கசக்கும் தேனும் லவ் ஆப்பிளும்! பொது அறிவுத்தகவல்கள்!
கசக்கும் தேனும் லவ் ஆப்பிளும்!
பொது அறிவுத்தகவல்கள்!
திபெத் ஆறுகளில் யாரும்
மீன் பிடிப்பது கிடையாது. ஏனெனில் அங்கு மீன் தெய்வமாக மதிக்கப்படுகிறது.
பிரேசில் நாட்டுக் காடுகளில்
கிடைக்கக் கூடிய தேன் கசக்கும்.
மனித ரத்தத்தோடு ஒத்துப்
போகக் கூடிய ரத்தம் விலங்குகளில் குரங்குகளுக்கு மட்டுமே உண்டு.
இந்தியாவிலேயே பலவித வருவாய்
அதிகம் உள்ள நகரம் சண்டிகர்.
தக்காளிப் பழத்திற்கு முதலில்
வைக்கப்பட்ட பெயர் லவ் ஆப்பிள்.
கொழுப்புச் சத்து அதிகம்
இல்லாத ஒரே அசைவ உணவு மீன்.
கோபம் வரும்போது கைகள்
நடுங்கும். நரம்புகள் துடிப்பது இல்லை. தசை நார்கள்தான் துடிக்கும். கோபம் வரும்போது
அட்ரீனல் என்ற சுரப்பி அதிகம் சுரப்பதே இதற்கு காரணம்.
நம் உடலில் எலும்புகள்
அதிகம் உள்ள பகுதி கைகள், 27 வகை எலும்புகள்
உள்ளது.
பிரிட்டனை அதிக ஆண்டுகள்
ஆண்ட மனிதர் விக்டோரியா மகாராணி. 63 ஆண்டுகள் ஆண்டார்.
ஒரே இன்னிங்சில் 44 பவுண்டரிகள்
அடித்த முதல் கிரிக்கெட் வீரர் டான் பிராட்மென்.
நம் தமிழக அரசின் சின்னம்
கோபுரம். எந்த ஊர் கோபுரம் தெரியுமா? ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம். 1950 ல்
முதல்வராக இருந்த பி.எஸ் குமாரசாமி ராஜா இருந்தபோது சென்னை அரசின் சின்னமாக கோபுரத்தை
அறிவித்தார்.
ஒன்றுக்கொன்று முரணான இரண்டு
வாசனைகள் ஒரே சமயத்தில் வீசினால் அந்த இரண்டு வாசனைகளையும் மூக்கினால் அறிய முடியாது.
அவை ஒன்றையொன்று அமுக்கி ஒன்றுமே உணரச் செய்ய முடியாமல் செய்து விடும். நாற்றத்தைப்
போக்க வாசனை உபயோகிப்பது இதனால்தான்.
உலகின் நீளமான பாம்பு அனகோண்டா.
அதிக இலைகள் கொண்ட மரம்
ஓக்
மிகவும் பழமையான கண்டம்
மண் ஆராய்ச்சிப்படி ஆஸ்திரேலியா.
300 மில்லியன் ஆண்டுகளாக
எவ்வித உருவ மாற்றமும் இல்லாமல் வாழும் பெருமை கரப்பான் பூச்சியை சாரும். மனித இனம்
3 மில்லியன் ஆண்டுகளாகத்தான் வாழ்ந்து வருகிறது. அணு ஆயுதங்களால் கூட கரப்பான் பூச்சிகளை
முழுமையாக அழிக்க முடியாது. கரப்பான் நமது நண்பன். காசநோய். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை
நோய்களுக்கு ஹோமியோபதி மருந்து கரப்பான் மூலமாக தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனின் உயரமும்
அவனது நடுவிரலைப் போல 21 மடங்கு.
காகங்களால் தம்மிரு கண்களால்
ஒரே நேரத்தில் இரு வேறு காட்சிகளை காண முடியும்.
28 வருடங்களுக்கு ஒரு முறை
நாட்காட்டி ஒரே மாதிரியாக இருக்கும்.
கண்கள் இருந்தும் பார்வை
இல்லாத விலங்கினம் வவ்வால்.
உலகில் மக்கள் பயன் படுத்தும்
மிகப்பழமையான எழுத்து “0” கி.மு 1300 ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது.
சூரியன் அண்டார்டிகாவில்
மறையும் போது பச்சை நிறத்தில் மறையும்.
(பல்வேறு பொது அறிவு நூல்களில்
இருந்து தொகுப்பு)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி
அருமையான தகவல்கள்
ReplyDeleteநல்ல தகவல்கள் அருமை.வாழ்த்துக்கள்
ReplyDelete