காதல் அவஸ்தை 3
காதல் அவஸ்தை 3
சுவாசமே!
உன் சுவாசத்தில்
என் வாசம்!
என் சுவாசத்தில்
உந்தன் வாசம்!
உன்னுள்ளே உயிராக நுழைகையில்
குளுமை!
உன்னை விட்டு பிரிகையில்
தகிக்கும் வெம்மை!
பனி கிரணிக்கும்
சூரியனாய் நான்!
தாமரையிலை
தண்ணீராய்
நீ!
நிலைக்கண்ணாடியில்
முகம் பார்த்தால்
நிஜ பிம்பமாய் நீ
என் தோட்டத்து ரோஜாக்கள்
உனக்காக
பூக்காமல் கதவடைப்பு
செய்கின்றன.
காலைப்பனியில்
நீ கோலம் போடும்
அழகைக் காண
ஆதவன் கூட சீக்கிரம்
வருகிறான்!
உன் வீட்டு ஜன்னலை நீ
திறக்கும் போதெல்லாம்
என் மனம் உள்ளே நுழைவதை
நீ அறிவாயோ?
உன் மன ஜன்னலை திறப்பது
எப்போது?
உன் உள்ளச் சிறையில்
அகப்பட காத்திருக்கிறேன்!
கதவை திறந்துவிடு!
புத்தனாக நினைத்தவனை
பித்தனாக ஆக்கியவளே!
மெத்தனம் செய்யாது
சித்தனாகும் முன்
அத்தான் என அழைத்து
ஆறுதலை
தந்து விடு!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!
vaalthugal nanbarae!
ReplyDeleteஅழகிய புனைவு !
ReplyDelete