புகைப்பட ஹைக்கூ 6


உயரத்தில் இருந்தாலும்
உயரவில்லை
வாழ்க்கைத்தரம்!

கழிகள் நடுவே
தள்ளாடுகிறது
கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கை!

 தலையில் சுமையிருந்தாலும்
தடம் மாறுவதில்லை
நாங்கள்!

கழிகள்
விழிகள் ஆயின
கழைக்கூத்தாடிக்கு!

காட்சிப் பொருளாய்
வாழ்க்கை!
கழைக்கூத்தாடிகள்!

நிலையில்லா மின்சாரமாய்
நீள்கிறது வாழ்க்கை!
கழைக்கூத்தாடிகள்!

கயிறில் ஏறினால்
நிறைகிறது
வயிறு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அனைத்து ஹைக்கூக்களும் அருமை அண்ணா

  ReplyDelete
 2. எதார்தமான வரிகளில் நிஜம்

  ReplyDelete
 3. யதார்த்த அழகாய் இருந்தது அனைத்தும். நன்று!

  ReplyDelete
 4. கயிறில் ஏறினால்
  நிறைகிறது
  வயிறு!//

  நிதர்சனமான உண்மை..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!