புகைப்பட ஹைக்கூ 12
புகைப்பட ஹைக்கூ 12
குருவிக்கு மட்டுமல்ல
குழந்தைக்கும்
கூடு தந்தது மரம்.
காற்றின் தாலாட்டில்
கண்ணயர்ந்தன
குழந்தைகள்
பிள்ளைப் பெற்றன
சாலையோர
மரங்கள்!
தொட்டில் ஆனது
தொழிற்சாலையோர
மரங்கள்!
பெற்றவள் சுமையை
இறக்கிவைத்தன
மரங்கள்!
சுமைகளை மட்டுமல்ல
சுகங்களையும் சுமந்தது
மரம்!
பாலூட்டாவிட்டாலும்
நிழலூட்டியது
மரம்!
தாயானது மரம்
தாலாட்டின
பறவைகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மரங்களின் பயன்கள்! நன்றாக இருந்தது.
ReplyDeleteமரமின் மாண்புகள் அருமை
ReplyDeleteHaiku Nice...
ReplyDeleteமுதலிரண்டு ஹைகூக்கள் அருமையோ அருமை....
ReplyDelete