பறக்கும் குதிரை!


பறக்கும் குதிரை!

 ராஜ துரோக குற்றச்சாட்டு சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவன் அரசன் முன் நிறுத்தப்பட்டான்.
   அவன் தன்னை மன்னர் விடுவித்தால் அவருடைய குதிரையை பறக்க வைப்பதாகக் கூறினான்.
  அரசருக்கு ஆச்சர்யம்! எப்படி குதிரை பறக்கும்? வீணாக புளுகாதே! என்று அதட்டினார்.
  அந்த கைதியோ பணிவுடன், மன்னா! குதிரைக்கு முறையாக பயிற்சி கொடுத்தால் ஒரு வருடத்தில் பறக்கும் எனக்கு அந்த வித்தை தெரியும் என்றான்.
   ஒரு வருடத்தில் குதிரை பறக்குமா?
 கண்டிப்பாக மன்னா!
  அப்படி பறக்க வில்லை என்றால் உன் மரணம் நிச்சயம்!
 குதிரை பறந்து விட்டால் எனக்கு விடுதலை அளிப்பது உறுதி அல்லவா? தைரியமாக கேட்டான் கைதி.
   கண்டிப்பாக குதிரை மட்டும் பறந்துவிட்டால் உனக்கு விடுதலை அளிப்பேன்!
 நன்றி மன்னா! இன்று முதல் நான் குதிரைக்கு பயிற்சி அளித்து இன்னும் ஒரு வருடத்தில் பறக்க வைக்கிறேன்!
  அரசன் ஒப்புக் கொண்டான்.
  கைதி விடுவிக்கப்பட்டு அவனிடம் அரசனின் குதிரை ஒப்படைக்கப்பட்டது. அதை பராமரித்து பயிற்சி அளிக்கத் துவங்கினான் கைதி.
   கைதியிம் பின்னர் யாரோ கேட்டார்கள். என்ன முட்டாள் தனம் செய்கிறாய்? குதிரை எங்காவது பறக்குமா? இது உன்னால் சாத்தியப்படுமா?
   கைதி சொன்னான்.
  ஒரு வருடம் இருக்கிறது! அதற்குள் அரசன் சாகலாம்! இல்லை நான் சாகலாம்! இல்லை இந்த குதிரை சாகலாம்! ஏன் இந்த ஒரு வருஷத்தில் அந்த குதிரை பறந்தாலும் பறக்கலாம் யார் கண்டது?
  கைதியின் சமயோசித புத்தியை நினைத்து வியந்தான் கேள்வி கேட்டவன்.

இந்த கதையை படித்ததும் நமது நீதித்துறைதான் நினைவுக்கு வந்தது. உடனே நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு என்று போக வேண்டாம். தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம். ஆனால்  இன்று குற்றம் செய்து மாட்டிக் கொண்டவர்கள் தான் அரசுக் கொட்டிலில் இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியவன் பதவி இழந்து அந்தஸ்து இழந்து பலவற்றையும் இழந்து சிறையில் இருக்க கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்தவர்கள் அரசை நடத்துகிறார்கள். இந்த நிலையில் தான் நமது நீதித் துறை  உள்ளது.
     சாத்தியம் இல்லாத ஒன்றுக்கு  அந்த மன்னன் குற்றவாளியை விடுவித்தானோ அதே போல்தான் இன்றும் குற்றவாளிகளை விடுவித்துக் கொண்டு இருக்கிறது நீதிமன்றங்கள்.
    காட்சிகள் மாறுகையில் ஆட்சிகள் மாறி அவர்களே கோலொச்சுகிறார்கள்!
வேதனையான விஷயம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி

Comments

 1. அஹ்ஹா சுரேஷ் அருமையான கதை. இன்றைய நிலைக்கு நல்ல பொருந்தும்.

  ReplyDelete
 2. ithellam oru padhivu..... padikkiravan neram sariellai vera enna!!!!!!!!

  ReplyDelete
 3. தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்.

  ReplyDelete
 4. நல்ல கருத்து ... பெரிய தவறு செய்தால் தன்டனை கம்மி , சின்ன தவறுக்கு பெரிய தண்டனை இதுதான் இந்திய சட்டம்

  ReplyDelete
 5. மிக சிறப்பான கருத்துள்ள பதிவு

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!