புகைப்பட ஹைக்கூ 7
புகைப்பட ஹைக்கூ 7
ஏர் பிடித்த கரங்கள்
எந்திரம் பிடிக்கின்றன!
கால மாற்றம்!
காணாமல் போனது
காளைகள் மட்டுமல்ல!
உழவனின் எதிர்காலமும்!
விதைப்பது
விதையல்ல
நம்பிக்கை!
மாற்றங்கள் வந்தாலும்
மாறவில்லை!
உழவன்!
எந்திரங்கள் வந்தாலும்
ஏறவில்லை!
வாழ்க்கை தரம்!
சேற்றிலே உழன்றாலும்
சேர்வதில்லை உழவனிடம்
அழுக்கு!
உழுது
பிணி அகற்றுகிறான்
உழவன்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமையான ஹைக்கூ
ReplyDeleteஉயர்ந்தவன்...
ReplyDeleteஅசத்தல் எல்லாமே
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteஆனால் விலைவாசி எந்திரமாய் எகிறிவிட்டதே
ReplyDelete// சேற்றிலே உழன்றாலும்
ReplyDeleteசேர்வதில்லை உழவனிடம்
அழுக்கு!//
ஆகா! இதுவரை அறியாத சிந்தனை
அனைத்தும் அருமை அண்ணா தாங்கள் கூறுவது போல் தான் இன்றைய உழவனின் நிலைமையும் கூட
ReplyDeleteஇனி வரும் காலங்களில் இந்த உழவு தொழிலை செய்ய கூட நம் நாட்டில் காலி விவசாய நிலங்கள் இருக்காது என்பது தான் மிகவும் வருந்த கூடியதாக இருக்கிறது.!
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சிறப்பாக சொல் அடுக்கி இருக்கிறீர்கள் !
ReplyDelete