தளிர் சென்ரியூ கவிதைகள்!


1.   கோடிகளில் வியாபாரம் ஆக
ஆயிரங்களை இழந்துகொண்டிருந்தான் 
சினிமா ரசிகன்!

2.   ஒளிவு மறைவோடு
ஓட்டம் பிடிக்கும் வியாபாரம்!
குட்கா!

3.   கலப்புத் திருமணம்
கற்பிழந்தன நதிகள்!
சாயப்பட்டறை கழிவு!

4.   இறந்த வயல்களில்
எழுந்தது ஒப்பாரி!
தொழிற்சாலை சத்தம்!

5.   கன்றும் குடிக்கவில்லை!
கடவுளும் குடிக்கவில்லை!
மண் குடித்தது பால்!


6.   ”குடி” உயர உயர
”கோ” இழக்கிறது
தரம்!

7.   அடிக்கிற கை!
பகைத்துக்கொண்டது!
அரசியல்.


8.   ஏக்கங்கள் நிறைந்தாலும்
பதக்கங்கள் நிறையவில்லை!
ஒலிம்பிக்!

9.   கனவுகளோடு வந்து
நினைவுகளோடு திரும்புகின்றனர்
சினிமா

10. தேர்வுத்தாள்களில்
துப்பப்படுகின்றது
திணிக்கப்படும் கல்வி!

11. நாணயம் தொலைந்ததை எண்ணி
நாணயங்களில் சிரித்துக் கொண்டிருக்கிறார்
காந்தி!

12. சீறும் வாகனங்கள்
சிமிட்டி நிறுத்திவிடுகின்றது
சிவப்பு விளக்கு!

13. காசு கொடுத்து சேர்க்கிறோம்
களவாணிப்பயல்களை!
அலைபேசி ஆப்ஸ்!

14. குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
வெப்பம் ஏற்றிக் கொண்டிருந்தது
பூமியை!

15. சாலைகள் அகலமாகையில்
தொலைந்து போயின
கிராமங்கள்.

16. இரண்டு தமிழர்கள் இடையே
சகஜமாக கலந்துகொண்டது
ஆங்கிலம்!

17. நல்ல சினிமா எடுத்தார்கள்!
வெளியானது விரைவில்
திருட்டு விசிடி!

18. புத்தகம் வெளியானதும்
தொலைந்து போனார்கள்
நண்பர்கள்!

19. ஒளிந்த ஆறுகளை
தேடிக்கொடுத்தது
அதிக மழை!


20. ஒடாமல் நின்றே
சம்பாதித்தார் கடவுள்!
சிறப்பு தரிசனம்.

டிஸ்கி}  தங்கையின் சீமந்த முகூர்த்தத்திற்காக நாளை சென்னை குரோம்பேட்டை வருகிறேன்! சென்னைப் பதிவர்களை சந்திக்க விருப்பம். நேரம் கிடைத்தால் சந்திக்கலாம். தொடர்பு எண்கள்: 9444091441. 9003880189

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2