கல்யாண கனவு!
என் ஏழாவது வீட்டில்
செவ்வாய் குடிபுகுந்ததால்
இன்னும் எனக்கு புகுந்தவீடு
கிடைக்கவில்லை!
எத்தனையோ ஜாதகங்கள் அலசப்பட்டாலும்
அத்தனையும் எனக்கு பாதகமாய்
அமைந்துவிட்டது!
மங்களன் தானே குடிபுகுந்ததால்
எங்கள் குடும்பத்தில் மங்கலம்
சங்கமிக்கவில்லை!
முதிர் கன்னிகள் மூச்சு
குடும்பத்துக்கு ஆகாது
எதிர்வீட்டு அம்மா கொளுத்திப்
போட்டும்
வெடிக்காது நமத்துப்போனது
பட்டாசு!
சீர் செனத்தி நிறைய செய்வார்கள்
என்றாலும் செவ்வாய் என்னை
என்னோடு படித்தவர்கள் எல்லோரும்
பிள்ளையோடு ஊருக்கு வருகையில்
இன்னும் நான் பிள்ளையாரை
சுற்றிக்
கொண்டிருக்கிறேன்!
என் ஆசைகள் நரைக்கும் முன்னே
என் முன் கூந்தல் நரைத்து
வயதினை நினைவூட்டியது!
பகுத்தறிவு பேசுவோரும்
என்னை
பரிதாபமாய் பார்த்தனரே
தவிர
பரிசம் போட வரவில்லை!
கலர் கலராய் கனவுகள்
கலைந்து போகையில்
கல்யாண கனவு மட்டும் தொடர்கிறது!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நல்ல கவிதை!
ReplyDeleteஇன்னம் எத்தனை காலத்திற்குத்தான் இந்த ஜாதகமும் ,ஜோசியமும்.....
ReplyDeleteசொந்தமில்லை பந்தமில்லை சோதனைகள் கொஞ்சம் இல்லை ஜாதகமே இல்லை என்று சாற்றிடாதே வார்த்தைகளால்
ReplyDelete