புகைப்பட ஹைக்கூ 13
விழுந்தும்
அடிபடவில்லை!
அருவி!
வெண் சடை
விரித்தது
அருவி!
கொட்டியதும்
மகிழ்ந்தார்கள்
அருவி!
சத்தம் போட்டு
குளிப்பாட்டியது
அருவி!
பாறைக்குத்
திரை விரித்தது
அருவி!
அருவியின் ஓசையில்
ஆசைகள்
சங்கமம்!
இயற்கை பிரவாகத்தில்
ஊற்றெடுத்தது
இன்பம்!
மலைக்காதலனை
தழுவியது
மழை அருவி!
ஓசைப்போட்டு
உயிரை விட்டது
அருவி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
வரிகளும் உற்சாகமூட்டியது...
ReplyDeleteஅந்த அருவி போலவே கொட்டியிருக்கிறது ஹைக்கூ!
ReplyDeletearumai!
ReplyDeleteazhaku..!