பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 32
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 32
உங்கள் ப்ரிய “பிசாசு”
முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:
முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:
http://thalirssb.blogspot.in/2012/08/6.html பகுதி 6
http://thalirssb.blogspot.in/2012/09/7.html பகுதி 7
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 9
http://thalirssb.blogspot.in/2012/10/10.html பகுதி 10
http://thalirssb.blogspot.in/2012/09/7.html பகுதி 7
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html பகுதி 9
http://thalirssb.blogspot.in/2012/10/10.html பகுதி 10
http://thalirssb.blogspot.in/2012/11/15.html பகுதி 15http://thalirssb.blogspot.in/2012/11/16.html பகுதி 16
அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்று எக்காள சிரிப்புடன் சொன்ன செல்வியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்.
அதே நேரம் கொண்டபள்ளியின் மிகப்பெரிய வீடு ராமையா ரெட்டியின் வீட்டில் ஒரே அதகளமாக இருந்தது. ஏமய்யா! ஸ்வாமி காரு ஓச்சினாரா! என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் வீட்டின் முன் அந்த பழைய அம்பாசிடர் வந்து நின்றது. அதிலிருந்து சுவாமிஜி மெல்லிய சிரிப்புடன் இறங்கினார்.
வாங்கோ சுவாமிஜி! நீங்க தான் எங்க ஐயாவை காப்பாத்தனும்! ரெண்டு நாளா எதையும் சாப்பிட மாட்டேன்கிறார்! எங்கேயோ முழிச்சி முழிச்சி பாக்கிறார்! என்னை விட்டுடு என்னைவிட்டுடு கத்தி ஆர்ப்பாட்டம் பன்றார்.
உள்ளே நுழைந்து கொண்டே கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வாசலில் வைத்து உருட்டி எடுத்தார் சுவாமிஜி. பின்னர் அதை எடுத்துக் கொண்டு ரெட்டியின் பூஜையறையினுள் வைத்தார். நான் இங்க சில மணி நேரம் தான் இருப்பேன்! அதுக்குள்ள இந்த பழம் ரெட்டிகாருவின் நோய்க்கு பதில் சொல்லும் என்று பூடகமாய் சொல்லியபடியே ரெட்டிகாருவின் அறையினுள் நுழைந்தார்.
அறை முழுவதும் இருட்டு! கட்டிலில் இழுத்து போர்த்தியபடியே சுருண்டு கிடந்தார் ரெட்டிகாரு! என்ன ரெட்டிகாரு உங்க வாழ்க்கை மாதிரி உங்க ரூமும் இருண்டு கிடக்கு! என்று சுவாமிஜி குரல் கொடுக்கவும் அரண்டு போய் எழுந்தார் ரெட்டி.
என்ன ரெட்டிகாரு! எதுக்கு இத்தனை பயம்? என்ன பண்ணுது உடம்புக்கு? சுவாமி கேட்கவும்
நான் அதை தனியா சொல்ல விரும்பறேன்! என்றார் ரெட்டி.
அப்படியா! நீங்க வெளியே இருங்க! என்று தன்னுடன் வந்தவர்களை வெளியே இருக்கும்படி சொன்ன சுவாமிஜி இப்ப சொல்லுங்க! என்றார்.
சுவாமிஜி! என் பாவம் என்னை துரத்துது! பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க! வயசு திமிர்ல நான் கொஞ்சம் அதிகமாவே ஆடிட்டேன்! என் பையன் ஒரு ஏழை பெண்ணை விரும்பறான்னு தெரிஞ்சதும் கொதிச்சு போய் அந்த பெண்ணை ஆளுங்களை வெச்சி கடத்தி கற்பழிச்சு சாகடிச்சுட்டேன்! அந்த பாவம் என்னை சும்மா விடலை! அந்த பொண்ணு செத்த அதிர்ச்சியிலே என் பையனும் தற்கொலை பண்ணிகிட்டு செத்து போயிட்டான். அதுக்கப்புறம்தான் பூர்வீகமான இந்த ஆந்திர கிராமத்துக்கு வந்தேன். அப்பத்தான் நிலத்தோரம் இருக்கிற சிறு மலையில கிரானைட் இருக்கறது தெரிஞ்சி வளைச்சி போட்டு இப்ப பெரிய பணக்காரன் ஆயிட்டேன்! நிறைய சொத்து கொட்டிக்கிடக்குது! ஆனா மனசு வெறுமையா இருக்குது! நான் செஞ்ச பாவத்தால என் புள்ளைய இழந்துட்டேன்! எவ்வளவுதான் சம்பாதிச்சாலும் மன நிம்மதி இல்லை! இப்பல்லாம் அந்த செத்துப் போன பொண்ணு என் கனவுல வந்து மிரட்டறாய்யா! அவ என்னை கொன்னாலும் பரவாயில்லை! ஆனா தினமும் கனவுல வந்து என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுகிட்டு இருக்கா!
