கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 73

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 73


1.   ஆடிக்கார் வேணும்னு உன் மாமனாரை கேட்டு நச்சரிச்சுக்கிட்டிருந்தியே வாங்கி கொடுத்திட்டாரா?
ஆடித் தள்ளுபடியிலே ஒரு காரை வாங்கிக் கொடுத்து அப்பப்ப தள்ளும்படி பண்ணிட்டாரு!


2.   ”ஆடி சேல்”ல வீட்டுக்கு ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கினது தப்பா போயிருச்சு!
ஏன்? என்னாச்சு!
அடிக்கடி ரிப்பேர் ஆகி சர்வீஸ் செண்டருக்கு ஓடிப் போக வேண்டியிருக்கே!

3.   தலைவர் தன்னோட போட்டோவை ப்ரிஸ்மாவுல அப்லோட் பண்ணி போட்டாராமே?
ஆமா! அதை பார்த்து எல்லோரும் அப்படியே “ப்ரீஸ்” ஆகி நின்னுட்டாங்க!

4.   ஹீரொயின் ஏன் கோபமா இருக்காங்க!
பிரிஸ்மாவுல அப்லோட் செஞ்ச அவங்க படத்தை பார்த்த டைரக்டர் அடுத்த நடிக்க போற படத்துல பேய் கெட்டப்ல வர்றீங்களான்னு கேட்டுட்டாராம்!


5.   ஓட்டல் ரிசப்ஷன்ல என்ன கலாட்டா?
  தமிழார்வலரான தலைவர் ஒர் அறை கிடைக்குமான்னு கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் பளார்னு அறைஞ்சிட்டாங்களாம்!

6.   தலைவர் ஏன் அவருக்கு ஒதுக்கன பங்களாவுக்கு போக மாட்டேங்கிறார்?
  மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ள அவருக்கு ஒரு அடுக்கு பங்களா ஒதுக்கிட்டாங்கன்னு கோபிச்சிட்டு இருக்கார்!

7.   யோவ்! ஸ்கேன் எடுக்க வரும்போது இப்படியா ஃபுல்லா குடிச்சுட்டு வருவே?
நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ஸ்கேன் பண்ணுறதுக்கு முன்னாடி நிறைய தண்ணிக் குடிக்கணும்னு!

8.   ஏன்யா! நிறைய பேரு பெட்ரோல் கேனோட வாசல்ல நிக்கிறாங்க?
நீங்க பீனிக்ஸ் பறவையா எழுந்திருப்பேன்னு சொன்னீங்க இல்ல டெஸ்ட் பண்ணி பாக்க வந்திருக்காங்களாம்!

9.   நம்ம தலைவர் சில்லறை காசுக்கெல்லாம் ஆசைப் பட மாட்டார்!
அட ஆச்சர்யமா இருக்கே!
நீ வேற பெரிய அமவுண்ட்டாத் தான் ஆசைப்படுவாருன்னு சொல்ல வந்தேன்!


10. அரண்மணைப் புலவர் ஏன் நமது வாட்சப் சாட்டிங்கில் இப்போதெல்லாம் கலந்து கொள்வதில்லை மந்திரியாரே!
நீங்கள் நெட் பேக் ரீசார்ஜ் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றிவிட்டீர்களாமே மன்னா!

11. மன்னர் இவ்வளவு காலையில் அவசர அவசரமாக லேப் டாப்பும் கையுமாக ஏங்கே போகின்றார்!
போக்கிமான் விளையாடத்தான்!

12. தலைவர் எப்பவுமே பாஸிட்டிவாதான் திங்க் பண்ணுவாரு!
அதுக்காக தன்னோட ரத்த குருப்பை கூட பாஸிட்டிவா மாத்தனும்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை!

13. தலைவர் அரசியலை விட்டு விலகறேன்னு சொன்னதும் நிறைய பேரு வருத்தப்பட்டு கருத்து தெரிவிச்சாங்களாமே!
  அவங்களுக்கு மீம்ஸ் போட ஒரு ஆள் குறையுதேங்கிற வருத்தம்தான்!


14. அரண்மணை நர்த்தகிகள் எல்லாம் எங்கே மந்திரியாரே!
  மானாட மயிலாடவிற்கு ஆடப் போய்விட்டார்கள் மன்னா!

15. மன்னர் எப்படி அந்தப்புர அகழிக்குள் விழுந்தார்?
  ஏதோசத்தம் கேட்டதும் பழக்க தோசத்தில் ஜன்னல் வழியாக குதித்துவிட்டாராம்!

16. மன்னருக்கு போன் செய்தால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வருகிறதே
  நல்ல தொடர்பா இல்லை கள்ளத் தொடர்பா தெரியவில்லை மந்திரியாரே!


17.  தன்னை தோற்கடிச்ச மக்களை பழிவாங்கணும்னு தலைவர் முடிவெடுத்துட்டார்!
   எப்படி?
மீண்டும் சினிமாவுல நடிக்க போறாராம்!

18. ஜட்ஜ் அடிக்கடி எழுந்து கைதட்டி வக்கீலை கட்டிப் பிடிச்சுக்கிறாரே…!
  அவர் நிறைய ரியாலிட்டி ஷோக்களை பார்த்ததன் பாதிப்புன்னு நினைக்கிறேன்!

19. தினமும் ஒரு பொண்ணுக்கு உன் பைக்ல லிப்ட் கொடுத்துட்டு இருந்தியே என்ன ஆச்சு?
கார் காரன் பிக்கப் பண்ண ஆரம்பிச்சதும் “லெப்ட்” பண்ணிட்டு போயிருச்சு!


20. எதிரியின் வலையில் மன்னர் சிக்கிவிட்டாரா எப்படி?
பொண்ணு படம் போட்டுவந்த எதிரியின் ப்ரெண்ட் ரிக்விஸ்ட்டை ஓக்கே பண்ணிட்டாரே!

21. எதிரி கூப்பிடு தொலைவில் வந்ததை அறிந்ததும் மன்னர்…
   என்ன செய்தார்?
கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார்!

22.  தளபதியாரே! இங்கே இருந்த நம் ஆயுதக் கிடங்கு எங்கே?
  இத்தனை நாளாய் பேரீச்சம் பழமாய் தின்று குவித்ததில் மறைந்து போய்விட்டது மன்னா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சிரிச்சேன். ரசிச்சேன்.

    ReplyDelete
  2. ஜட்ஜ் ரியாலிட்டி ஷோக்களை பார்த்துக் கொண்டே இருந்தால் ,தீர்ப்பு எப்படி ரியல்லா இருக்கும் :)

    ReplyDelete
  3. அனைத்தும் அதிர் வேட்டு நண்பரே....

    ReplyDelete
  4. அனைத்தும் (ஆடி) தள்ளுபடி இல்லாமல் சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. ரசிச்சேன் சிரிச்சேன்......

    ReplyDelete
  6. அனைத்தும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2