பிரபாகரன் மகனை கொன்றது இலங்கை ராணுவமே ! புதிய ஆதாரம் சிக்கியது!
பிரபாகரன் மகனை கொன்றது இலங்கை ராணுவமே ! புதிய ஆதாரம் சிக்கியது!
இலங்கை இனப்போரில் இலங்கையின் தற்போதைய அதிபர் ஆடிய வெறியாட்டம்
அனைவரும் அறிந்ததே! அவர் பொன்சேகாவுடன் இணைந்து பல அப்பாவி மக்களை கொன்று குவித்து
இனப்படுகொலை செய்ததை உலகமே வேடிக்கைப்பார்த்ததே தவிர ஒன்றும் செய்யவில்லை!. இந்திய
அரசும் இதற்கு உறுதுணையாக இருந்தது என்றால் மிகையில்லை!
போரில் அப்பாவிகள்
சிறுவர்கள், முதியவர்கள் நோயாளிகளை தாக்கக் கூடாது என்பது சர்வதேச சட்டம். இதை
மீறி லட்சக் கணக்கில் கொன்று குவித்து விட்டு இவர்களும் போராளிகளே என்று சப்பை
கட்டு கட்டி வருகிறது இலங்கை அரசு. போர் முடிந்து வருடங்கள் கடந்தும்
தமிழர்களுக்கு அங்கு சிறப்பான வசதிகளோ தங்க வீடுகளோ முழுமையாக
கட்டித்தரப்படவில்லை! தமிழக அரசியல் வாதிகளும் இதில் முனைப்பாக இப்போது ஈடுபடுவது
இல்லை. ராஜீவ் படுகொலைக்குப் பின் இலங்கை தமிழர்களுக்கான ஆதரவில் தமிழகத்தில்
பெரும் மாற்றம் வந்து விட்டது.
இறுதிப்போருக்குப்
பின்னர் அப்பாவி தமிழர்கள் கொலையானதை பல வெளிநாட்டு சேனல்கள் வெளிச்சம் போட்டு
காட்டியபின் தான் தமிழகத்தில் மீண்டும் இலங்கை தமிழர்கள் மீது கொஞ்சம் பரிதாபம்
ஏற்பட்டது. ஆட்சியைப் பிடித்த அம்மாவும் தன் பங்கிற்கு ஏதொ குரல் கொடுத்து
வைத்தார். கலைஞரும் ஒன்றுக்கும் உதவாத டெசோவை கட்டிக்கொண்டு தன் மகனை உலக நாடுகள்
பார்க்க வசதியாக ஐநா சபைக்கு அனுப்பி வைத்தார்.
இதையெல்லாம் இலங்கை கண்டு கொள்ளவில்லை! பலபேரை கொன்று
குவித்த சர்வாதிகாரியான இலங்கையின் ராஜபக்சே சர்வ சாதரணமாக எல்லோரின்
எதிர்ப்பையும் சமாளித்து இந்தியா வந்து திருப்பதி பெருமாளிடம் பாவமன்னிப்பு
கேட்டுச் செல்கிறார். ஒரு கொலைக் காரனுக்கு இந்து ஆலயத்தில் என்ன வேலை! அவனுக்கு அங்கு
ராஜ மரியாதை! இதை காண்கையில் நெஞ்சம் குமுறுகிறது.
சேனல் 4 வெளியிட்ட்ட பல
படங்கள் இலங்கை ராணுவத்தின் வெறியாட்டத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின.
தற்சமயம் வெளியாகியுள்ள படம் பெரும்
அனுதாபத்தை பெற்று உள்ளது. பிரபாகரனின் சிறுவயது மகன் பாலசந்திரனை பதுங்கு
குழியில் அடைத்து வைத்து அநியாயமாக சுட்டுக் கொன்ற படங்கள் இப்போது
வெளியாகியுள்ளன.
பதுங்கு குழியினுள்
தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்று ஏக்கப்பார்வை பார்க்கும் பச்சிளம்
பாலகன் படமும் கையில் திண்பண்டங்களோடு இருக்கும் படமும் கடைசியில் குண்டடிப்பட்டு
அவன் பதுங்கு குழியில் விழுந்து கிடக்கும் படமும் வெளியாகியுள்ளன.இது குறித்து
தினமலர் நாளிதழ் வெளியிட்ட சுருக்கம் பின்வருமாறு.
கடந்த ஆண்டில் முன்னர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தான். இவன் எப்படி கொல்லப்பட்டான் என்பது மர்மமாக இருந்து வந்தது. இன்றைய படங்களின் மூலம் பாலச்சந்திரன் ராணுவத்தினரின் பிடியில் வைக்கப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டு அவனது உடல் வீசப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. காரணம் என்னவெனில் தற்போது வெளியாகியிருக்கிற 3 புகைப்படங்களும் ஒரே காமிராவில் ஒரு நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டது என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஏக்க பார்வை :
இந்த படத்தில் ராணுவ பதுங்கு குழியில் பாலச்சந்திரன் அமர்த்தி வைக்கப்பட்டுள்ளதும். இப்போது அவன் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்க பார்வையையும் பார்க்க முடிகிறது. மேலும் அவனது கையில சின சினாக்ஸ் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு சாப்பிட வைக்கப்பட்டுள்ளான். பின்னர் அவன் இறந்த நிலையில் கிடக்கிறான். இது போன்ற ஆதாரங்கள் ஐ.நா., குழுவில் சமர்ப்பிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாலச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
போரில் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இலங்கை கூறி வந்தாலும், மனித உரிமை செயளாலராக இருந்த பான் கீமுன் குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இலங்கை
ராணுவம் திட்டமிட்டே அப்பாவிகளை கொன்று குவித்தது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெரியாத தவறுக்கு தண்டனை கிடைக்கும் நாட்டில் தெரிந்தே தவறு செய்யும் இவர்களை
தண்டிக்கப்போவது யார்? இது போன்ற அக்கிரமக் காரர்களுக்கு தூக்கு தண்டனை கூட பெரிய
தண்டனையாகாது. உலகம் விழித்துக்
கொள்ளட்டும்! அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்கட்டும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்
செய்து தெரிவியுங்கள்! மிக்க நன்றி!
இந்திய அரசு என்ன செய்யும் எனபது யோசிக்க வேண்டிய விஷயம்.
ReplyDeleteஎன்றும் மறையாத வேதனை!
ReplyDeleteசெய்தியை பார்க்கவும் படிக்கவும் மிகவும் வேதனையளிக்கிறது.... இதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடிகிறது?....
ReplyDeleteஆயிரம் ஆதாரங்கள் கிடைத்தும் என்ன பயன்!.. :(
ReplyDelete