புகைப்பட ஹைக்கூ 15


புகைப்பட ஹைக்கூ 15

வேண்டுதல் இன்றி
மொட்டைப் போட்டது
மரம்!
ஆடை கலைந்தது
வெட்கப்படவில்லை
மரம்!

முடி இழந்தும்
வருந்தவில்லை!
மரம்!

மண்ணுக்கு
உரமூட்டியது
இலையிழந்த மரம்!

இலையிழந்தாலும்
இளைக்கவில்லை!
மரம்!

நிழலைத்
தேடுகிறது
மரம்!

காற்றிடம்
களவு கொடுத்தது
மரம்!

கோடை வந்ததும்
உடை மாறின
மரங்கள்!

தழைகளை
தரைக்கு தாரை வார்த்தது
மரம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. மரத்தின் பயன்கள் எப்போதும் உண்டு...

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  2. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

    ReplyDelete
  3. //காற்றிடம்
    களவு கொடுத்தது
    மரம்!//
    அருமையான வரிகள்

    ReplyDelete
  4. அனைத்துக் கைக்கூகளும் அருமை அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?