உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 7 இம்மி அளவு எவ்வளவு தெரியுமா?


உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 7

வணக்கம் வாசகர்களே ! சென்ற வாரம் சில சுவையான சிலேடைகளை பார்த்தோம்! தமிழ் அத்தனை சுவையானது. உங்களுக்கு ஒன்று இரண்டு எண்ணத்தெரியுமா? என்ன இப்படி கேட்கீறீர்கள் நான் கணக்கில் புலியாக்கும் என்று சொல்வீர்கள். அதுசரி அப்படி எத்தனை வரை எண்ணுவீர்கள் ?கோடிவரை எண்ணுவீர்கள் அதற்கு மேல் பத்து கோடி நூறுகோடி!
  ஏன் அதற்கு மேல் எண்கள் இல்லையா? அதை எப்படி எண்ணுவது ? ஆங்கிலத்தில் கூட மில்லியன் பில்லியன் டிரில்லியன் என்று எண்கள் உண்டு அதற்கு மேல் கிடையாது. ஆனால் அழகுத்தமிழில் அதற்கான எண்கள் உண்டு.
 ஆம் கோடி கோடியா சம்பாதிச்சான் என்று பேச்சுவழக்கில் சொல்வது உண்டு பல கோடி வரை தமிழில் அந்த எண்களுக்கு பெயர் உண்டு அதைத்தான் இப்போது பார்க்க போகிறோம்!
தமிழன் என்று சொல்லி காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்!

சரி கோடி வரை நமக்குத்தெரியும் அதாவது கோடி என்பது 1க்கு பின்னால் ஏழு பூஜ்யங்கள் அதாவது ஏழு சுழியங்கள். பூஜ்யத்தை சுழியம் என்று அழகுத் தமிழ் கூறுகிறது.
அப்புறம் தமிழின் எண்களை பாருங்கள்.
ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் – one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் – one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்

1  =ஒன்று

3/4  = முக்கால்

1/2  =அரை கால்

1/4  = கால்

1/5  = நாலுமா

3/16  = மூன்று வீசம்

3/20  = மூன்றுமா

1/8  =அரைக்கால்

1/10  = இருமா

1/16  = மாகாணி(வீசம்)

1/20  = ஒருமா

3/64  = முக்கால்வீசம்

3/80  =முக்காணி

1/32  = அரைவீசம்

1/40  = அரைமா

1/64  = கால் வீசம்

1/80  = காணி

3/320  =அரைக்காணி முந்திரி

1/160  = அரைக்காணி

1/320  = முந்திரி

1/102400  = கீழ்முந்திரி

1/2150400  = இம்மி

1/23654400  = மும்மி

1/165580800  = அணு

1/1490227200  = குணம்

1/7451136000  = பந்தம்

1/44706816000  =பாகம்

1/312947712000  = விந்தம்

1/5320111104000  = நாகவிந்தம்

1/74481555456000  = சிந்தை

1/489631109120000  = கதிர்முனை

1/9585244364800000  = குரல்வளைப்படி

1/575114661888000000  = வெள்ளம்

1/57511466188800000000  = நுண்மணல்

1/2323824530227200000000  = தேர்த்துகள்


  இதற்கே கண் கட்டுகிறது அல்லவா?  இவ்வளவு  எண்களை தமிழன் அன்றே அறிந்திருந்தான் என்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது! நாமும் அறிந்து கொள்ளுவோம்!

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் பல தமிழ் சொற்களுடன் வருகிறேன்! நன்றி!

நன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  

Comments

  1. பலரும் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... இன்னும் நிறைய பேர் அறிய வேண்டாமா...? அதனால் இதோ...

    பகிர்கிறேன்...

    ReplyDelete
  2. மகாயுக பாராட்டுக்கள் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2