சுவாமிஜி புன்னகைத்தார்! ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்! வினை விதைத்தவன் வினை அறுப்பான்! இதிலிருந்து யாரும் தப்ப முடியாது!
சுவாமி நானும் தப்ப விரும்பலை! நானும் சாகத்தான் விரும்பறேன்! ஆனா அவ என்னை சாகவும் விடாம வாழவும் விடாம பண்ணிகிட்டு இருக்கா!
கனவுலே வந்து மிரட்டறா! கொலை பண்ண போறதா சொல்றா கழுத்தை பிடிக்கிறா? ஆனா பிடிக்கலை!
என் மேல ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி போடுறா! வீல் னு கத்திகிட்டு எழுந்தா கனவா இருக்கு! சுவாமி எனக்கு இந்த வாழ்க்கை வேணாம்! என்னை நீங்க காப்பாத்த வேணாம்! சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டினா போதும்.
சுவாமி கண்களை மூடி தியானித்தார். பிறகு இடுப்பில் வைத்திருந்த ஒரு பையில் இருந்து சிறிது விபூதியை எடுத்து ரெட்டியிடம் கொடுத்தார். சரி நிம்மதியா தூங்குங்க! என்றவர் ஏதும் பேசவில்லை! எழுந்து வெளியே வந்தார். நேராக பூஜையறையினுள் சென்று எலுமிச்சை பழத்தை பார்த்தார். வைத்து அரை மணியில் அது ஒரு பக்கம் அழுகி போய் இருந்தது. உதட்டை பிதுக்கினார்.
ரெட்டியின் காலம் முடிந்துவிட்டது! அவர் வாய் முணுமுணுத்தது.
அவர் கிளம்பிச் சென்று விட்டார். முகேஷிடம் சொன்னது போலவே சரியாக திரும்பிவிட்டார்.
சித்தப்பா! எங்க போயிட்டு வர்றீங்க! சொல்ல மாட்டீங்களா?
சொன்னா ஆச்சர்யப்படுவ!
அப்படி எங்க நீங்க போய் வந்தீங்க?
ப்ரவீணா தேடிகிட்டு இருக்கறவனை போய் பாத்துட்டு வரேன்!
அதைக்கேட்டு செல்வியின் காதுகள் கூர்மையாகின. எங்க போயிட்டு வர்றீங்க! என்று அவளும் கேட்டாள்.
ப்ரவிணா! உனக்கு நல்ல காலம்தான்! இனி ரெட்டியை யாராலும் காப்பாற்ற முடியாது! அவன் விதி முடிந்துவிட்டது! இனி உன்னை தடுத்து பிரயோசனம் இல்லை! உன்னை விடுவித்தேன் என்றார் சுவாமிஜி
சித்தப்பா! என்ன இப்படி செய்கிறீர்கள்! செல்வியைத்தேடி யாராவது வரமாட்டார்களா?
வரமாட்டார்களா என்ன? வந்து விட்டார்கள்!
அப்புறம் ஏன் செல்வியை விடுவிக்கிறீர்கள்!
அதுதான் விதி! உங்கள் மதியையும் மந்திரத்தையும் கொஞ்சம் பயன் படுத்த கூடாதா?
விதி வலுக்கும் போது மதியும் மந்திரமும் தானாகவே செயலிழக்கும்! அவரவர் வினையை அவரவரே அறுக்க வேண்டும். ரெட்டியின் விதி இன்றோடு முடிகிறது. அதை இந்த சுவாமிஜி மதியால் அறிந்து கொண்டாலும் தடுக்க முடியாது.
அப்போது. செல்வி! நீ இங்கேயாம்மா இருக்கே! என் கண்ணே என்று ஒரு முதிய பெண்ணும் அதை தொடர்ந்து வினோத்தும் செல்வியின் தந்தையும் வர செல்வி அவர்களை பார்த்து சிரித்தாள்.
எம்மா சிரிக்கறே?
என்ன செய்வது? ரெட்டியின் விதி உங்களையும் இங்கு அழைத்து வந்துவிட்டது!
அன்று நள்ளிரவு! ரெட்டி தூக்கத்திலிருந்து எழுந்தான்! ஐயோ! என்னை விட்டு விடு! விட்டுவிடு என்று அலறியபடியே வெளியே ஓடி வந்தான். அவனது தலைமேல் ஒரு கல் ஒன்று தாக்கியது! ஐயோ என்னை இப்படி சித்ரவதை செய்யாதே! என்னை கொன்றுவிடு கொன்றுவிடு என்று அலறியபடியே அவனது கிரானைட் குவாரி இருக்கும் பக்கம் ஓடினான். அவன் ஓடுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் செல்வியின் உருவில் இருந்த ப்ரவீணா!
மிரட்டும்(32)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments
Post a Comment