ஓல்டு ஜோக்ஸ் 8
ஓல்டு ஜோக்ஸ் 8
ஒரு பட்டுப்புடவை செலக்ட்
பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா?
ஒரு பெண்டாட்டியை செலக்ட்
பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
வெ. சீதாராமன்.
என்ன சார்! நீங்க கூட
பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து அழுவுறீங்க!
நல்லாப்பாருங்க! இது சீரியல் இல்லை! என் கல்யாண சி.டி
ஓடுது!
எஸ். எஸ். பூங்கதிர்.
உங்க கடை இட்லி மல்லிப்
பூ மாதிரி இருக்கு!
அவ்ளோ மெத்துன்னு
இருக்கா?
சைஸை சொன்னேன்!.. கொஞ்சம்
பெரிசா போட்டுத் தொலைங்க!
கே. அனந்தன்.
அன்பே நீ ஸ்டார் மாதிரி
இருக்கே!
அது இருக்கட்டும்! என்
வயித்துல “ஸ்டார் ப்ளஸ் வளருதே அதுக்கு ஒரு வழிச் சொல்லுங்க!
க. கலைவாணன்.
அடடா! என் வீட்டுக்காரர்
கிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்து வரச்சொல்ல மறந்துட்டேன்!
கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
கமுதி எஸ். சேதுராமன்.
கடவுள் உனக்கு காட்சி
தந்து இந்த செடியைக் கொடுத்துட்டு போனாரா.. ஏன்?
நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டாருன்னு
நினைக்கிறேன்!
சாயம் வெ.ராஜாராமன்.
நமது மன்னர் ஏன் சோகமாக
காட்சி தருகிறார்?
பி.ஏ படித்து பாஸ் ஆகிவிட்ட பின்னரும் அவரை எல்லோரும்
பன்னிரண்டாவது குலோத்துங்க சோழன் என்றே அழைக்கிறார்களாம்!
க. கலைவாணன்
புலவரே போருக்கு போய்விட்டு
வந்த மன்னரைப் பார்த்து வண்டலா, கரிசலா, சரளையா என்று நீங்கள் கேட்க களி என்று சொல்லிவிட்டு
போகிறாரே அதற்கு என்ன அர்த்தம்?
மன்னர் போரில் தோற்று கவ்விய மண் எந்த வகை என்று
நான் கேட்டேன், மண்ணை கவ்விய மன்னரும் களிமண் என்று கூறினார்.
க. கலைவாணன்.
தேரோட்டி இல்லாமலே குதிரைகளை
சரியான பாதையில் ஓடப் பழகியிருக்கிறேன் தளபதியாரே!
வடக்குப்பக்கம் போர்முரசு சத்தம் கேட்டதும் இவை
தெற்கு பக்கம் பாய்ந்தோடும் போதே புரிந்து கொண்டேன் மன்னா!
இளவை
ஜோகா.
உங்க நாய் ஏன் என்னை அமைதியா
பார்க்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு
அது காது பட சொல்லிட்டேன்!
அம்பை தேவா.
கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்!
தரைச்சக்கரம் சுத்தமாட்டேங்குது!
முதல்லே கண்ணாடியை மாட்டுங்க!
அது கொசுவர்த்தி சுருளு!
தஞ்சை தாமு.
தீபாவளிக்கு நீங்களே பலகாரம்
செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர் அதனாலே
என்ன?
அதிர்ச்சியான செய்தி எதுவும்
அவர்கிட்டே சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
எஸ்.எஸ் பூங்கதிர்.
மாப்பிள்ளைக்கு காது கேட்காதுங்கற
விஷயம் தலைதீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
எப்படி..?
இந்த வருஷம் தீபாவளிக்கு
ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
வி. சாரதி டேச்சு.
புலவரே! இவ்வளவு புகழ்ச்சிக்கு
நான் தகுதியானவன் இல்லை!
கொடுக்க காசு இல்லைங்கறதை
நாசூக்கா சொல்றீங்களா மன்னா!
வசந்தி வள்ளுவன்.
இது ரயில்வே வேலைக்கான
தேர்வுதானே சார்?
சரிதாம்ப்பா.. அதுக்காக இப்பவே ஒரு மணி நேரம் தாமதமா
வர்ற உன்னை பரிட்சை எழுத அனுமதிக்க முடியாது!
வசந்தி வள்ளுவன்.
மாப்ளே! நீங்க பிஸினஸ்
பண்ற இடம் ஏக்கரா கணக்குல இருக்குன்னு மேரேஜுக்கு முன்னே சொன்னீங்களே!
மாமா! இப்ப மட்டும் என்ன? பீச் ல சுண்டல் விக்கறேன்!
பீச் ஏகப்பட்ட ஏக்கரா இருக்குமே!
சென்னிமலை சி.பி. ராதாகிருஷ்ணன்.
கைக்கடிகாரத்தை திருப்பி
பார்த்து மணி சொல்றதுக்கு முந்நூறு ரூபா ஆகுமா?
ஆமா! சேட்டுக் கடையில முந்நூறு ரூபாவுக்கு அடகுல
இருக்கு, திருப்பினாத்தானே பார்க்கமுடியும்?
இலவை ஜோகா.
எங்க மாதர் சங்க தயிர்
கடையும் போட்டியில் எனக்குப் படு தோல்வி!
பட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
உ.ராஜாஜி.
என்ன டாக்டர் ஆபரேஷனை
பண்ணிட்டு இன்னும் தையல் போடாம போறீங்க?
அடப்பாவி! இன்னும் நீ உயிரோடத்தான் இருக்கியா?
அறந்தாங்கி. ஷக்தி ஷரவணன்.
நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளி
மலர் 2005
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments
Post a Comment