கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 74

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 74


1.   அந்த டைலர் இதுக்கு முன்னாடி ஆட்டோ டிரைவரா இருந்திருப்பான்னு எப்படி சொல்றே?
சட்டை தைச்சதுக்கு கூலியை கொடுத்தா மீட்டருக்கு மேல கொஞ்சம் போட்டுக்கொடுங்கன்னு சொல்றாரே!

2.   மாப்பிள்ளை வெயிட்டான பார்ட்டி!ன்னு சொல்றீயே எப்படி?
கண்டெயினர் டிரைவரா இருக்கிறார்!

3.   தலைவர் அறிக்கை கொடுக்கும் போது கூடவே கரம் மசாலா ஒரு பாக்கெட்டை பின் பண்ணிக் கொடுக்கிறாரே ஏன்?
  அவர் அறிக்கை கார சாரமில்லாம இருக்கு யாரும் சொல்லிடக் கூடாதாம்!


4.   அந்த ஸ்டேஷன்ல ஐயரை வைச்சு ஹோமம் பண்ணிக்கிட்டு இருக்காங்களே என்ன விஷயம்?
திடீர்னு மாமூல் கொறைஞ்சு போச்சாம்! திரும்பவும் நிறைய கிடைக்கணும்னு பூஜை பண்றாங்க!

5.   குத்துச்சண்டை சாம்பியனா இருக்கிற பொண்ணை காதலிச்சிட்டு இருந்தியே என்ன ஆச்சு?
அடிக்கடி ப்ரி கிக் விட்டு நாக் அவுட் பண்ணிடறா!

6.   அவர் ஒரே நாள்ல ஒலிம்பிக்கிலே பத்து தங்க மெடல் வாங்கி குவிச்சிட்டாரு!
அடடே அப்ப அவரு பத்தரை மாற்றுத் தங்கம்னு சொல்லு!

7.   எங்க வீட்டுக்காரர் சரியான சபல கேஸ்! குச்சிக்கு புடவை சுத்தினா கூட பாத்துகிட்டே நிற்பாரு!
உன்னை கட்டிக்கிட்ட போதே அது தெரிஞ்சிருச்சு!

8.   முன்ன பின்னே தெரியாத எங்கிட்ட வந்து கைமாத்து கேக்கறீயே எப்படி திருப்புவே?
  திருப்பறா மாதிரி இருந்தா நான் உங்க கிட்ட ஏன் கைமாத்து கேக்கறேன்?


9.   எதுவும் சொல்லாமலேயே தலைவர் திடீர்னு சட்ட சபையை விட்டு வெளிநடப்பு செஞ்சிட்டாரே ஏன்?
  நீ வேற அவர் போக்கிமான் கோ ஆட வெளியே வந்துட்டாரு!

10. தலைவரை வாழ்த்தி வைச்சிருந்த பேனரை பார்த்ததும் தலைவர் அப்படியே கண் கலங்கிட்டாராமே அப்படி என்ன வைச்சிருந்தாங்க?
   “மீம்ஸுக்கு வாழ்வு தந்த தலைவா! நீ வாழ்க!ன்னுதான்!

11. அந்த சர்வருக்கு ஆனாலும் நக்கல் அதிகமா இருக்கு?
  எப்படி?
காபியிலே ஏம்பா சூடே இல்லைன்னு கேக்கறேன் எங்க ஓட்டல்ல  சூடு வைச்சி வித்து பழக்கமில்லேங்கிறான்!

12.  அமைச்சரே இளவரசிக்கு சுயம் வரத்தை நடத்தி விடுவோமா?
  அந்தக் கவலை உமக்கு வேண்டாம்! அவரே மேட்ரிமோனியலில் ரிஜிஸ்டர் பண்ணிவிட்டாராம் மன்னா!


13. யாரங்கே….?
மன்னா! இப்படியெல்லாம் கத்தி எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீர்கள்! ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் உடனே வந்துவிடுகிறேன்!

14.  மன்னா! “வார் வார்” என்று முழங்குகிறீரே! போர் மீது அவ்வளவு காதலா?
  மன்னாங்கட்டி! என் செருப்பின் வாரை நீர் மிதித்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினேன் அமைச்சரே!

15. அந்த நடிகரை நிறைய பேரு வெறித் தனமா லவ் பண்றாங்க!
அப்ப அவரோட பேன்ஸ் எல்லோருக்கும் தடுப்பு ஊசி போடணும்னு சொல்லு!

16.  தமிழ்நாட்டுல பல குடும்பங்கள் இவரால கண் கலங்கி நிக்குது…!
  டீ வீ சீரியல் டைரக்டர்னு சொல்லு!


17.  புலவரே! என்னை புகழ்ந்து ஒரு உலா எழுதுங்களேன்!
  உங்களை வைத்து ”பீலா” வேண்டுமானால் எழுதலாம் உலாவெல்லாம் முடியாது மன்னா!

18.  தளபதியாரே! போருக்குத் தேவையான முஸ்தீபுகளை ஆரம்பித்து விட்டீர்களா?
உங்களுக்கான நான்கு ஜோடி காலணிகள் ரெடியாக உள்ளது மன்னா!

19. புலிக்குப் பிறந்தது பூனையாகவில்லை மன்னா!
   என்ன சொல்கிறீர் மந்திரியாரே!
இளவரசர் “டெம்பிள் ரன்” விளையாடிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னேன்!

20. ஆனாலும் ராப்பிச்சைக்காரனுக்கு இத்தனை நக்கல் இருக்க கூடாது!
   சமையலே சரியில்லை! ஐயாவை சென்னை அமிர்தாஸ்லே கொஞ்சநாளைக்கு டிரெயினிங் அனுப்பி வைங்களேன்னு சொல்றான்!


21. மாப்பிள்ளை எதையும் நாசூக்காத்தான் கேப்பாரு…
  பொண்ணுக்கு ஒரு ஆக்டிவா வாங்கி தரசொல்லி கேக்காம உங்க பொண்ணு ஆக்டிவ்வா இல்லை! ஆக்டிவ்வா இல்லைன்னு சொல்லிக்கிட்டு திரியறாரே!

22.  தலைவர் எதுக்கு சட்டசபைக்கு பெட்ஷீட்டை கொண்டு போறார்?
  பட்ஜெட் மீதான விவாதங்கிறதை தப்பா புரிஞ்சிகிட்டிருக்கார் போலிருக்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. கொஞ்சமென்ன
    நன்றாகவே சிரித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அட ஆக்டிவா வேணும்னு இப்படியும் கேட்கலாமா :)

    ReplyDelete
  3. ஹா... ஹா...

    (நீங்க சொல்லிருக்கமாதிரியே கொஞ்சமா சிரிச்சிட்டேன்)

    ReplyDelete
  4. ஹாஹாஹஹா இரசித்தேன், சிரித்தேன் நண்பரே

    ReplyDelete
  5. உங்க பொண்ணு ஆக்டிவ்வா இல்லையா
    உங்க பொண்ணுக்கு ஆக்டிவ்வா இல்லையா
    இதில எது சரி?
    அது
    மாமனார் மருமகன் சிக்கல்
    நமக்கேன் வீண் வம்பு!

    ReplyDelete
  6. அனைத்தையும் ரசித்தேன், சிரித்தேன்.

    ReplyDelete
  7. சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்.

    ReplyDelete
  8. கொஞ்சமில்லை... நிறையவே சிரிச்சிட்டோம்...

    ReplyDelete
  9. ஆக்டிவா நன்றாக இருந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2