தளிர் ஹைக்கூ கவிதைகள்!புதிய வீட்டில்
கண்ணீர் சிந்தினர்
ஹோமப் புகை!

வெள்ளம் பாய்ந்தது
மகிழ்ந்தார்கள்!
ஒளி!

எல்லா ரகசியங்களும்
உறங்குகின்றன
இருட்டு!

கேள்விக்கணைகள் துளைக்கிறது
சிதறுகின்றது அறிவு!
குழந்தையின் வினா!


விழிகள் மூடியதும்
விரிந்தது காட்சி!
கனவு!

காதலி வருகை!
கனிந்தது சூரியன்!
மேகம்!

தடம் புரண்டது தொடர்வண்டி!
பாதையில் மனிதன்!
எறும்புகள்!


தென்றல் வந்ததும்
தேய்ந்து போனது
சூரியன்!

ஒளிந்து கொண்டதும்
ஓடிப்போனது தூக்கம்!
காற்று!

 ஆடும் வீடுகள்
ஆனந்தமானது மனசு!
தூக்கனாம்குருவி கூடு!


மறைந்த சூரியன்!
காட்டிக் கொடுத்தன
பறவைகள்!

உச்சியில்
உதயமானது உப்புநதி!
வியர்வை!

அலுக்கவில்லை
பயணம்!
குழந்தைகள் உலகம்!


துகில் உரித்தார்கள்
பசி அடங்கியது!
வாழைப்பழம்!

சிதறிய மணிகளை
சேகரித்தன சிப்பாய்கள்!
வயலில் பறவைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 2. அற்புதமான கவிதைகள்
  இறுதி ஒற்றைச் சொல் செய்யும் மாயம்
  அதி அற்புதம்
  மிகவும் இரசித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

 3. எப்படிப்பா இப்படி எல்லாம் அருமையாக சிந்திக்கிறீர்கள் அனைத்தும் வழக்கம் போல அருமை. பாராட்டுக்கள் உங்கள் பதிவுகளில் இந்த ஹைக்கூ கவிதையும் நகைச்சுவை பதிவும்தான் மகுடம் போன்றது அதிலேயே மேலும் அதிக கவனம் செலுத்துங்கள்

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அருமையான சிந்தனை. அதிலும் கடைசி சிப்பாய்கள் என்றதும் பறவைகளைக் குறிப்பிட்டிருப்பது அருமை.

  ReplyDelete
 6. மனதை அள்ளிக் கொண்ட ஹைக்கூ...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2