புகைப்பட ஹைக்கூ 8
புகைப்பட ஹைக்கூ 8
குடும்ப பாரம்
சுமக்கிறாள்
தலைவி!
உடலெல்லாம்
பாரம்
ஆகவில்லை வியாபாரம்!
சுமை தூக்கி
சுமை
தவிர்க்கிறாள்!
வலி நிறைந்த
கண்கள்
வழி தேடுகின்றன!
தூக்கி நிற்பது
சுமையல்ல
குடும்பம்!
விடை தேடும்
கண்களில்
விரிந்து நிற்கிறது குடும்பம்!
நடமாடும் கடையல்ல!
திடமான தெளிவான
தாய்!
தங்கள் வருகைக்கு நன்றி
!பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
குடும்ப சுமை... சுகமான சுமை
ReplyDelete