கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 76

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 76


1.   மன்னா! நம் சிப்பாய்கள் எதிரியிடம் விலை போய்விட்டார்கள்!
”சீப் பாய்கள்” ஆகிவிட்டார்கள் என்று சொல்லுங்கள்!


2.   தலைவர் தன் வாழ்நாள்ல போலீஸ் ஸ்டேஷன் படி ஏறினது இல்லையாமே!
ஆமாம்! எப்பவும் குண்டு கட்டா தூக்கிட்டுதான் போவாங்க!
3.   மன்னர் ரொம்ப செல்பிஷ்ஷா இருக்கிறார்னு தளபதியார் புலம்பறாரே!
நாட்டிய பெண்களோடு செல்ஃபி எடுக்கும்போது தளபதியை உடன் சேர்த்துக்கொள்வதில்லையாம்!

4.   தலைவர் ரெகுலரா பாட்டுக்கிளாஸ் போறார்னு சொல்றியே எங்கே?
சட்ட சபைக்குத்தான்!

5.   தலைவர் கையில கிடாரோட எங்க கிளம்பிட்டார்…?
சட்ட சபைக்குத்தான்!

6.   நகைக் கடன் தரோம்னு சொன்னோம் அதுக்காக நீங்க உங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போட்டுகிட்டு போறதுக்கெல்லாம்  நகை இரவல் கேக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

7.   திருடனை பிடிக்காம விடமாட்டேன் என்று மன்னர் கர்ஜிக்கிறாரே எந்த திருடன்?

         மன்னர் கிரிமினல் கேஸ் விளையாடுகிறார் அதைத்தான்
        சொல்கிறார் 


8.   தலைவர் ஏன் ரொம்ப வருத்தமா இருக்கார்?
  போட்டி சட்டசபையிலே கூட அவருக்கு முதல்வர் போஸ்டிங் கொடுக்க மாட்டேங்கிறாங்களாம்!

9.    என் மனைவி விருப்பப்பட்ட ஸ்கூல்லே பையனுக்கு எல்கேஜி சீட் வாங்கிட்டேன்!
அப்ப இத்தனை நாளா கஷ்டப்பட்டு சேர்த்த பணமெல்லாம் நஷ்டப்பட்டு போச்சுன்னு சொல்லு!

10. அந்த டாக்டருக்கு நக்கல் அதிகம்!
எப்படிச் சொல்றே?
அவரு ஆபரேஷன் பண்ண போற பேஷண்ட் டெட் லைன்ல இருக்கிறதா சொல்றாரே!

11. மன்னர் போர் என்றதும் முதல் ஆளாய் நிற்பார்!
போர்க்களத்திலா…
 ஊகும்! பதுங்கு குழியில்! 

12. புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?
மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!


13. எங்கள் தலைவர் அடிக்கடி வெளிநடப்பு செய்வார்தான்! அதற்காக அவருக்கு சபையில் இருக்கை ஒதுக்காத ஆளுங்கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்!

14.  பொண்ணு பார்க்க நல்லாத்தான் இருக்கும் வாய் மட்டும் கொஞ்சம் செவந்திருக்கும்…!

  அப்ப ”செவ்”வாய் தோஷம்னு சொல்லுங்க!

15. எதிரி அசரும் நேரம் பார்த்து நம் மன்னர்…!
  புகுந்து தாக்கிவிட்டாரா?
இல்லை! மீம்ஸ் போட்டுத் தாக்கிவிட்டார்!

16.   அவர்கிட்ட எப்ப கடன் கேட்டாலும் டைட்டா இருக்கு அப்புறம் பார்க்கலாம்னு சொல்றாரே
  அவர் போட்டிருக்கிற பாண்ட் ரொம்ப டைட்டா இருக்காம் பணம் எடுக்க முடியாதாம்!


17. செல்போன் மணி அடித்தவுடன் மன்னரை காணவில்லையே என்ன ஆச்சு?
எதிரி மிஸ்டு கால் கொடுத்தவுடன் மன்னர் மிஸ் ஆகிவிட்டார்!

18. தலைவர் கட்சிக்காக மாடுமாதிரி உழைச்சார்…!
அப்புறம்!
கறக்கற வரைக்கும் கறந்துட்டு விரட்டி விட்டுட்டாங்க!
19. தலைவர் ரொம்ப சோகமா இருக்காரே ஏன்?
இப்பல்லாம் அவரை நக்கல் பண்ணி யாரும் மீம்ஸ் போட மாட்டேங்கிறாங்களாம்!

20.  ஆடி போய் ஆவணி வந்தா மாற்றம் வரும்னு ஜோஸ்யன் சொன்னது பலிச்சிருச்சு தலைவரே!
   என்ன என்ன?
உங்களை புழல்ல இருந்து வேலூருக்கு மாத்திட்டாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

     

Comments

 1. ரசித்தேன்
  சிரித்தேன் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 2. அனைத்தும் ரசித்தோம் அதுவும் முதலும் கடைசியும்....அருமை...மீம்ஸ் ஜோக் உட்பட...

  ReplyDelete
 3. ரசித்தேன் சிரித்தேன்.

  ReplyDelete
 4. ரசித்து படித்து சிரித்தேன்.

  ReplyDelete
 5. ரசித்து படித்து சிரித்தேன்.

  ReplyDelete
 6. அனைத்தையும் ரசித்தேன். இதழில் உங்கள் நகைச்சுவை வெளியானதறிந்து வாழ்த்துகள். (முகநூலில் பார்த்தேன்)

  ReplyDelete
 7. ரசித்தேன்... செவ்வாய் ஹா...ஹா...

  ReplyDelete
 8. அனைத்தும் அருமை. ரசித்தேன்.!

  ReplyDelete
 9. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.

  ReplyDelete
 10. ஆறாவது நகைச்சுவை வங்கியில் நடக்கலைனாலும் அக்கம்பக்கம் வீட்டுக்காரங்களிடம் இரவல் நகை வாங்கிப் பல பெண்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு அணிந்து செல்வதுண்டு.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!