நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி14

நொடிக்கதைகள்! பகுதி 14


கம்ப்ளைண்ட்!
       உங்க பையன் இன்னிக்கு ஹோம் ஒர்க்கே செய்யலை என்று அப்பாவிடம் கம்ப்ளைண்ட் செய்துவிட்டு சென்ற ஆசிரியை தலைமை ஆசிரியர் கூப்பிட்டு விசாரித்தார் இன்னுமா  நீங்க நோட்ஸ் ஆப் லெசன் எழுதலை?”

விளையாட்டு!
     ”விளையாடப் போன  உங்க குழந்தை வீடு திரும்பலை! உடனடியா தேடாம இவ்வளவு நேரம் என்னப் பண்ணிட்டு இருந்தீங்க?”   கேட்ட கான்ஸ்டபிளிடம் பவ்யமாக சொன்னார்கள் “போக்கிமான் கோ” விளையாடிக்கிட்டு இருந்தோம்!

கெட்டச் செய்தி!
   வீடே சந்தோஷமாக கூடி மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் அந்த கெட்டச் செய்தி வந்தது. அடுத்த நொடி அனைவரும் கலைந்து தனித் தனியாக செல்ல ஆரம்பித்தார்கள். நீண்ட நேரமாய் நின்று போயிருந்த மின்சாரம் வந்துவிட்டது.


ஸ்விட் எடு! கொண்டாடு!
   சுகர் டெஸ்ட் எடுத்து முடித்துவிட்டு நெகடிவ் ரிசல்ட்டுடன் வந்த பெரியப்பாவை கண்டதும் அனைவரும் கட்டிப்பிடித்து கூச்சலிட்டு மகிழ்ந்தனர் அந்த வீட்டில் உள்ள எல்லா சுகர் பேஷண்ட்ஸ்களும்.

லிப்ட்!
  லைசென்ஸ் இல்லை! இரவல் வண்டி! இன்ஸூரன்ஸ் ஆர்சி எதுவும் இல்லை! இரவு நேரம் யாரும் மடக்க கூடாது என்று நினைத்தபடி வண்டியை முறுக்கினான் வினோத் தூரத்தில் ஓர் போலீஸ் தலை தென்பட வேகமெடுத்தான் ஆனாலும் நிறுத்தினான். போலீஸ்காரர் லிப்ட் கேட்டுக்கொண்டிருந்தார்.

முடிவு!

  பத்து செகண்ட்ல கதையை முடிச்சுருவேன்னு  சொன்னீங்க! முடிஞ்சுதா? உங்களாலே முடியலை பார்த்தீங்களா? எழுத்தாள கணவனை நக்கலடித்துக்கொண்டிருந்தாள் மனைவி.

திகில் படம்!
      வெடிச்சிரிப்பு சிரித்து ரசித்துக் கொண்டிருந்தன குழந்தைகள். டிவிடியில் புதிதாக வந்த அந்த பேய்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

பாலோவர்:

    பேஸ்புக்கில் என்னை ஐநூறு பேர் பாலோ பண்றாங்க தெரியுமா என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அவர். வீட்டில் ஒருவரும் அவரை பாலோ பண்ணதாகத் தெரியவில்லை.

ஓல்டு!
    பத்தாயிரம் ரூபாய் செலவழித்து பார்த்துப் பார்த்து வாங்கிய மொபைலை வீட்டுக்கு எடுத்துச் சென்று காண்பிக்கையில் பையன் சொல்கிறான் இதை ஏம்பா வாங்கினீங்க? ரொம்ப ஓல்டு மாடல்!

 செல்ஃபி!
       பிரபலங்களுடன் தேடித் தேடி செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட்டவனின் முகம் தொலைந்து போனது சிலநாட்களில்

கனவு:

    அனைவரின் கனவு இல்லங்களையும் அழகழகாக வடிவமைத்து தந்தவனுக்கு ஓர் கனவு இன்னும் நினைவாகமால் இருந்தது. சொந்தமாய் ஓர் வீடு கட்ட வேண்டும் என்பதுதான் அது.

நெகட்டிவ் தாட்:
  படம் வெளியானதும் பேஸ்புக், டிவிட்டர், ப்ளாக் என எல்லாவற்றிலும் சரியில்லை என்று எல்லோரும் கிழிகிழி என கிழித்தார்கள். அதையும் மீறி படம் வசூல் அள்ளியது. டைரக்டர் தயாரிப்பாளரிடம் சிரித்தபடி சொல்லிக்கொண்டிருந்தார். நெகட்டிவா நாம கிளப்பி விட்ட விஷயம் பாஸிட்டிவா மாறிறிருச்சு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

    

Comments

 1. வேகமான கதை
  அருமையான பதிவு
  தொடருங்கள்  குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
  http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

  ReplyDelete
 2. மின்சாரம் வந்த கதையும், ஃபேஸ்புக் கதையும் வேதனையான உண்மைகள். அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 3. அனைத்து நொடிக் கதைகளும் அருமை
  படித்து மிகவும் இரசித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழத்துக்கள்

  ReplyDelete
 4. அனைத்தும் அருமை சுரேஷ்...ரசித்தோம்.

  ReplyDelete
 5. வழக்கம்போல அனைத்துமே அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 6. அனைத்தும் அருமை, வலைத்தளம் பக்கம் வாருங்களேன்

  ReplyDelete
 7. கடைசி நகைச்சுவை தற்காலத்திய விளம்பர மோகத்தை நினைவூட்டுகிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2