தளிர் ஹைக்கூ கவிதைகள்! 19
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
குளத்தில்
கோலம் போட்டது
மழைத்துளி
முகத்தைத் திருப்பிக் கொண்டது
முழுநிலவு
அமாவாசை!
காசைக் கொடுத்து
சிறையில் தள்ளுகிறார்கள்
நர்சரி பிள்ளைகள்!
வீட்டுக்குள்
வீடு கட்டியது
குளவி!
அஸ்திவாரமில்லை
அந்தரத்தில் தொங்கியது
அழகான வீடு
தூக்கணாங்குருவி கூடு!
வயல் வெளியில்
வானூர்திகளின் சாகசம்!
தும்பிகள்!
சிதறிய முத்துக்கள்!
சிறைபடவில்லை!
மழை!
கடல் பூக்கள்
மீன்கள்!
வாடகை வீட்டில்
குடியேறியது நாகம்!
புற்று!
அடித்ததும் அழுது
சிரித்தது
தேங்காய்!
சத்தமிட்டே
நல்லபெயர் வாங்குகிறது
பல்லி!
முத்தமிட்டதில்
ஈரமானது பூமி!
மழை!
கான்கிரிட் வயல்களில்
காணாமல் போனது
பசுமை!
அணிவகுப்பில் கலவரம்
கலைந்தன
எறும்புகள்!
தங்கள்வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை... சிந்தனைகள் மேலும் பெருக வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுழு நிலவும், பல்லியும் உங்கள் ஹைக்கூவில் அருமை!
ReplyDelete