கனவு மெய்ப்பட்டது! இந்த வார விகடனில் எனது ஜோக்!

ஏறக்குறைய எனது இருபது வருட கனவு இன்று பலித்துள்ளது. குறைந்தது என்னுடைய பன்னிரண்டாவது வயதில் இருந்து ஆனந்தவிகடன் வாசிக்கிறேன். அதில் வரும் படைப்புக்களை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்! பின்னாலில் நான் கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது விகடனில் ஏதாவது ஒருவகையில் நம் பெயர் இடம்பெற வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். ஆனால் சிறுவர் கதைகள் எழுதியமையால் விகடனுக்கு ஏதும் அனுப்பியது இல்லை! இடையில் எழுத்து வாசம் மறந்து போய் ஒரு கேப் வந்துவிட்டது.

2011 முதல் வலைப்பூவில் மீண்டும் எழுதினாலும் பத்திரிக்கைகளுக்கு எழுத முயற்சித்தது இல்லை! பாக்யா எஸ்.எஸ் பூங்கதிர் சார் ஊக்கத்தினால் பாக்யாவிற்கு சில ஜோக்ஸ் எழுதி அனுப்ப பிரசுரம் ஆனது. அதைத் தொடர்ந்து வாரமலரில் ஒன்றிரண்டு பிரசுரம் ஆனது. ஆனால் எனது கனவு ஆனந்தவிகடனில் எனது ஜோக் வரவேண்டும் என்பதுதான்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து முயற்சித்து கொண்டு இருந்தேன். இதுவரை இருநூறுக்கும் அதிகமான ஜோக்ஸ் அனுப்பி இருப்பேன்! ஒன்று கூட பிரசுரம் ஆகாமல் இருந்தது. வாராவாரம் நமது ஜோக் கண்டிப்பாக வரும் என்று விகடன் வாங்கி புரட்டி பார்ப்பேன்! ஒன்றும் வந்திருக்காது. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை!

இந்த வாரம் இன்று விகடன் வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை! கொஞ்சம் வேலை! கிருஷ்ண ஜெயந்தி கோயில் பணி அதிகம். ஏழு மணிக்கு பேஸ்புக் ஓப்பன் பண்ணிணால் புதுவண்டி ரவீந்திரன் சார் இன் பாக்ஸில் விகடனில் ஜோக் பிரசுரம் ஆனதிற்கு வாழ்த்துக்கள் என்று காலையிலேயே மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
என்னால் நம்பவே முடியவில்லை! இப்படியே பதில் அனுப்பினேன். நம்ப முடியவில்லை! வாழ்த்தியமைக்கு நன்றி என்றேன். உடனே அவர் ஜோக் வந்த பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பியதோடு எனது வாட்சப் எண் விசாரித்து தமிழக ஜோக் எழுத்தாளர்கள் வாட்சப் குழுவிலும் இணைத்துவிட்டார். அத்துடன் அலைபேசியிலும் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இந்த நாளை என்னால் மறக்க முடியாது.

என் கால் நூற்றாண்டு கனவு பலித்து இருக்கிறது! கனவை மெய்ப்பட வைத்த விகடன் குழுமத்திற்கும் ஆசிரியர் குழுவினருக்கும் மேலும் தொடர்பு கொண்டு வாழ்த்திய புதுவண்டி ரவீந்திரன் சாருக்கும் என்னுடைய எழுத்துக்களை ஊக்கப்படுத்தி வரும் வலையுலக நட்புக்கள் மற்றும் எஸ். எஸ். பூங்கதிர் சார் அவர்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்!

Comments

 1. ஜோக்அ ட்டகாசம், வாழ்த்துகள் !

  ReplyDelete
 2. ஆனந்த விகடனிலேயே ஆயிரம் ஜோக் கண்ட அபூர்வ (உ.)ராஜாஜியாக என் இதய வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
 3. எங்களுக்கும் மகிழ்வாய் உள்ளது
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
 4. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் சுரேஷ்! ஜோக் செம!!!!

  ReplyDelete
 5. 'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கு இந்நிகழ்வு நல்ல உதாரணம் சுரேஷ் சார்! வாழ்த்துக்கள். விகடனை விடாதீர்கள். தொடர்ந்து வாராவாரம் 10 ஜோக்குகள் (அது போதும்) அனுப்பி வைத்து அந்தக் கோட்டையைப் பிடியுங்கள்.

  ஒரு யோசனை:

  'இந்த ஜோக்குகள் கூட இப்படித் தான் எழுத வேண்டும்; அப்பொழுது தான் பிரசுரமாகும்' என்று நாமே முடிவுக்கு வருகிற அளவில் ஒரு பாணி ஏற்பட்டிருக்கிறேதே?.. (மன்னன் ஜோக், சாமியார் ஜோக், அரசியல் தலைவர் ஜோக், ரெளடி ஜோக், டாக்டர் ஜோக், என்று..) ஜோக்குக்கான வார்த்தை அமைப்புகள் கூட ஒரே மாதிரி..

  இந்தப் போக்கை மாற்றிப் பாருங்களேன். ஒரே மாதிரி ஸ்டீரியோ டைப் வார்த்தை அமைப்புகளுடன் இருக்கிற ஜோக்குகளை படிப்பதால் சலித்துப் போகும் பத்திரிகைகாரர்களுக்கு வித்தியாசமாய் இருப்பது உங்களைத் தனித்துக் காட்டிக் கவரலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா...

  ReplyDelete
 7. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் சுரேஷ். மேலும் பல பிரசுரங்கள் காண வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. முகநூலிலே வாசித்தேன்...
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா...

  ReplyDelete
 9. வாழ்த்துகள். ஏற்கெனவே முகநூலிலும் பார்த்தேன். உங்கள் கதைகள், கவிதைகள், நகைச்சுவைகள் அனைத்துமே பத்திரிகைகளில் வெளிவரத் தக்கவையே. மேலும் மேலும் வெளியாகவும் வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2