ஒத்திப்போடுவதை ஒத்திப்போடு! கவிதை


ஒத்திப்போடுவதை கொஞ்சம் நீ
ஒத்திப்போடு சகோதரா!
அப்புறம் பார்க்கலாம் என்பதை
 தூக்கி தூரப் போடு!
நாளை நாளை என
நாளை தள்ளிடாதே!
பிறகு என்பதை உன் அகராதியில்
விலக்கு!
வேளை வரட்டும் என  வந்த
வேலைகளை விரட்டிடலாமோ?
மூலையில் முடங்கி கிடக்காமல்
உந்தன் மூளைக்கு வேலை கொடு!
தள்ளிப்போடுவதை தவிர்த்து
துள்ளி எழு!
பள்ளிப் பாடமல்ல வாழ்க்கை!
அள்ளிப் பருக அதுவொன்றும்
ஆற்று நீரும் அல்ல!
ஊற்றெடுத்து வரும் நீரை
உழைப்பினால் கண்டுபிடித்தே
களைப்பினை போக்கிக்கொள்ள வேண்டும்!
 ஒவ்வொரு நாளும் உன் நாளாய்
அமைந்திட்டால் அப்புறம் ஏது
வாழ்க்கைப் பாடம்?
உன் நாளுக்கு காத்திரு!
ஒரு நாள் உன்னையும் உயர்த்திடும்
உலகினுக்கு உன்னை அடையாளம் காட்டிடும்
அதுவரை
எழுமின் விழுமின் நில்லாது
 செல்மின்! என்ற
விவேகானந்தரின் வீர உரை
உன்னை வழி நடத்தட்டும்!
உன் உயர்வு உன்னிடம்
ஓடிவரும்!
உலகம் உனை திரும்பி
பார்க்கும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2